“படம் எடுப்பது பிரச்சினை இல்லை. ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம்!” -தயாரிப்பாளர் கே.ராஜன்
கிராக் பிரைன் புரடக்ஸன் தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாட் ரீச்சபிள்’ (Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா பிரபலங்கள், படக்குழுவினர் முன்னிலையில் நடை பெற்றது.
அந்நிகழ்வில் “பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங்கை வெளி மாநிலங் களில் வைக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார் கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சினை இல்லை. அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். மக்கள் நல்ல படம் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை” என கே.ராஜன் பேசினார்.
இந்நிகழ்வினில்… இயக்குநர் சந்துரு முருகானந்தம் பேசியதாவது…
“இந்தத் திரைப்படத்தை முதலில் பைலட் பிலிமாக எடுத்தோம். அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது மேக்கிங் பற்றி தெரியவந்தது. அவர் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். இந்தத் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டை ஒரு விழாவாக எடுத்துச் செய்ததே பெரிய விஷயம். அதற்குத் தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் படத்தை முடிக்க எனது குழு தான் மிக முக்கிய காரணம். இப்படத்தின் இசையமைப்பாளருக்கு இது தான் முதல் படம். எதிர்காலத்தில் அவர் சிறந்த இசையமைப்பாளராக வருவார். கேமராமேன் மிகக் குறைந்த லைட்டை வைத்து அட்டகாசமாக நான் கேட்டதை எடுத்து தந்தார்.”
இசையமைப்பாளர் சரண்குமார் பேசியதாவது…
“எனது முதல் படத்திற்கு இப்படி ஒரு ஆடியோ லாஞ்ச் நடப்பது சந்தோசம், அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. முதலில் இந்தப் படத்திற்கு ஒரு பாடல்தான் இருந்தது, பின்னர் நாங்கள் கலந்துரையாடி படத்தை ரசிகர்களுடன் நெருக்கமாக கொண்டு போக மேலும் சில பாடல்களை இணைத்துள்ளோம். அதுபோக ஒரு பாடலை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளோம். அந்த பாடல் படத்தின் கதையை முழு தாய் கூறும்படி இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.”
நடிகர் விஷ்வா பேசியதாவது…
“இந்தப் படத்தின் இயக்குநர் மிகவும் திறமை வாய்ந்தவர், அவருடைய ஐடியாக் கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். இதில் நடித்துள்ள நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் மிகச்சிறப்பான பங்களிப்பு மூலம் படத்தை மெருகேற்றி யுள்ளனர்.”
நடிகை சுபா பேசியதாவது..
“இயக்குநர், இசையமைப்பாளருக்கு முதல் படம், ஆனால் படம் அப்படி இருக் காது. நேர்த்தியான ஒரு படமாக இருக்கும். நான் திரைத்துறைக்கு வந்த புதிதில் இருந்து, இப்போது வரை மக்கள் மனதில் எப்படியாவது பதிய வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து நிறைய சின்ன கதாபாத்திரங்களைக்கூட எடுத்து நடித்து வருகிறேன். ஒருநாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.”
நடிகர் கார்த்திக் பேசியது…
”படத்தின் டீசர், பாடல் நன்றாக இருந்தது. இந்த டீமிற்கு இது முதல் படம், எனது முதல் படமான ‘பீச்சாங்கை’ படத்திற்கு இங்குதான் பிரஸ் மீட் நடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு பதட்டம் இருக்கும் என எனக்குத் தெரியும். இப்படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்ப்பது மீடியா, உங்கள் கையில் இருக்கிறது. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு தந்தவர்கள் புது தயாரிப்பளர்கள். இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்.”
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது…
“திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன படத் தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள். ஆனால் வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்தேன். இப்போது படம் எடுப்பது பிரச்சினை இல்லை. அதை ரிலீஸ் செய்வதுதான் கஷ்டம். மக்கள் நல்ல படம் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழவைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள். சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. ‘நாட் ரீச்சபிள்’ மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன்.”