செஸ் ஒலிம்பியாட்டில் 2வது சுற்றில் 8 வயது பாலஸ்தீன சிறுமி வெற்றி!

 செஸ் ஒலிம்பியாட்டில் 2வது சுற்றில்  8 வயது பாலஸ்தீன சிறுமி வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ராண்டா சேடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 2100 வீரர்களில் இளம் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் ராண்டா சேடர். இவர் 2வது சுற்றில் 20 வயது வீராங்கனையை வீழ்த்தினார்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீன;g பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு, 6 ​​வயதுக்குட்பட்ட பிரிவில் உலகின் இரண்டா வது இடத்தில் இருக்கும் ராண்டா சேடார், தேசிய அணியில் இடம் பெற்றார். அவர் இதுவரை விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் ராண்டா சேடாரே இளைய போட்டியாளர்.

அவரது ஆர்வத்தின் காரணமாக, அவர் தற்போது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பாலஸ்தீன அணியின் மகளிர் அணியில் இடம்பிடித்துள்ளார். எட்டு வயதுதான் ஆனாலும், போட்டியாளர்கள் அவளைத் தோற்கடிக்கச் சிரமப்படுகிறார்கள். இரண்டாவது சுற்றுப் போட்டியில் கொமொரோஸின் அலி முகமது ஃபாஹிமா அவரது போட்டியாளராக இருந்தார். ராண்டா அவரை வெறும் 39 நகர்வுகளில் தோற்கடித்து ஆட்டத்தை வென்றார்.

ராண்டா சேடர் போர்ச் சூழல் நிறைந்த பாலஸ்தீன நாட்டில் ஹெப்ரோன் மாகா ணத்தைச் சேர்ந்தவர். உலகளவில் செஸ் விளையாட்டுக்கான தரவரிசையில் 6வது பிரிவில் 2ஆம் இடத்தில் உள்ளார். மேலும் அண்மையில் பாலஸ்தீனத்தில் நடந்த தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென் றுள்ளார். எட்டு வயதிலேயே செஸ் விளையாட்டில் உலக கவனத்தை ஈர்த்திருக் கிறார்.

உலகில் எந்நேரமும் வன்முறை அரங்கேறும் நகரம் பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய நகரான காசா (Gaza)தான். அங்கு எப்போதும் வெடிகுண்டு சப்தமும் மரண ஓலமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அந்தப் பாலஸ்தீன நாட்டில் பிறந்தவர் தான் ராண்டா சேடர்.

ராண்டாவின் குழந்தைப் பருவத்தில் வறுமையும் போர்ச் சூழலும் நிறைந்து அகதி கள் முகாமில்தான் இருந்துள்ளார். இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் அடிக்கடி சண்டை நடக்கும் ஹெப்ரான் நகரத்தில் இருக்கிறது இவரது வீடு. அடிக்கடி வீசப்படும் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளால், அதிக மாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் இவரது வீடும் ஒன்று.

இவரின் தந்தைதான் போர் சூழலில் தன் மகளுக்கு வீட்டுக்குள் விளையாட செஸ் ஆட்டத்தைக்  கற்றுத் தந்தார். அவளுடன் இருந்தவர்களில் ஒருவரின் கூற்றுப் படி, ராண்டா ஐந்து வயதிலிருந்தே தனது தந்தையிடம் சதுரங்க விளையாட்டைக் கற்றுக்கொண்டார். அவரது தந்தை ஒரு செஸ் பயிற்சியாளர், அவரது மூத்த சகோதரர் செஸ் மற்றும் FIDE மாஸ்டர்.

தனது நான்காவது வயதிலேயே செஸ் காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டார். அடுத்த ஆண்டிலேயே செஸ் விளையாட்டில் தேறிவிட்டார். ஆறு வயதிலேயே உள்ளூர் போட்டிகளில் விளையாடத் தொடங்கி தற்போது உலகளவில் விளை யாடிக்கொண்டு இருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன ஓபன் அணி சார்பாகப் பங்கேற் றுள்ளார் ராண்டா செடார். இந்த அணியில் அவருடன் இணைந்து இளம் வீராங்கனைகள் ஐந்து பேர் விளையாடுகின்றனர். ராண்டா செடர் தனது முதல் ஆட்டத்திலேயே 39 நகர்த்தலில் கொமோரோஸை சேர்ந்த ஃபஹிமா அலியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

ராண்டா இந்தப்போட்டிக்குத் தன்னைவிட வயது அதிகமான உறுப்பினர்களுடன் வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் 14 வயதுக்குட்பட்ட அரபு செஸ் சாம்பி யன், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது இமான் சவான், மற்றொரு இளம்பெண் 16 வயதான சாரா அல்மௌரி. இவர்கள் இந்தியாவுக்கு முதன்முறையாக வந்திருக்கிறார்கள்.

இந்த இளம் பாலஸ்தீனியப் பெண்கள் அணி உற்சாகமாக விளையாடிக்கொண் டிருக்கிறார்கள். இஸ்ரேலுடன் இடைவிடாமல் போரில் ஈடுபட்டு வரும் பாலஸ் தீனத்தில் பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் போட்டியில் பங்கேற்றதற் காகப் பாராட்டலாம்.

சமீபத்தில் மாமல்லபுரத்தில் ராண்டா சேடரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...