“கலப்படத்தை மக்களே கண்டறிந்து தடுக்கலாம்” -அலுவலர் சொல்லும் ஆலோசனை

உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே புற்று நோய், ஒவ்வாமை உள் ளிட்ட பல நோய்களுக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் நுகர் வோர் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பொதுவாக, காய்கறிகளில் பச்சை நிறமியைக் கலந்துவிடுகிறார்கள். இதனால் காய்கறிகள் வாடாமல் பச்சைப் பசேல் என இருக்கும். இதைச் சமைத்து உண்டால், பல நாட்களில் நோய் தாக்கத் தொடங்கும்.

பாலில் வாஷிங் பவுடரையும், நெய்யில் வனஸ்பதியையும் கலந்துவிடுகிறார் கள். கலப்படங்கள் எல்லாப் பொருள்களிலும் கலந்துவிடுகிறார்கள். போலி எது, நிஜம் எது என்று தெரியாத அளவில் நம்மை மயங்க வைத்துவிடும்.

குறிப்பாக மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கடுகு, பெருங்காயம், தேன், ஆப்பிள், கோதுமை மாவு, பச்சைப்பட்டாணியில் என அன்றாடப் பயன்படுத்தும் பொருட் களில் கலப்படம் செய்யும் கூட்டம் காலகாலமாகச் செய்துவருகிறார்கள். அவர் களைக் கண்டறிந்து கடைகளுக்கு சீல் வைத்தல், கைது நடவடிக்கை என உணவுப் பாதுகாப்புத் துறை செயலில் இறங்கினாலும் கலப்படம் செய்வோர் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் மக்களே கலப்படப் பொருட் களைக் கண்டறிந்து தடுப்பது எப்படி என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை யின் நியமன அலுவலர் டாக்டர் பி.சதீஷ்குமாரிடம் பேசினோம்.

“உணவில் கலப்படத்தை எளிதாகக் கண்டறியலாம். வெண்டைக்காயில் பச்சை நிற கெமிக்கலை சேர்ப்பார்கள். அதை நாம் கண்டுபிடிக்க வெண்டைக்காயின் மேல் ஒரு வெள்ளை நிற காட்டன் ஈரத்துணியோ, டிஸுவோ வைத்துத் துடைக்கவேண்டும். வெண்டைக்காயில் உள்ள பச்சை நிறம் துணியில் ஒட்டி யிருந்தால் கெமிக்கல் கலந்த காய் என்பதைக் கண்டுபிடித்து தவிர்க்கலாம். இதே மாதிரி பச்சை மிளகாய், பெரிய பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளில் மெலசெட் கிரீன் என்கிற டை கலரைக் கலப்பார்கள். அதனால் பீன்ஸ் கொட்டை நிறம் மாறாது, சீக்கிரம் வாடாது. அதே மாதிரி பட்டர் பீன்ஸிலேயும் கலரை சேர்ப் பார்கள்.

அடுத்து தேனில் சர்க்கரைப் பாகைக் கலப்பார்கள். அதை ஒரு சட்டியில் போட் டால் கரைந்து வந்துவிடும். அசல் தேன் அப்படியே இருக்கும். அதேமாதிரி பாலில் நுரைக்காக வாஷிங் பவுடர் கலப்பார்கள். இதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்றால் பொதுவாக பாலில் நுரை இருக்கும். அது கொஞ்ச நேரத்தில் பாலாக மாறிவிடும். ஆனால் வாஷிங் பவுடர் கலந்த பாலில் உள்ள நுரை அப்படியே இருக்கும். நெய்யிலும் நிறைய கலப்படம் இருக்கும். குறிப்பாக ஸ்டார்ச், வனஸ்பதி, பாமாயில் கலப்பார்கள். அதில் ஒரு சொட்டு கின்சர் அயோடினை  அதில்விட்டு கலந்தால் நெய் கறுப்பு நிறத்தில் மாறிவிடும். அதை வைத்துக் கண்டுபிடித்து விடலாம்.

இறைச்சியை ஆன்லைனில் வாங்கினால் எந்தக் கடையில் எப்போது வாங் கியது என்று தெரியாது. அதனால் இறைச்சியை நேரடியாகப் போய் தொட்டுப் பார்த்து வாங்குவதுதான் நல்லது. கறியில் நாற்றம் வரக்கூடாது, தண்ணீர் மாதிரி சலசலன்னு இருக்கக் கூடாது.  கறுப்பு நிறத்தில் எதுவும் இருக்கக் கூடாது. பொது வாக பிரீஸரில் கறியை வைக்கக்கூடாது. பிரிஜ்ஜில் வைத்து மூன்று மணி நேரத்திற்குள் சமைத்துவிடவேண்டும். அதேபோல் சமைத்த உணவைத் திரும்ப பிரிஜ்ஜில் வைத்து திரும்ப சூடு செய்து சாப்பிடக்கூடாது. திரும்பத் திரும்ப சூடு செய்ய அந்தக் கறியிலுள்ள புரோட்டீன் உடைந்து உடலில் எதிர்மறை விளைவு களை ஏற்படுத்திவிடும்.

மீன்கள் ரொம்ப நேரம் கெடாமல் இருக்க பார்மலின் என்கிற கெமிக்கலைப் போடுவார்கள். சின்னச் சின்ன மீன்களில் பார்மலின் ரொம்ப கலக்கமாட்டார்கள். பெரிய மீன்களைப் பிடித்து கரைக்கு எடுத்துவர பத்துப் பதினைந்து நாட்கள் ஆகிவிடும். அதில்தான் பார்மலின் கலந்துவிடுவார்கள்.

குறிப்பாக, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களிலிருந்து சென்னைக்கு ரயில்களில் வரும் அப்போதும் மீனில் பார்மலின் கலந்துவிடுவார்கள். இதைக் கண்டறிய எளிய வழி, எந்த மீன்களில் ஈக்கள் உட்காரவில்லையே அந்த மீன்களில் பார்மலின் கெமிக்கல் பயன்படுத்தவில்லை என்று கண்டறியலாம். அதிகம் கெட்டுப் போன மீன்களிலும் ஈக்கள் உட்காரும் அதையும் பார்க்க வேண்டும்.

மீனில் செதில்கள் ரொம்ப வெள்ளையாக இருந்தாலும் ரொம்ப கலராக இருந் தாலும் அதன் கண்கள் கலங்கியிருந்தாலும் கெட்டுபோன் மீன் என்பதை அறிய லாம். மீனைக் கையில் எடுத்தால் கொலகொலவென்றிருந்தால் கெட்டுப் போன மீன் என்பதை அறியலாம்.

சமைக்காத உணவுகளை இப்படிக் கண்டறியலாம். சமைத்த உணவுகளை நம்பகத்தன்மையுள்ள ஓட்டல், கடைகளில் உண்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். கலப்பட உணவுப்பொருட்கள் உள்ளது எனக் கண்டறிந்தால் உடனே 9444042322 என்ற இந்த எண்ணுக்கு வாட்ஸப் மூலமாக, வாய்ஸ் மூல மாக, டைப் செய்து, அந்தக் கடையை மற்றும் உணவுப் பொருட்களை போட்டோ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். புகார் அளித்தவருக்கு புகார் எண் கொடுத்து 42 மணி நேரத்திற்குள் அந்த இடத்தைப் பரிசோதித்து சம்பந்தப்பட்டவருக்குப் பதில் அனுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!