தீபாவளி திருநாளும் பாதுகாப்பும்
தீபாவளி திருநாளும் பாதுகாப்பும்
தீபாவளி வருகிறது என்றாலே வீட்டில் உள்ள சிறியவர்கள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் தீபாவளி திருவிழாவை எப்படி கொண்டாடுவது என பல பலத்திட்டங்களை மனதில் எண்ணுவார்கள்.பெண்கள் எந்த வகை உடை வாங்குவது அந்த உடைக்கேற்ற எந்த அணிகலன்கள் அணிவது பெண்கள் அதுமட்டுமில்லாமல் கைகளிலும் பாதங்களிலும் மருதாணி இடுவது.
வீட்டில் இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்வது என தீபாவளிக்கு முன்னரே வீடு குதுகலமாக இருக்கும் சிறியவர்கள் தீபாவளி வரும் முன்னரே வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் சந்தோஷப்படுவர்.தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து சுடுநீரில் குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளி திருவிழா நாளை அமோகமாக ஆரம்பிப்பார்கள்.
காலை காலையில் ஆட்டுக்கால் பாயா உடன் சிற்றுண்டி ஒன்று விட்டு தொலைக்காட்சியில் வரும் சாலமன் பாப்பையா மற்றும் ராஜா அவர்களின் பட்டிமன்றம் பார்ப்பது மிக சுவாரஸ்யம்m தீபாவளி இரவு நெருங்கும் பொழுதில் வானில் விண்மீன்கள் ஜொலிப்பது போன்று வீட்டில் ஏற்றிவிட்ட விளக்கு ஒலியும் வண்ண மத்தாப்பு.
மத்தாப்பு ஒளியும். வான் நட்சத்திர ஒளி களும் போட்டி போட்டு கொண்டது போல வானில் விண் மீன்கள் உள்ளதா அல்லது தரையில் இறங்கி விட்டனவா என ஐயம் ஏற்படும் வண்ணம் தீபாவளி இரவு ஒளி வெள்ளத்தில் மூழ்கிவிடும் l
தீபாவளியை இந்த தலைமுறையினர் மட்டுமில்லாமல் நாளைய தலைமுறையினரும் கொண்டாட வேண்டுமானால் நாம் தீபாவளி அ ன்று உபயோகப்படுத்தப்படும் பட்டாசு பொருட்களுக்கு அதிக மாசு உண்டு என்பதை அறிந்து மாசு படாத வண்ணம் தயாரிக்கப்பட வேண்டும்n ஏனென்றால் பட்டாசு வெடித்தவுடன் வெளிப்படும் கந்தகப் புகையால் சுவாசக் கோளாறு மூச்சுத்திணறல் போன்ற நோய்களால் சிறியவர்கள் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அவதி பட்டு வருகின்றனர்.மேலும் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டும் உயரும் என விஞ்ஞானிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையும் தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் புகையும் வானில் உள்ள வாயுக்களை சேதப்படுத்தி நமக்கு சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை மாசுபட வைத்திருக்கிறது ஆதலால் நாம் வெடிக்கும் பட்டாசு அதிகம் மாசு வெளிப்படுத்தாத வண்ணம் உபயோகப்படுத்துவது சாலச் சிறந்ததாகும்.
வெடிகள் வெடிக்கும் போது மத்தாப்பு மற்றும் புஸ்வானம் போன்றவற்றை கொளுத்தும் போதும் அருகில் வாளியில் நீர் வைத்துக் கொள்வது மிக நன்று.மத்தாப்பு கொளுத்தி முடித்ததும் அதன் மீதி கம்பியை வாளியி ல் போட்டு விட வேண்டும்.ஏதாவது தீக்காயம் ஏற்பட்டாலோ அல்லது தீ பற்றி சூழ்நிலை ஏற்பட்டாலோ வாளியி ல் உள்ள நீரை உபயோகப்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.பட்டாசு வெடிக்கும் போது முகக் கவசம் அணிவது நன்று. தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மட்டும் இல்லாமல் நமது மற்றும் அருகில் உள்ளோரின் பாதுகாப்பிற்கும் எந்த வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் கொண்டாடுவது அறிவுள்ளோரின் செயலாகும்.
திவண்யா பிரபாகரன்