தீபாவளி கொண்டாட்டம் பற்றி நமது சில வாசகர்கள்

 தீபாவளி கொண்டாட்டம் பற்றி நமது சில வாசகர்கள்

தீபாவளி அன்று எனது அப்பா என்னையும் என் தம்பியையும் அதிகாலையிலேயே எழுப்பி தலையில் எண்ணெய் தேய்த்து விட்டு நல்ல சூடான தண்ணீரில் குளிக்க சொல்லுவார். பிறகு புத்தாடை உடுத்தி வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகளை குறிப்பாக சரங்களை வெடித்து தெருவில் நாங்க தான் கெத்து அலப்பறை பண்ணுவோம் காலை எனது அம்மா சமைத்த ஆட்டுக்கால் பாயாவுடன் ஆப்பம் அல்லது கல் தோசை வைத்து சாப்பிட்டால் நாக்குல தண்ணி ஊரும் மேலும் மேலும் என்று கேட்கும் தீபாவளி முழு நாளும் மிகவும் சந்தோஷமாக ஆரவாரமாக இனிப்பாக நடந்து முடியும்.

தீபாவளி அன்னைக்கு புதுசா ரிலீஸ் ஆன ஏதாவது ஒரு படத்துக்கு ஃபர்ஸ்ட்நாள்ல ஃப்ரெண்ட்ஸோட போயிட்டு வீட்டுக்கு வந்தது அம்மா சமைத்த உணவு உண்டு விட்டு வெடிகள் வெடித்து தெருவையே அதிரி புதிரி ஆக்குவோம்

தீபாவளிக்கு முந்தினமே எனது கம்பெனியில் தீபாவளி செலிப்ரேஷன் நடக்கும் அன்னைக்கு ட்ரடிஷனல் அணிந்து கொண்டு அனைவரும் பங்களிப்போம்.அன்று அலுவலக பணி குறைவாகவே இருக்கும்.அனைவரும் ஒன்றாக உணவும் இனிப்பும் உண்போம்.மாலை 6 மணிக்கு மேல் வேலை முடியும் தருணத்தில் பட்டாசுகள் வெடித்தும் மத்தாப்புகள் கொளுத்தியும் மகிழ்ச்சியாக இருப்போம். தீபாவளியன்றும் வீட்டிலும் வெடி வெடிப்பதும் மத்தாப்பு கொளுத்தும் ஆக மொத்தத்துல கண்ணா லட்டு தின்ன ஆசையா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று டயலாக் போல தீபாவளிக்கு முந்தினமும் தீபாவளி அன்றும் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...