ஆடிப்பெருக்கு வழிபாடும் தாலிப்பெருக்கு வேண்டுதலும்

 ஆடிப்பெருக்கு வழிபாடும் தாலிப்பெருக்கு வேண்டுதலும்

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு வழிபாடு செய்யப்படு கிறது. பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக்கரைகள், ஏரி, குளங் களில் அனைவரும் ஒன்றுகூடி நீர் தேவதையை பிரார்த்தித்துக்கொண்டு ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு பூஜை செய்வார்கள். தென் மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை பூஜை செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவர்.

உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார் கள். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் அவர் கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா ஜீவ நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் வந்தது.

புது வெள்ளம் பெருகுவதால், ஆடிப் பெருக்கு என முன்னோர்கள் இந்த தினத்தை மிகவும் கோலாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். இந்த நாள்தான் ஆடிப் பெருக்கு. இந்த நாளில், சூரியனிடமிருந்து ஒருவித சக்தி வெளியாகிறது.

மக்கள் ஆடிப் பதினெட்டாம் நாள் கோவில்களுக்குச் சென்று நதிக்கரை களில் நீராடுவர். பெண்கள் தங்கள் தாலிக் கயிறை மாற்றி புதிய தாலிக் கயிறு அணிவதுண்டு. அதன்படி, வரும் ஆகஸ்ட் 3 புதன்கிழமை ஆடி 18ஆம் பெருக்கு அன்று காவிரிக் கரையோரங்களில் இந்த விழா களைகட்டும்.

ஏனெனில், ஆடி 18 அன்று மங்களத்தின் அடையாளமாக விசேஷமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்கள், தாலி என்றழைக்கப்படும் மஞ்சள் கயிற்றை கணவர் கையால் மாற்றுகின் றனர். இந்த நாட்களில் தாலி பெருக்கிப் போடும்போது, நீண்ட நாட்கள் பெண் கள் மஞ்சள், குங்குமம், பூவும் பொட்டோடும்  வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக் கும். அதிலும் ஆடிப்பெருக்கன்று இதனைச் செய்வது சிறப்பு. ஆடிப் பெருக் கன்று புதியதாகத் திருமணம் ஆன தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு.

அதேபோன்று, திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும், தங்களுக்கு நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டிக் கொள்வர். அவ்வாறு செய்வ தன் மூலமாக அவர்களுக்கு அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நிச்சய மாகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. ஆடி 18 அன்று சப்தகன்னி யரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றில் குளிக்க சாமி தரிசனம் செய்ய திடீர் தடை விதித்திருக்கிறது காவல்துறை.

நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் காவல்துறை மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆடி 18 பண்டிகையை முன் னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்குத் தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற் றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா வின்போது  ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சுமங்கலிப் பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணி யும் வழக்கம் உள்ளது.

இதனிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழ சிராமணி, மாரப்பம் பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பாளையம் பரிசல்துறை, வடகரை யாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோரப் பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பாக தண்டோரா மூலமும் மற்றும் ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கைப் பலகைகள் அமைத்தும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன், காவல் ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீசார் காவிரி ஆற்றின் நுழைவு வாயி லில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...