‘பொய்க்கால் குதிரை’ படத்தில் அசத்திய பிரபுதேவா

 ‘பொய்க்கால் குதிரை’ படத்தில் அசத்திய பிரபுதேவா

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர் நடனப் புயல் பிரபுதேவா. இவர் கால்தடம் பதித்த அனைத்துத் துறைகளிலும் கலக்கினார். தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக ரிஸ்க் எடுத்து ஒற்றைக் காலுடன் ‘பொய்க்கால் குதிரை’ என்ற திரைப்படத்தில் பிரபுதேவா நடித்திருக் கிறார்.

‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் மூலம் நடிகராக வும் அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரித்து வரும் இப்படத்தில் இரு ஹீரோயின்கள். ஒரு ஹீரோயினாக வரலட்சுமியும், இன்னொரு ஹீரோயின் ரைசா வில்சன்.  ஆக்ஸன் என்டெர்டெய்னர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. போஸ்டரில் பிரபுதேவா ஒரு காலில் நின்றுகொண்டு கொடூர பார்வையில் தோன்றுகிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.

டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபு தேவா பல நூறு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றினார். ‘இந்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயக னாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு ஒரு நடிகருக்கான அறிமுகம் கிடைத் தது. இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இவர் கதாநாயக னாக நடித்த ‘காதலன்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவரானார்.

அதன் பிறகு ஒரு தெலுங்குப் படத்தை இயக்கி இயக்குநராகவும் மாறினார். தமிழில் இவர் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய ‘போக்கிரி’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குநராக அசத்தியவர், கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ‘ராதே’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ‘மை டியர் பூதம்’ திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது இவர் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ‘பொய்க்கால் குதிரை’ இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள் ளது. அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டி.

படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

“இந்தப் படத்தில் நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் சதீஷ், என் சகோதர ருடன் நடினமாடி இருக்கிறார். அந்த உற்சாகமான நடனத்தைக் கண்டு ரசித்தேன். இந்தப் படத்தில் ஒற்றைக்காலுடன் நடனமாட வேண்டியதிருந்தது. சதீஷ் இதனை நன்றாக வடிவமைத்திருந்தார். இந்தப் படத்தில் மிகவும் கஷ்டப் பட்டு, கடுமையாக உழைத்து நடித்திருக்கிறேன். ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மதன் கார்க்கியுடன் இணைந்து பணியாற்றிருக்கிறன். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் கார்க்கியே எழுதியிருக்கிறார். சில காட்சி களைப் படப்பிடிப்பு தளத்தில் பார்வையிடுவோம். சில காட்சிகளைப் பின்னணி பேசும்போது பார்வையிடுவோம். இந்தப் படத்தின் பின்னணி இசைக்குப் பிறகு, படத்தைப் பார்க்கும்போது நான் நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். இதற்குக் காரணம் இசையமைப்பாளர் டி. இமானின் பின்னணி இசைதான்.

ஒற்றைக்காலுடன் சண்டைக் காட்சிகளில் நடித்தது எப்படி?

சண்டைப்பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி, ஒவ்வொரு காட்சியையும் எளிதாக வும், விரைவாகவும், நேர்த்தியாகவும் படமாக்கினார். சில படங்களில் பாடல் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கும். சில படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்கும். இதற்காகப் படத்தொகுப்பாளர் ப்ரீத்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என்றார் பிரபு தேவா.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...