அறிவியல் துறையில் அசத்தும் பெண் பேராசிரியர் தெய்வசாந்தி
ஆராய்ச்சிகளில் அதீத ஈடுபாடு கொண்டவர் பேராசிரியை தி.தெய்வசாந்தி. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று 19 வருடப் பேராசிரியர் பணிக்குப் பிறகு கடந்த எட்டு வருடமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கண்டறிந்த லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டி மத்திய அரசு விருதும் 15 லட்சம் ரூபாயும் அளித்துள்ளது.
ராஜபாளையம் சத்திரப்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் பேராசிரியர் தெய்வ சாந்தி. இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் வாகனம் மற்றும் அலைபேசி போன்ற உபகரணங்களுக்கு லித்தியம் சல்பர் பேட்டரி உதவியாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு அறிவித்தார். அவருக்கு அதற் கான அங்கீகார மாகத்தான் மேற்கண்ட தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
தெய்வசாந்தியின் கண்டுபிடிப்புகள் : தாவரப் பொருட்களில் சூப்பர் பாரா மேக்னடி ஸம், உலகின் மிகச் சிறிய வைரஸ்களுக்கு எதிரான நிலவேம்பு (ஆன்ரோகி ராபிஸ் பனிகுலேட்டா) தாவர நானோ துகள்கள், விவசாய நானோ உயிர் உரங்கள், குறைந்த விலை கிராஃபின், கொரோனா வைரஸ்களுக்கு எதிரான குறைந்த விலை நெகடிவ் அயன் ஜெனரேட்டர் போன்றவை ஆகும்.
நானோ தொழில்நுட்பம் தொடர்பாக 2015, 2016 & 2017 மூன்று வருடங்களில் நான்கு முறை லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதுடன் 2018ல் உலகத்தர மதிப்பாய்வாளர் விருதும் பெற்றிருக்கிறார்.
பேராசிரியை தி.தெய்வசாந்தியுடன் பேசினோம் “தற்போதைய காலகட்டத்தில் ஆராய்ச்சியானது, குறிப்பிட்ட துறை சார்ந்ததாக இல்லாமல் பல துறைகளுடன் தொடர்புடையதாக மாறிவிட்டது.
நான் பல அறிவியல் மாநாடுகளில் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டுள் ளேன். மலேசியா மற்றும் இலங்கை முழுவதும் இதுவரை 225க்கும் மேற்பட்ட அறிவியல் மாநாடுகளில் விரிவுரை ஆற்றியுள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பேசியிருக்கிறேன். பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவ் முன்னிலையில் நான் விரிவுரை ஆற்றியதை வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன்.
சமீபத்தில் லித்தியம் சல்பர் பேட்டரி தொடர்பான எனது ஆராய்ச்சிப் பணிகளுக் காகவும், ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவும் இந்திய அரசு எனது திட்ட அறிக்கையைத் தேர்வு செய்து 15 லட்சம் ரூபாய் வரை நிதயுதவி செய்கிறது.
மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படு கிறது. மேலும், சில ஆராய்ச்சிப் பணிகளுக்காக, இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனது இலக்கு, லட்சியம் அனைத்தும் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கான உயரிய விருதான நோபல் பரிசு பெற வேண்டும் என்பதுதான்” என்றார்.