ரஜினிக்கு 100 சதவிகிதம் நிம்மதி கிடைக்க சிறந்த வழி

 ரஜினிக்கு 100 சதவிகிதம் நிம்மதி கிடைக்க சிறந்த வழி

தமிழ் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆன்மிகத்தில் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மிகப் பயணங்களை மேற்கொண்டு வருபவர். 70 வயதை தாண்டிய நிலையிலும், இன்னும் கதாநாயகனாக நடித்து பல நூறு கோடிகளைச் சம்பளமாகப் பெற்று நாயகிகளுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் கவர்ந் தது, அதாவது “வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங் களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷத் தில் பத்து சதவிகிதம்கூட இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை” என்றிருக் கிறார்.

சமூகத்தில் லஞ்சம் எனும் அசுத்தம் நிறைந்துள்ளது அதைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசியலில் குதித்தவர் சுமார் மூன்றாண்டுகளுக்குப் பிறகு யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்தில் ‘கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகர வாழ்வு’ என்ற தலைப்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க புத்தகத்தை  நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு பேசும்போது, “இந்த உலகத்தை விட்டு செல்லும் போது சொத்தை சேர்த்து வைத்துவிட்டு செல்வதைவிட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல் லாமல் பல தத்துவங்களை உதிர்த்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் பேச்சுக் களை பின்னால் தருகிறேன். தற்போது ரஜினி தமிழ் சமூகத்தில் கடந்த வந்த பாதையின் ஞாபகங்கள் கண்முன்னால் நிழலாடுகின்றன. அதை முதலில் பார்ப் போம்.

சமீபத்தில் தனி நபர் வரி செலுத்துதல் பிரிவில், அதிகளவு வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்துக்கு  தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விருது வழங்கினார். நடிகர் ரஜினிகாந்த் சார்பில், அவருடைய மகள் ஐஸ்வர்யா விருதை பெற்றார்.  தனக்கு 10 சதவிகிதம்கூட நிம்மதியில்லை என்ற ரஜினிதான் தனிநபராக அதிக வரி செலுத்தியிருக்கிறார்.

2017 ஆகஸ்ட் மாதம்  கிண்டி ரேஸ் கோர்ஸில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தலைமையில் ஆஸ்ரம் என்கிற பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளி செயல்பட்டு வரும் கட்டடத்திற்கு லதா ரஜினிகாந்த் பல மாதங்கள் வாடகை பாக்கி ரூ. 2 கோடி கொடுக்காததால் அதன் உரிமையாளர் வெங்கடேஸ் வரலு நுழைவாயிலை பூட்டினார். அதன்பிறகு நீதிமன்றம் வெங்கடேஷ்வரலு வுக்கு நீதிமன்றம் 2 கோடி தர லதா ரஜினிகாந்துக்கு உத்தரவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடிகர் ரஜினி உண்ணாவிரதம் இருந் தார். பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, ‘நதிநீர் இணைப்பு திட்டத் துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என அறிவித்தார். ஆனால், 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் ரஜினி அந்த நிதியைத் தரவில்லை. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் ரஜினி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஜூன் 2016ஆம் ஆண்டு தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது ஞாபகத்திற்கு வருகிறது.

2018 மே மாதம் தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்காக அங்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது, “எதற்கெடுத் தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும். தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது. காவல் துறையினரைத் தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது.

ரஜினியின் கருத்து குறித்துப் பேசிய அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார், “அந்த மக்கள் 100 நாட்கள் போராடியபோது நடிகர் ரஜினி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மக்கள் தீரமாகப் போராடி படுகொலைக்கு ஆளாகியிருக்கும்போது, என் முகத்தைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றெல்லாம் அவர் பேசியது அறிவுக்குப் பொருந்தாதது. ரஜினிகாந்த், உரிமைகளுக்கு எதிரானவர்; உரிமைப் போராட்டங்களுக்கு எதிரானவர். அதிகாரவர்க்கத்தின் கையாள். எதற்கெடுத் தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது முட்டாள்தனமாக கருத்து. மக்கள் வேறுவேலையில்லாமல் போராடவில்லை. அவர்கள் வருங்காலம் கேள் விக்குள்ளாகும்போதுதான் போராடுகிறார்கள். அப்படிப் போராடுவதன் மூலம் தான் மக்கள் வாழமுடியும் என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றதும் ஞாபகத்திற்கு வருகிறது.

2020 ஏப்ரல் மாதத்தில் கொரோனா காரணமாக கடைகளும் மண்டபங்களும் மூடி இருந்ததால் வருமானம் இல்லாமலும், கடைக்கு வாடகை கொடுக்க முடியாம லும் மக்கள் அவதிப்பட்டார்கள். இந்நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த், சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனக்குச் சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்ட பத்துக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு சர்ச்சையானது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என்பதையே அரசியலாக்கிய ரஜினியின் தந்திரம் ஞாபகத்திற்கு வருகிறது.

2020 ஜூலை மாதம் தன்னுடைய அரசியல் அறிவிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல   என்ற ஹேஷ்டாக்குடன் ‘ஜனவரியில் கட்சித் தொடக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அதேபோல் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும், தலைமை ஒருங்கிணைப்பாளராக (பா.ஜ.க. கட்சியில் இருந்த) அர்ஜுண மூர்த்தி யும் நியமிக்கப்பட்டனர். கட்சிப் பணிகளுக்கு முன்னதாக அண்ணாத்த பட ஷூட் டிங்கை முடித்துக் கொடுப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷூட்டிங்கிற்குக் கிளம்பினார்.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படக்குழுவைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோ தனை முடிவு நெகட்டிவ் என்றே வந்தபோதும், ரத்த அழுத்த மாறுபாடு காரண மாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

2020ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் 27ம் தேதி டிஸ்சார்ஜ் ஆனார். அப்போது கொரோனா தொற்று ஏற்படுவது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கவும், ஓய்வு எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து டிசம்பர் 29ம் தேதி 3 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்ட ரஜினி, “என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என வருத்தப்பட்டார்.

அதன் பின்னர் பல மாதங்கள் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் பங்கேற்றார். ஷூட்டிங் முடிந்த கையோடு வழக்கமான உடல பரிசோதனைக்காக கடந்த மாதம் 19ம் தேதி தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சில நாட்கள் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் கடந்த 9ம் தேதி சென்னை திரும்பினார். 

இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ‘மீண்டும் அரசியலில் ரஜினி’ என்ற பேச்சுக்களும் எழுந்தது. அதனை அடுத்து சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், தன்னுடைய மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், இனி அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அந்த அதிர்ச்சியில் இருந்து ரஜினி ரசிகர்கள் மீள்வதற்குள் ரஜினி பற்றிய அடுத்த அப்டேட் கசிந்துள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஜின மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டதாகவும் அங்கு 4 நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியானது.

ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தயாராகிவரும் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

ஒருவருக்கு நிம்மதி உதவி கொடுப்பதால்தான் இரட்டிப்பாகும். அதனை வள்ளுவர், “நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.” பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது என்கிறார் திருவள்ளுவர்.

தாய் பால் தரும்போது குழந்தை பசியாறுவதைவிட தாய் பால் ஈணுவதே பேரின்பம். இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த் மேற்கூரையில்லாமல் மழையால் புல் முளைத்திருக்கும் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க சொந்த செலவில் கூரை அமைத்துத் தரட்டும். அந்த விவசாயிகளின் மகிழ்ச்சியால் அவரது 10 சதவிகித மகிழ்ச்சி 100 சதவிகிதமாக மாறும்.

இனி அவரது தத்துவப் பேச்சுகளைப் பார்ப்போம்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கிரியா யோகா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அதன்பின்னர் தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்க வில்லை. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும், எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது ராகவேந்திரா, பாபா படங்கள்தான். இந்த இரு படங்கள் வந்த பின்னர் தான் அனைவருக்கும் இவர்கள் இருவரையும் தெரிய வந்தது.

எனக்கு மிகவும் சந்தோஷமாக விஷயம், என் ரசிகர்கள் இருவர் சன்னியாசியாக மாறியுள்ளனர். ஆனால் நான் இன்னும் நடிகராக இருக்கிறேன். இமயமலை இயற்கையாகவே அமைந்துள்ள குகைகள் சொர்க்கம் போல் காட்சியளிக்கும். குகைகளில் சில மூலிகைகள் கிடைக்கும். அதனை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கான புத்துணர்ச்சி அதிகமாக கிடைக்கும். கங்கை நதி ஏன் புனிதம் என்றால், மூலிகைகள் எல்லாம் அதில் கலக்கும். அதுமட்டுமல்ல, அங்கே உள்ள சித்தர்கள் குளிப்பதால் பவித்ரமாக இருக்கிறது.

உடல்நிலையை பாதுக்காக்க வேண்டும், உணவு சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவயதில் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காப்பை விடவும், வயது முதிர்ந்த பின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சொத்துகளை விட்டுச் செல்வதைவிடவும், நோயாளியாக இருந்திடக் கூடாது. இது அனைவருக்கும் துன்பம்.

அதேபோல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல உபதேசங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.  வாழ்க்கையில் பணம், பேர், புகழ் எல்லாவற்றையும் கடந்து நிம்மதியாக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் சித்தர்களிடம் உள்ள நிம்மதி, சந்தோஷம் 10 சதவிகிதம் கூட இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

‘அறிவு’ என்பது ‘புத்தி’, ‘சிந்தனை’, ‘நீ யார்?’ ‘எங்கிருந்து வந்தாய்?’, ‘ஜாதி’ என்று எல்லாவற்றையும் சேர்த்ததுதான் என்று பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவர் பணம், புகழ், பெயர், பெரும் பெரும் அரசியல்வாதிகளை சந்தித்த வன் நான். ஆனால், 10 சதவிகிதம் கூட எனக்கு நிம்மிதியோ சந்தோஷமோ இல்லை. ஏனென்றால் சந்தோஷமும் நிம்மதியும் நிரந்தமானவை அல்ல,” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...