எல்லா நோய்களுக்குமான மூலிகைகள்

 எல்லா நோய்களுக்குமான மூலிகைகள்

மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மையான மருத்துவக் குணங்கள் கொண்டவை. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக் கப்பட்டதோ, அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்து களும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் தாவரங்களில் உள்ள குணாதிசயங்கள் மட்டுமல் லாமல், சில குறிப்பிட்ட கால நேரங்களில் கிரக நிலைக்கேற்ப இந்தத் தாவரங் களில் பொதிந்து விலகும் ‘எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தி’களும் மிக முக்கிய பண்பாகக் கருதப்படுகிறது. ஆகவே இந்தத் தாவரங்களை மருத்துவத்திற்காகச் சேகரிக்கும் காலங்களும், சேகரிப்பவரின் உடல் சுத்தம், உள்ளச் சுத்தம், சேகரிக் கும்போதும் மருந்து தயாரிக்கும்போது உச்சரிக்க வேண்டியவை முதலியவற் றைத் தேர்ந்த வல்லுநரிடமே அறிந்துகொள்ள வேண்டும்.

பல மூலிகைகளில் உள்ள நற்பயன்களைப் பெறும் முன்பு, அதில் உள்ள எதிர்த் தன்மைகளை நீக்கவேண்டும். அப்போதுதான் அந்த நற்பயன்களைத் தேவையான அளவில் நேரடியாகப் பெறமுடியும். உதாரணமாக, மிளகை நாம் சாதாரணமாக உணவில் பயன்படுத்துகிறோம். ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தும் முன்பு அதில் உள்ள எதிர்த்தன்மைகளை (மருத்துவக் கூற்றுப் படி – நச்சுத் தன்மைகளை) நீக்க மிளகை புளித்த மோரில் 3 மணி நேரம் ஊற வைத்து உலர்த்த வேண்டும்.

மூலிகைகள் சாதாரணமாக பக்கவிளைவுகள் இல்லாதவை. மேலும் பல மூலிகை களை நாம் தினசரி உணவிலும் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவ முறைகளில் உபயோகிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய பல நுணுக்கங்கள் இருப்பதால், மூலிகைகளின் முழுப்பயனை அடைய தேர்ந்த வல்லுநரின் வழி காட்டலின்படி நடப்பதே சிறந்தது.

பிரதாபசிம்மன் என்பவரால் இயற்றப்பட்டு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தால் 2018ல் பதிப்பிக்கப்பட்டது ‘அருந்தமிழ் மருத்துவம் 500’.

நம் நாட்டு தமிழ் மூலிகைகளின் மகத்துவமும் அதனால் தீர்க்கப்படும் நோய் களைப் பற்றியும் வரும் இந்தப் பாடல் அதிசயம், ஆச்சரியம், உண்மையின் விளக்கம். படியுங்கள், கடைப்பிடியுங்கள்.

மூளைக்கு வல்லாரை

முடிவளர நீலிநெல்லி

ஈளைக்கு முசுமுசுக்கை

எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்

பசிக்குசீ ரகமிஞ்சி

கல்லீரலுக்கு கரிசாலை

காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை

காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்

நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்

மூட்டுக்கு முடக்கறுத்தான்

அகத்திற்கு மருதம்பட்டை

அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணெய்

உணர்ச்சிக்கு நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை

களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை

வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு தாமரைப்பூ

சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்

காய்ச்சலுக்கு நிலவேம்பு

விக்கலுக்கு மயிலிறகு

வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

நீரிழிவிற்கு ஆவாரைக் குடிநீர்

வேர்க்குருவிற்கு பனை நுங்கு

வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணெய்

சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதி கழிச்சலுக்கு துத்திதேற்றான்

குருதி கக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்

கழிச்சலுக்கு தயிர்சுண்டை

அக்கிக்கு வெண்பூசனை

ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி

விதைநோயா கழற்சிவிதை

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

கரும்படை வெட்பாலை

சிரட்டை கால்சொறிக்கு வெங்காரபனிநீர்

கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு

உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்

அன்றாடம் சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

அறிந்தவரை உரைத்தேனே!

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...