பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

 பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

புவி  கண்காணிப்பு செயற்கைக்கோளைச் சுமந்தபடி  பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது.

விண்வெளித் துறையின் (DOS) கார்ப்பரேட் பிரிவான NSIL, சிங்கப்பூருடனான ஒப்பந்தத்தின் கீழ், வணிகப்பணியாக அந்நாட்டைச் சேர்ந்த செயற்கைகோள் களையும் விண்ணில் ஏவியுள்ளது.

மூன்று செயற்கை கோள்களும் பூமத்திய ரேகையில் இருந்து அளவிடப்பட்ட 570 கிலோ மீட்டர் உயரத்தில் லோ எர்த் ஆர்பிட்டில் (LEO) நிலை நிறுத்தப்படவுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக ராக்கெட் ஏவுவதை பார்க்க பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், இன்று ஸ்ரீஹரிக்கோட் டாவில் ராக்கெட் ஏவுவதை காண 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட் டுள்ளது. அதே போல, சிங்கப்பூரில் இருந்து செயற்கைக்கோள் ஏவுவதை காண, 20 விஞ்ஞானிகள், 40 மாணவர்கள் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கு வந்துள்ளனர்.

பிஎஸ்எல்வி சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று செயற்கைக்கோள்களை சுமந்து சென் றுள்ளது. டிஎஸ்- இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் (DS-EO) செயற்கைக்கோள் மற்றும் சிங்கப்பூரின் முதல் சிறிய வணிக செயற்கைக்கோளான SAR பேலோட் ஆகியவை விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ். எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.  இந்த ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்களில் 3 செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இந்த ஏவுதலில் முதன் மைச் செயற்கைக்கோளான டி.எஸ்.-இ.ஓ. 365 கிலோ எடை கொண்டது. இது ஒரே நேரத்தில் பல்வேறு கோணங்களில் பூமியை வண்ணப்படம் எடுக்கும் திறன் உடையது. மேலும், பேரிடர் மீட்புக்குத் தேவையான மனித வளங்களைக் கண்டறி யும் பணிகளையும் மேற்கொள்ளும்.

சிங்கப்பூர் நாட்டின் வணிக ரீதியான 3 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி- 53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் 3 செயற்கைக் கோள்கள் ஜூன் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என  அறிவித்தது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி. 53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று30-6-2022 மாலை 6 மணி 2 நிமிடத் தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பூமியிலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடம் 10 வினாடிகளில் 570 கி.மீ தூரத்தில் முதன்மை செயற்கைக்கோளான டி.எஸ்.-இ.ஓ. செயற்கைக்கோள் திட்டமிட்ட அதன் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நியூசர் செயற்கைக்கோள் 19 நிமிடம் 20 வினாடிகளிலும், ஸ்கூப் 1 செயற்கைக்கோள் 19 நிமிடம் 22 வினாடிகளில் அடுத்தடுத்து அதன் இலக்கில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண் ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் சக விஞ்ஞானிகளு டன் கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டார். டி.எஸ்.-இ.ஓ. செயற்கைக் கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை வண்ண படம் எடுக்கும் வசதி கொண்டது. இது பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள் ளும். இதேபோல், நியூசர் செயற்கைகோள் பல்வேறு காலநிலைகளில் பூமியைத் துல்லியமாகப் படம் எடுக்கவும், ஸ்கூப் 1 செயற்கைகோள் கல்வி பயன்பாட்டிற் கும் உதவும். இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும்.

செயற்கைகோள்கள் எவ்வாறு செயல்படும்?

PSLV ராக்கெட்டில் உள்ள இறுதி பகுதியான பிஎஸ் 4-யைப் பயன்படுத்தி ஆர்பி ட்டல் எக்ஸ்பிரிமென்டல் மாட்யூல் (POEM) என்ற சோதனை நடத்தப்பட உள்ளது. PS4-யை நிலையான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர், அது சில அறிவியல் சோதனைகளை மேற்கொள்ள உள்ளது. PS4 பூமியை ஒரு நிலைப் படுத்தப்பட்ட தளமாகச் சுற்றி வருவது இதுவே முதல் முறை.

செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்ட பிறகு, அது ஒரு பிரத்யேக NGC அமைப் பைப் பயன்படுத்தும். இந்த அமைப்பிற்கான ஆற்றல் PS4 டேங்கை சுற்றி பொருத் தப்பட்ட சோலார் பேனல்கள் மற்றும் லி-அயன் பேட்டரி மூலமாகவும் மற்றும் நான்கு சோலார் சென்சார்கள், காந்தமானி, கைரோஸ் & NavIC ஆகியவற்றின் மூலம் வழிநடத்தப்படும். இது ஹீலியம் வாயு சேமிப்பகத்தைப் பயன்படுத்தி பிரத்யேக கட்டுப்பாட்டு உந்துதல்களைக் கொண்டுள்ளது. மேலும் மேம்படுத்தப் பட்ட தொலைதொடர்பும் உள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...