120 புதிய பாடகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி.இமான்
தமிழ் சினிமாவின் நம்பிக்கை இசையமைப்பாளர்களில் ஒருவர் டி. இமான். மெகா பட்ஜெட் படமோ, மினிமம் பட்ஜெட் படமோ எதுவாக இருந்தாலும் இவரது பாடல்களாலேயே அந்தப் படத்திற்குத் தனி அந்தஸ்து கிடைத்து விடும். அதே மாதிரி சூப்பர் ஹீரோ, புதுமுக நடிகர் என்ற பாகுபாடில்லாமல் இவரது இசைப் பணி தொடர்கிறது. அதனால்தானோ என்னவோ குறுகிய காலத்தில் 100 படங்க ளுக்குமேல் இசையமைத்ததோடு அதிக அளவிலான புதிய பாடகர்களை அறிமு கப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இமான் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலா கல்லூரியில் படித்தார். விஜய் நடித்த ‘தமிழன்‘ படத்தின் மூலம் 2001 ஆண்டு முதல் தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுக மானார். ஆரம்பக்கட்டத்தில் அவர் இசையமைத்த சில படங்கள் சரியாகப் போகவில்லை. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘விசில்’ படத்திற்குப் பிறகு இமான் சிறந்த இசை யமைப்பாளராகப் பரவலாக அறிமுகமானார். அவரது இசைப் பயணத்தில் ‘கும்கி’ பெரிய பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதன் பிறகு இமான் தொட்ட படங்கள் எல்லாமே ஹிட். மண் மணம் மாறாமல் அவர் கொடுக்கும் ஒவ்வொரு பாடல்களும் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன. ‘மைனா’, ‘வெள்ளக்கார துரை’ என பல மாஸ் ஹிட் ஆல்பங்களை வழங்கி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக அவர் இடம்பிடித்தார். இந்நிலையில் அவர் ’டிக்டிக்டிக்’ படத்தோடு தனது 100வது படத்தை நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களுக்கும் இசை யமைத்துள்ளார்.
பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து இமான் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் வெளியான ‘கண்ணான கண்ணே’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் வந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த வெற்றி களுக்குக் கிடைத்த வாய்ப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்திற்கு இசையமைத்து வெற்றி பெற்றார்.
இவரது இசையில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளி யாகியது. இவரது இசையில் கேப்டன், யுத்த சத்தம், பொய்க்கால் குதிரை, மை டியர் பூதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இசையமைப்பாளராக மட்டு மின்றி பாடகராகவும் இமான் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். ‘விஸ் வாசம்’ படத்திற்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார்.
‘பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக தனது இசை பணியைத் தொடங்கி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்து பிறகு இசை யமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர் களிடம் பணியாற்றி, சுமார் 250க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசை யமைத்திருக்கிறார். இவர் போட்ட ஜிங்கில்ஸ் மாப்பிள்ளை வாரான்… மாப் பிள்ளை வாரான்… மாடு வண்டியிலே’ ‘ராம்ராஜ் காட்டன்..’ போன்ற விளம்பரப் பாடல்கள் பிரபலமானது.
இரண்டாவது திருமணம்
2008ம் ஆண்டு இசையமைப்பாளர் டி.இமான், மோனிகா ரிச்சர்ட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இரு குழந்தைகளுக்குப் பெற்றோரான இந்த தம்பதி கடந்தாண்டு இறுதியில் விவகாரத்து செய்தனர். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இமான் மற்றும் மோனிகா ரிச்சர்ட் தம்பதி விவகாரத்து அப்போது திரைப் பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்திற்குப் பிறகு டி. இமான் எமிலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எனவும் கூறப் படுகிறது. இவர்களுக்கு பல திரைபிரபலங்கள் தற்போது இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய பாடகர்கள் அறிமுகம்
இமானின் இருபது வருட இசைப் பயணத்தில் தனி இடத்தை உருவாக்கிய தோடு நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடிச் சென்று அந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட புதிய குரல்களை இவரது இசையில் மூலம் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
“எனது மிகப் பெரிய பலம் பாடலாசிரியர் யுகபாரதிதான். நான் இதுவரை 120 புதிய குரல்களை எனது இசையில் அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்களில் 80 சதவிகி தத்திற்கும் மேல் தமிழர்கள்” என்று இமான் கூறுகிறார். இந்திப் பாடகி ஸ்ரேயா கோஷலுடன் பணியாற்றியது குறித்துப் பேசிய இமான், “நான் எப்போது வேண்டு மானாலும் தொடர்புகொண்டு பாட அழைக்கும் பாடகி அவர். நேர நெருக்கடி இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கித் தருவார்” என்று தெரிவித்தார்.
இருபது வருட இசைப் பயணத்தில் தனக்கு என தனி இடத்தை உருவாக்கியது மட்டும் அல்ல இமானின் சாதனை. நல்ல குரல் எங்கு இருந்தாலும் தேடிச் சென்று அந்தக் கலைஞர்களுக்கான அங்கீகாரத்தையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட புதிய குரல்களைத் தனது இசையில் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் களில் 80 சதவிகிதத்திற்கும் மேல் தமிழர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொச்சிப்பட்டியைச் சேர்ந்த கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பார்த்து அவரைக் கூட்டி வந்து சீறு, அண்ணாத்தே படத்தில் பட வைத்தார் இமான். வைக்கம் விஜயலட்சுமியை ‘என்னமோ ஏதோ’ படத்தில் புதிய உலகை ஆளப் போகிறேன் என்ற பாடல் மூலம் தமிழில் முதலில் பட வைத்தார்.
வேடந்தாங்கல் கிராமத்தில் புத்தர் கலை குழுவில் பறை இசைத்து கிராமியப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த நாட்டுப்புறப் பாடகரான மகிழினி தமிழ் மாறனை கும்கி படத்தின் கையளவு நெஞ்சத்துல பாடல் மூலம் திரைக்கு அறிமுகப்படுத் தினார்.
வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன் பாடல் மூலம் ஹரி ஹர சுதனை அறிமுகப்படுத்தினார். நாட்டுப்புறப் பாடகரான செந்தில் கணேஷை சீமாராஜா படத்தில் பயன்படுத்தினார்.
இப்படி திறமையானவர்களை அடையாளப்படுத்தும் இமானின் பட்டியலில் தற்போது புதிதாக சேர்த்து இருப்பவர் ஸ்வஸ்திகா சுவாமிநாதன். இது குறித்து இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “வளர்ந்து வரும் பாடகரான ஸ்வஸ்திகா சுவாமிநாதனின் ஆத்மார்த்தமான குரலில் யுகபாரதி வரிகளில் உருவாகி உள்ள ‘அணையா விளக்கு’ பாடலைத்தான் இசையில் விரைவில் வெளியாக இருக்கும் ‘பப்ளிக்’ திரைப்படத்தில் கேட்க ஆவலுடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.