அரசுப் பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்தது ஏன்?

 அரசுப் பள்ளியில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்தது ஏன்?

தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இந்தாண்டு மார்ச்சில் நடந்தன. இந்தத் தேர்வின் முடிவுகள், இந்த மாதம், 20, 27ம் தேதிகளில் வெளியிடப்பட்டன.

தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விவரப்படி, அரசுப் பள்ளிகளைப் பின்னுக்குத் தள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சியும் பெற் றுள்ளனர். இதனால், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறாமல் இடைநிற்றலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்காக, தமிழக அரசின் பட்ஜெட்டில், ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிச் செலவிடுகிறது. மூன்றரை லட்சம் ஆசிரியர்கள், அரசிடம் ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர். அலுவலகப் பணியாளர்களும், ஆய்வக உதவியாளர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், இவர்களுக்கெல்லாம் தலைமையாகப் பள்ளிக் கல்வி அமைச்சர் என மிகப்பெரிய நிர்வாக முறை செயல்படுகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என, சிறிய நிர்வாக முறையே உள்ளது. இந்த சிறிய நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிகத் தேர்ச்சியும் பெறுகின்றனர். ஆனால், மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர் கள், குறைந்த மதிப்பெண் பெறுவது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய் துள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்தும், மாணவர்களின் மதிப்பெண்கள் சரிந்தது குறித்தும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளின் பட்டியலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்க,முதன்மைக் கல்வி அலுவலர் கள் உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப் பட்டன. தேர்வில் 8.43 லட்சம் பேர் பங்கேற்றதில், 83 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற வில்லை; 41 ஆயிரத்து 376 பேர் தேர்விற்கு வரவில்லை. எனவே, 1.24 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாத பட்டியலில் உள்ளனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...