ஒற்றைக்காலில் நின்றால் ஐம்பது வயதுக்குமேல் நலமாக வாழலாம்

 ஒற்றைக்காலில் நின்றால் ஐம்பது வயதுக்குமேல் நலமாக வாழலாம்

பழங்காலத்தில் ஞானிகளும் தவ யோகிகளும் காடுகளில் மலைகளில் நீர்நிலை களில் கடும் தவமிருப்பதை நூல்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் தவங்களில் ஒன்று ஒற்றைக்காலில் தவமிருப்பது.

அவர்கள் ஏன் அப்படி ஒற்றைக்காலில் தவமிருந்தார்கள் என்பதன் உண்மைப் பொருள் இப்போது தெரியவருகிறது. அதாவது ஞானிகளும் தவ யோகிகளும் நீண்டநேரம் தவமிருப்பதும் பிரம்மச்சரியம் இருப்பதும் கடவுளை எந்நேரமும் மனக்கண்முன் தியானித்திருப்பது தன் வாழ்நாளை நீடிப்பதற்குத்தான். தன் மனதையும் உடலையும் வளப்படுத்தி ஆண்டவனை அடைவதும் மக்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கி அவர்களை நல்வழிப்படுத்துவதும்தான். திருமூலர் கூட 

‘உடல் வளர்த்தேன் உயர் வளர்த்தேனே’ என்று பாடினார்.

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்று பாடினார்.

அதாவது நீண்ட நாள் நோய்நொடியில்லாமல் வாழ ஒற்றைக்காலில் தவமிருப் பது உடலுக்கு நல்லது வயோதிகக் காலத்தில் பலத்தைக்கொடுக்கும் என்தற்காக ஒற்றைக்காலில் தவமிருந்திருக்கின்றனர்.

தற்போதைய ஒரு ஆய்வில் அந்த உண்மை நிரூபணம் ஆகியிருக்கிறது. இது ஞானிகளுக்கும் தவயோகிகளுக்கும் மட்டுமல்ல, குடியானவர்களுக்கும் பொருந் தும். உடல் ஆரோக்கியத்தைப் பேண 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒற்றை காலில் நீண்ட நேரம் நின்றால் அதிக காலம் உயிர் வாழலாம் என்று கண்டறிந் திருக்கிறது.

ஒற்றைக்காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதின ருக்கு 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஸ்போர்ட்ஸ் மெடிசன்’ என்ற பத்திரிகை உடல்நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.  அதில் தினமும் ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சி செய்வோரின் கால்கள் வலுவாக இருக்கும் என்பதால், அவர்கள் சுலபமாகக் கீழே விழுந்து மரணம் அடைய அதிக வாய்ப்பில்லை. உலகளவில் ஆண்டுக்கு, 6.80 லட்சம் பேர் கால் வலுவின்றி வழுக்கி விழுந்து மரணம் அடைகின்றனர் என்கிறது.

பிரேசிலில், 50 வயதினரின் உடல் திடகாத்திரம் குறித்து, 1,702 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை, பிரேசில், அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்டனர். இதில் பங்கேற்றவர்களிடம், கைகளை மேலே துாக்கி, ஒரு காலை மடக்கி இடது கால்முட்டியில் வைத்து, 10 வினாடிகள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஐந்தில் ஒருவர் நிற்கமுடியாமல் போனது தெரிய வந்தது. “இத்தகையோர் கால் வலுவின்றி வழுக்கி விழும் அபாயம் உள்ளது. வலுவற்ற கால்கள் காரணமாக அவர்கள் அடுத்த, 10 ஆண்டுகளில் தடுக்கி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது” என்கிறது அந்த ஆய்வு.

நம் ஊரிலும் வயதான காலத்தில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவங்களை நிறைய பார்த்திருக்கிறோம் கேட்டிருக்கிறோம். அதாவது பாத்ரூமில் தவறி விழு வார்கள். தரையிலும் வழுக்கிவிழுவார்கள். காரணம் கால்கள் பலமில்லாததே. அதனா லஇப்போதே ஒற்றைக்காலில் நின்று பழகுங்கள். இறைவனுக்காக தவமிருக்கவில்லை என்றாலும் நம் உடல் பலம் காக்க ஒற்றைக்காலில் நின்று பழகுங்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...