இந்திய ஜனாதிபதியாகவிருக்கும் திரௌபதி  முர்மு யார்?

 இந்திய ஜனாதிபதியாகவிருக்கும் திரௌபதி  முர்மு யார்?

இந்தியா குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. திரெளபதி முர்மு, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற சிறப்பு கிடைக்கும். தவிர, ஒடிசாவில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுவார்.

திரௌபதி முர்மு பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா வுக்கு 17 கட்சிகள்தான் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோமனி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப் பதில் தாமதம் காட்டுகின்றன. அப்படியே கொடுத்தாலும் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.

தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், பா.ம.க., ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திரௌபதி முர்முதான் வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு எவ்வளவு வாக்குகள் தேவை?

தற்போதுள்ள நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 394 வாக்குகள் பதிவாக இருக்கின்றன.

மக்களவையில் 3 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளும், மாநிலங்களவையில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 600 வாக்குகளும், சட்டமன்ற உறுப்பினர்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 794 வாக்குகள் பதிவாக இருக்கின்றன.

கட்சிகளின் வாக்கு பலம் எவ்வளவு?

பா.ஜ.க. கூட்டணியில் மக்களவையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 800 வாக்கு களும், மாநிலங்களவையில் 70 2800 வாக்குகளும் சட்டமன்றத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 668 வாக்குகள் என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 768 வாக்குகள் உள்ளன. வாக்கு சதவிகித அடிப்படையில் இது 48.66 % ஆகும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மக்க ளவையில் 77 ஆயிரம் வாக்குகளும் மாநிலங்களவையில் 37 ஆயிரத்து 100 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 990 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 90 வாக்குகள் உள்ளது. இது 24.19 % ஆகும்.

பிற கட்சிகளுக்கு மக்களவையில் 67 ஆயிரத்து 200 வாக்குகள், மாநிலங்களவை யில் 49 ஆயிரத்து 700 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 136 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 36 வாக்குகள் உள்ளன. இது மொத்தம் 27.15 % ஆகும்.

திரௌபதி முர்மு யார்?

திரெளபதிமுர்முவுக்குத் தற்போது 64 வயதாகிறது.பிறந்தது ஜூன் 20, 1958.  ஒடிசா வின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

இந்திய நாட்டின் வளர்ச்சியடையாத மாவட்டத்தில் பிறந்த திரெளபதியின் குழந் தைப் பருவம், வறுமையுடன் எதிர்நீச்சல் போட்டதாகவே இருந்திருக்கிறது.

புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில், கலைப்பிரிவில் இளங் கலைப் பட்டம் பெற்றவர், ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவர்கணவர் பெயர் ஷ்யாம் சரண் முர்மு. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

திரெளபதி கணவரையும் இரண்டு ஆண் குழந்தைகளையும் விபத்து மற்றும் நோய் காரணமாக அடுத்தடுத்து இழந்தவர், ஒற்றை மகளை ஆசிரியப்பணியின் சொற்ப வருமானத்தில் போராடி வளர்த்தார். ஒடிசாவின் நீர்ப்பாசனத் துறையில், கிளார்க்காகப் பணிபுரிந்தார்.

1997-ல் கவுன்சிலராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த திரெளபதி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இருமுறை எம்.எல்.ஏ.வானார்.

2000-ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தபோது வர்த்தகம், போக்கு வரத்து, மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் பொறுப்புகளை வகித்தார்.

2007-ம் ஆண்டு, ஒரு எம்.எல்.ஏ-வாக சமுதாயத்துக்கு இவர் செய்த முன்மாதிரி சேவைகளுக்காக, ஒடிசா சட்டமன்றம் இவருக்கு ‘பண்டிட் நீலகண்டா விருது’ வழங்கிக் கௌரவித்தது.

2015-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராகப் பதவியேற்றார்.

தற்போது பா.ஜ.கட்சிப் பதவியையும், உறுப்பினர் பதவியையும் துறந்து ஜனாதி பதி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். வாழ்த்துவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...