5ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிரவைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா.
இந்த மாணவருக்குச் சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேசத் தமிழ்ப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.
த. சந்தோஷ் கண்ணா இளம் வயதில் கார் பற்றிய பல விஷயங்களையும் மிகவும் துல்லியமாக்க கூறியதால் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற் கெனவே ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், அசிஸ்ட் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ், தி சென் அகாடமியின் பாராட்டுச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற்றவர்.
மாணவர் சந்தோஷ் கண்ணாவுக்கு ஆயிரவைசிய சபை மற்றும் கல்வி நிறுவனங் களின் தலைவரும், முன்னாள் சேர்மனுமான ராசி என். போஸ் அறிவுறுத்தலின் படி தாளாளர் பி. ராஜேஷ் கண்ணா, பொருளாளர் பி. பிரசன்னா உள்ளிட்டோர் இன்னும் பல பட்டங்களைப் பெற வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித் தனர். அப்போது பள்ளியின் முதல்வர் ஜெயபிரமிளா, துணை முதல்வர் பவானி, மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாணவரின் தந்தை தண்டாயுதபாணி காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி யில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்ற மாணவர் என்ற பெருமையை த. சந்தோஷ் கண்ணா பெறுகிறார்.
டாக்டர் பட்டம் பெற்ற சந்தோஷ் கண்ணாவிற்குப் பள்ளி ஆசிரியர்கள், சக மாண வர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் என பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துக்களைத் தெரிவிக்க : 94423 20020