ஒரு விஞ்ஞானியின் வரலாறு பேசும் உண்மை
விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ எனற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அவரது 25 வயதில் இருந்து 70 வயது வரையிலான வாழ்க்கை இந்தப் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது. நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். மூன்று விதமான லுக்கில் அவர் படத்தின் தோன்றுவார். நடிகரும் இந்திப் பட இயக்குனருமான ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். இவர், தமிழில் கமலின் விஸ்வரூபம் 2, பாபநாசம் படங்களில் நடித்துள்ளார். இந்தி, மலையாளம், தமிழ் மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.
யார் இந்த நம்பி நாராயணன்?
1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். நடுத்தரக் குடும்பத்தில் ஐந்து பெண் குழந்தைகளுக்கு அடுத்து பிறந்த முதலாவது ஆண் குழந்தை நம்பி நாராயணன். அவருடைய தந்தை கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் நார் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய தாய் இல்லத்தரசி.
நம்பி நன்கு படிப்பவராக இருந்தார். பள்ளி இறுதி வகுப்பில் முதல் மாணவராகத் தேறினார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்த அவர், இஸ்ரோ வில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப் பொருட்களை எரிபொருளாகக் கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்தபோது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வாயுக்களை திரவமாக்கி அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தும் கிரயோஜெ னிக் தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணன் பணியாற்றினார். திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்த நம்பி நாராயணன் முதல் திரவ உந்து மோட்டாரை 1970களின் தொடக்கத்தில் உருவாக்கினார்.
இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு அதிகாரி களுக்கு வழங்கியதாக நம்பி நாராயணன் மீது புகார் எழுந்தது.
1994ல் மாலைத்தீவுகள் உளவு அதிகாரிகளுக்கு முக்கிய பாதுகாப்பு இரகசியங் களை வழங்கியதாக வழக்குப் பதியப்பட்டது. 11 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அடுத்த சில மாதங்களில், அவருடைய கண்ணியம், புகழ் எல்லாமே தரைமட்ட மாகிவிட்டன. அவர் இந்தியாவின் ரகசியம் காக்கும் சட்ட விதிகளை மீறிவிட் டார், ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்றெல்லாம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவரை விசாரித்தவர்கள் அவரைத் தாக்கியதுடன், படுக்கையுடன் சேர்த்து கைவிலங்கு போட்டும் வைத்திருந்தனர். 30 மணி நேரத்துக்கும் மேலாக அவரை நிற்க வைத்து கேள்விகள் கேட்டனர். உட்கார அனுமதிக்கவில்லை. உண்மை கண்டறியும் கருவி மூலமும் அவரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்தக் கருவியின் முடிவுகளை ஆதாரங்களாக இந்திய நீதிமன்றங்கள் ஏற்பதில்லை என்றாலும் அந்தச் சோதனை நடத்தப்பட்டது.
போலீஸ் காவலில் நாராயணன் 50 நாட்கள் இருந்தார் – ஒரு மாத காலம் சிறை யில் இருந்ததும் அதில் அடங்கும். அவர் எப்போது நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், மக்கள் அங்கே கூடி அவரை உளவாளி, தேச துரோகி என்று கோஷமிடுவது வழக்கமாகிவிட்டது. அவர் கைது செய்யப்பட்ட ஒரு மாதம் கழித்து, கேரள புலனாய்வுத் துறையிடம் இருந்து மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) இந்த விசாரணையை எடுத்துக் கொண்டது.
நம்பி நாராயணன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்திய பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சி.பி.ஐ. தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது.
பின்னர் மீண்டும் விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து பணிகளைச் செய்துவந் தார். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் நம்பி நாராயணன் பாதிக்கப்பட்டுள்ள தாக 1999 செப்டம்பரில் மனித உரிமைகள் ஆணையம் மூலம் கேரளம் அரசிடம் கோரப்பட்டு 2001ல் ஐம்பது லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. 2001ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். நம்பி நாராயணனுக்கு கூடுதலாக ரூபாய் 1.30 கோடி இழப்பீடு வழங்க 27 டிசம்பர் 2019 அன்று கேரள அரசு முடிவு செய்துள்ளது
நம்பி நாராயணன் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதற்கு கேரளாவின் 10 போலீஸ் அதிகாரிகளே காரணம் எனவும் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இத்தேசத்திற்கு தம் அறிவு பயன்பட வேண்டுமென்று உழைத்த ஒரு விஞ்ஞா னியை, தவறான கேரள அரசின் முடிவால் கைது செய்யப்பட்டு எவ்வளவு கொடுமைகள் இழக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழும் காலத்திலேயே நடந்த அவலம் இது. இவர் வாழ்க்கை வரலாற்றைத்தான் தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது.
பதிவு செய்யப்படவேண்டிய வாழ்க்கை வரலாறுதான். முன்வந்த மாதவனுக்கு வாழ்த்துக்கள்