வழக்கிலிருந்து விடுவியுங்கள் –இலங்கைத் தமிழர்கள் கதறல்

இலங்கையிலிருந்து முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமலும் காலா வதியான பாஸ்போர்ட் மூலமும் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு வந்தவர் களை திருச்சி முகாமில் தமிழக அரசு வைத்திருக்கிறது. அவர்கள் மேல் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கை விரைவாக முடித்து எங்களை சிறைக்கு அனுப்புங்கள். அல்லது வழக்கிலிருந்து விடுவித்து அனுப்புங்கள். எங்கள் சொந்தங்களை நாங்கள் பார்க்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து கடந்த 25 நாட்களாக முகாமுக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் 32 இலங்கைத் தமிழர்கள். அவர்கள் அனுப்பிய கடிதம் இங்கே…

அனைவருக்கும் நமது கவலை கலந்த வணக்கங்கள். எங்களது இருபத்தி மூன்றா வது நாள் உண்ணாநிலைப் போராட்டம் இன்று நாள் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் கவலையான விடயத்தை நாங்கள் தெரிவித்துக் கொள் கிறோம்.

கடந்த 23 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்த 17 உறவுகளுக்கும் வைத்தியர் வந்து எங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அவர்கள் உடனடி யாக உண்ணாவிரத்தை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் உயிர் போய்விடும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட நூறுவீதம் சந்தர்ப்பம் இருக்கிறது என்பதனை அவர் உத்தியோகபூர்வமாக எங்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன் அடிப் படையில்தான் நாங்கள் தற்காலிகமாக எமது உறவுகளை நாங்கள் கட்டாயப் படுத்தி உண்ணாவிரதத்தை நிறுத்த வைத்துள்ளோம்.

ஆனால் இன்று புதிதாக இன்னும் சில உறவுகள் உண்ணாவிரதப் போராட்டத் தைத் தொடங்கி இருக்கிறார்கள். என் உடன்பிறவா உறவுகளுக்கு நாங்கள் கொடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் எங்களைப் பற்றிய பொய்யான செய்தி களையும் பொய்யான தகவல்களையும் வெளியில் பரப்ப வேண்டாம். ஏனென் றால் நாங்கள் வயிற்றினை வெறுமையாக்கி உடல்களைப் புண்ணாக்கி மிகவும் வேதனைப்பட்டு இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு நாள் உணவு எடுக்காமல் இருந்தால்தான் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியாது என்பதனை அனுபவித்துப் பார்த்தால் இந்த இருபத்தி இரண்டு நாட்கள் நாங்கள் கடந்து வந்த வேதனைகளும் சோதனைகளும் சவால்களும் எவராலுமே தாங்க முடியாது என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தயவு செய்து எங்க ளுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள், குரல் கொடுங்கள் ஆதி தொட்ட எங்கள் தமிழினமே.

இப்படிக்கு

முகாமிலிருந்து கபிலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!