இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிப் பின்னணி

 இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிப் பின்னணி

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம்தான் தற்போது சினிமா ஊடக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிற விஷயம். இதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றுக் கொள்ளவில்லை.  பின் எப்படி இயக்குநராக ஆனார்? இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எம்.பி.ஏ. படித்து விட்டு பேங்க்கில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்படப் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். 

சினிமா மீதான பெருங்காதலில் வேலையைத் துறந்து முழு நேர சினிமாக் காரர் ஆகியிருக்கிறார்.  முதல் படம் ‘மாநகரம்’. அந்தப் படம் விமர்சன ரீதி யாகவும், வசூல் ரீதியாகவும் ஓரளவு வெற்றியைப் பெற்றது. 

அடுத்துலோகேஷ் இயக்கத்தில் வெற்றிப் படம் வெற்றிப் படமாக அமைந் தது ‘கைதி’. இதில் நடித்திருந்து கார்த்திக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தது. குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தி யும் என் மேல் வைத்த நம்பிக்கையால்தான் கைதி படம் சாத்தியமானது” என்றார். 

அதற்கடுத்து ‘கைதி’யின் பெரும் வெற்றி, லோகேஷை விஜய்யிடம் இட்டுச் சென்றது. சீன் பேப்பர் கூட இல்லாமல் ஸ்பாட்டுக்கு வருகிற லோகேஷ் டீமை விஜய் வியந்திருக்கிறார். ”சீன் பேப்பர் எங்கடா?” என்று கேட்டுச் சிரித் தாராம். வித்தியாசமான ஒர்க் ஸ்டைல் லோகேஷிடம் இருக்கிறது என்று விஜய் சொல்லியிருக்கிறார். இது ஒருவேளை யாரிடமும் உதவி இயக்குந ராக வேலை பார்க்காததினால் வந்த ஒரிஜினாலிட்டியாக இருக்கலாம். 

அதற்கடுத்துதான் கமல், விஜய் சேதுபதி, பஹத்பாசில் என பெரிய நடிகர் களின் நடிப்புக்கூட்டணியில் விக்ரம் எடுக்கப்பட்டது. கமல் மாஸ் ஹீரோ. அவருக்குக் கதை பண்ணுவதே பெரிய விஷயம். அதனோடு சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில் என பெரிய நடிகர்களை வைத்து கதை பண்ணி கேரக்டர் பில்அப் செய்வது என்பது கடினமான வேலை. இந்தக் கதையைச் சொன்னதும் கமல் யோசித்திருக்கிறார். கமல் சினிமாவில் கரைகண்டு நுரைகண்டவர். அதனால் லோகேஷின் பழைய படங்கைப் பார்த்தவர், இவரால் இந்தக் கதையை சரியாக எடுக்கமுடியுமா? என்பதை ஜட்ஜ் செய் யும் தகுதி படைத்தவர் என்பதால் சரியாகப் புரிந்துகொண்டு ஓகே சொன் னார்.

ஏற்கனவே லோகேஷ் தீவிரமான கமல் ரசிகர். லோகேஷின் திறமையில் கமலுக்கு நம்பிக்கை இருந்தது என்பதை விடவும் ஒருவித கவர்ச்சி இருந் தது எனலாம். இதனால் கிட்டத்தட்ட 100 கோடி கடன் பெற்று, கதை, இயக் கத்தில் தலை நுழைக்காமல், முழுதும் லோகேஷை நம்பி, கமல், விக்ரம் ப்ராஜெக்ட்டில் இறங்கியதில் த்ரில் கலந்த ரிஸ்க் இருக்கவே செய்கிறது. 

விக்ரம் பட வருமானம் உலக அளவில் ரூ.500 கோடி வசூலையும் தாண்டும் என்று சொல்கிறார்கள். லோகேஷுக்கு விக்ரம் தொடர்ந்து நாலாவது வெற்றி. கமலுக்கு சில ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த மாபெரும் வெற்றி.

கமலின் ‘ஆரம்பிக்கலாமா?’ என்ற டயலாக், பழைய விக்ரமில் பயன்படுத் திய கன், கைதியின் வெற்றி, லோகேஷ், அனிருத், விஜய்சேதுபதி, ஃபஹத் என்ற காம்பினேஷன் கைகொடுத்திருக்கிறது 

2016ஆம் ஆண்டில் மாநகரம்,  2019ல் கைதி, 2020ஆம் ஆண்டு விஜய் மற்றும் விஜய் சேதுபதி வைத்து மாஸ்டர் தற்போது கமலை வைத்து ‘விக்ரம்’. இதைத் தொடர்ந்து விஜய் வைத்து ‘தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்கள் ‘கைதி-2’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், லோகேஷின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இருசக்கர வாகனம், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசுகள் கொடுத்து அவர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் கமல்.

தற்போது சமூக வலைதளங்களில் லோகேஷ் கனகராஜ் எல்யூசி என்கிற சொல் பரபரபப்பாக உலவி வருகிறது. அது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (எல்.யூ.சி.) என்ற பெயர் மக்கள் கொடுத்தது. இந்தப் பெயர் ஒரு புது வரவேற்பாக உள்ளது. அதனால், இனிவரும் காலங்களில் கைதி, விக்ரம் திரைப்படங் களின் தொடர்ச்சியாக வரும் படங்களில் எல்.யூ.சி. என்ற பெயர் இடம் பெறும்” என்று தெரிவித்தார்.

லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...