மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம்
அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் நடப்பாண்டு விடுமுறைகள் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் 1 லிருந்து 9 ஆம் வகுப்பு வரை ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாகத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல சுற்றுப்புறத்தை அளிக்கப் பள்ளி களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை கால இடைவெளியில் இந்தப் பணிகளைச் செய்துமுடிக்க தலைமைச் செயலாளர் முடுக்கிவிட்டுள்ளார்.
தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கையின் முழு விவரம் வருமாறு…
“கட்டடங்களுக்கு வர்ணம் பூசுதல், மைதானங்களைத் தூய்மைப்படுத்துதல் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அங்கு சேர்ந்திருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற் கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்குப் பெற்றோர் ஆசிரியர் கழகங்களைச் சேர்ந்தவர் களை ஈடுபடுத்த வேண்டும். அதற்காக அவர்களிடம் எவ்விதமான நிதி வசூலை யும் பெற்று இப்பணிகளை மேற்கொள்ளகூடாது” என்றும் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.
“வகுப்பறைகள் மற்றும் கரும்பலகைகள் தூய்மையாக இருக்க வேண்டும். ஆய்வ ரங்குகளில் தேவையான பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டு ஆய்வகங் களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிவறைகள் நல்ல முறையில் தூய்மையாக இருக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் எந்தவித உடற்பயிற்சியும் இல்லா மல் இருந்து வருகின்றனர். எனவே விளையாட்டு மைதானம் மாணவர்கள் விளையாடும் அளவுக்குத் தயார் நிலையில் இருக்கவேண்டும். குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்திருக்க வேண்டும். பள்ளிக் கட்டடம் மற்றும் மதிய உணவுக்கூடம் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.
பல தலைமை ஆசிரியர்கள் இந்தப் பணியை மிகவும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள் என்பது அறிந்ததே. பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளைத் தங்களின் வீடுகளைப் போன்று தூய்மையாக வைத்துக் கொள்கிறீர்கள்.
இது போன்று சிறப்பாகச் செயல்படும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுதந் திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளரின் இந்தக் கடிதம் சரியான நேரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் ஊக்கப்படுத்தியுள்ளது. அதோடு இந்தக் கடிதம் பள்ளிகளைச் சிறந்த முறையில் பராமரிக்க உதவும். அதோடு சிறப்பாகப் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் ஊக்கப்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.