விக்னேஷ்-நயன்தாரா திருமண விழா ஒளிபரப்ப 25 கோடி வழங்கியது Netflix

 விக்னேஷ்-நயன்தாரா திருமண விழா ஒளிபரப்ப 25 கோடி வழங்கியது Netflix

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் திருமணம் தான் தமிழ்நாட் டின் இன்றைய ஹாட் டாபிக்.   இவர்களது திருமணம், சென்னையில் உள்ள தனி யார் ஓட்டலில் நடைபெற்றது.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்தத் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் 9.6.2022 காலை 10.20 மணிக்கு நடைபெற்றது.

திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன்,  இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், திரைப்பிரபலங்களை அழைத்துள்ள விக்னேஷ் சிவன் -நயன்தாரா தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இதற்கிடையே விக்னேஷ் சிவன் – நயன்தாரா வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைர லாகியது. அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்தத் திருமணம் நிகழ்வினை காட்சிப்படுத்தி வெளியிட netflix தளத்துடன், ரூ.25 கோடிகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளது. திருமணம் என்னும் தனிநபர் சார்ந்த நிகழ்வினை பண்டமாக்கி பணமாக்கும் நிகழ்வு இந்தியாவிற்கு புதிய கலாச்சாரம் என்று நினைக்கிறேன்.

இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில்கூட பொது மக்க ளையும் மீடியாக்களையும் அனுமதிக்க  தனியார் ஓட்டலில் வாசலில் நின்று, நேரலை செய்யும் ஊடகங்களை என்ன சொல்வது?

உள்ளே செல்லும் ஒவ்வொருவரின் செல்போனும் பறிக்கப்படுகிறது. (புகைப்படம் வெளியிடக் கூடாது என்று) செல்போனை வெளியே வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்றால், திருமணத்திற்கு  செல்வோரின் தனிநபர் சுதந்திரமும் பறிக் கப்படுகிறது அல்லவா?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் ஓட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழில் உள்ள Bar Codeகளை ஸ்கேன் செய்தால் மட்டுமே உள்ள செல்ல முடியும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும் மீடியாக்களையும் அனுமதிக்க மறுக்கின்றனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த காவலர்களை நிறுத்தி உள்ளனர். 

மேலும் இந்த விழாவிற்காக தமிழகக் காவல்துறையால் பலத்த பாதுகாப்பு வழங் கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் தரப்பிலிருந்து தகவல் தருகிறார்கள். இதுவரை இப்படியொரு முன்னெ டுப்பை யாரும் செய்ததில்லை என சொல்லப்படுகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணத்தின் உணவு வகைகளின் மெனு கார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பன்னீர் பட்டானி கறி, சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு, காளான் மிளகு வறுவல், பூண்டு மிளகு ரசம் என விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன.

திருமணத்திற்கு வருபவர்கள் கைபேசி கொண்டுவரத் தடையும் கூறப்பட்டுள்ள தாம். இந்த நிலையில் நேற்று அவர்களது திருமணத்திற்கு முன் மருதாணி நிகழ்ச்சி நடந்துள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களுக்கு  மருதாணி நிகழ்ச்சியின் தகவல் அழகாக அச்சிடப்பட்ட தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...