இந்திய நம்பிக்கை நட்சத்திரம் மஹுவா மொய்த்ரா

 இந்திய நம்பிக்கை நட்சத்திரம் மஹுவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி. மஹுவா மொய்த்ரா நியூயார்க் நகரம் மற்றும் லண்டனில் ஜே.பி மார்கன் சேஸ் வங்கியின் துணைத் தலைவராகப் பணியாற்றி னார். இந்திய அரசியலில் நுழைவதற்காக 2009இல் லண்டனில் உள்ள ஜே.பி. மோர்கன் சேஸ் வங்கியில் தான் வகித்த துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவான இந்திய இளைஞர் காங்கிரசில் இணைந்து, ராகுல் காந்தியின் நம்பிக்கை பெற்ற பேச்சாளராக விளங்கினார். ‘காங்கிரசின் கை சாதாரண மக்களின் கை. காங்கிரஸ் பொதுமக்களின் சிப்பாய்’ என்ற முழக்கத்தை வங்க இளைஞர்களிடம் பிரபல மாக்கினார். பின்னர் உட்கட்சிப் பூசலால் 2010இல், இவர் அகில இந்திய திரிணா முல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட் டத்தில் உள்ள கரிம்பூர் தொகுதியிலிருந்து 2016 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஹூவா  நிஜமான அழகி மட்டும் இல்ல. பொருளாதாரத்தில் புலி. அமெரிக்கா வில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு உலகின் 5வது பெரிய இன்வெஸ்ட்மெண்ட் பேங்கான JP Morgan Chase இல் துணை தலைவராக இருந்தவர். அதற்காக வெட்டி பெருமை எல்லாம் பேசமாட்டார். நம்மூர் டபுள் வாட்ச் பி.டி.ஆரை விட உயர்ந்த பதவியில் இருந்தவர். சிறு பந்தா கூட இருக்காது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 2022, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.பி.கள் பேசினர். அப்போது மஹுவா மொய்த்ரா, ‘பா.ஜ.க. அரசு வெளிப்படையாகவே இந்திய வரலாற்றை மாற்ற நினைக்கிறது’ என்று விமர்சித்தார்.

மஹுவா முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தில் பேச உள்ளேன். கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்துவிடும் பா.ஜ.க.வினரே உங்கள் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.

மக்களவையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, “குடியரசுத் தலைவர் உரையில் பல்வேறு இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெறும் வாய் வார்த்தைக்காக மட்டுமே அவை இடம் பெற்றுள்ளது. உண்மையில் இந்தியாவின் பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை அந்த அரசு பாதுகாக்கத் தவறுகிறது. எதிர்காலத் தைக் கண்டு அஞ்சும் இந்த அரசு, நிகழ்காலத்தையும் நம்பவில்லை.

இதனால் வரலாறுகளைத் திரித்து வருகிறது. அதை மாற்ற நினைக்கிறது. ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றுகிறது. பாசிசத்தை எதிர்த்த பகத் சிங், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்த வல்லபாய் படேல் ஆகியோரை கையில் எடுத்துள்ள பா.ஜ.க. அரசு, அவர்களின் வரலாற்றையும் கொள்கைகளையும் மாற்றி வருகிறது.

குடியரசுத் தலைவர் உரையில் பல இடங்களில் நேதாஜி குறித்துக் கூறப்பட் டிருந்தது. அனைத்து மதத்தினரிடமும் பாரபட்சமற்ற நடுநிலையான ஒரு அணுகு முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர், அதே நேதாஜிதான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பாடப் புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தானின் வரலாற்றை இந்த அரசு அழிக்கிறது. ஆனால் அதே திப்பு சுல்தானின் புலி சின்னத்தைத்தான் நேதாஜி தனது இந்தியத் தேசிய ராணுவத்தின் சின்னமாக வைத்திருந்தார்.

நேதாஜி இன்று இருந்திருந்தால் முஸ்லிம் இனப் படுகொலைக்கான அழைப்பு விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத்தின் பேச்சை ஒப்புக் கொண்டிருப்பாரா? எதிஹாத், எட்மாட் மற்றும் குர்பானி ஆகிய மூன்று உருது வார்த்தைகள் தான் நேதாஜியின் ஐ.என்.ஏ.வின் பொன்மொழிகள். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம்தான் இதன் அர்த்தம். ஆனால் அரசோ இதே உருது மொழியை நீக்கி விட்டு ஜம்மு காஷ்மீரின் முதல் மற்றும் அதிகாரபூர்வ மொழியாக இந்தியைக் கொண்டுவருகிறது.

நாட்டிற்கு மாற்றம் தேவையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது. அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. சொந்த குடிமக்களை உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை வாங்க மக்களின் வரிப் பணத்தையே பயன்படுத்திய ஒரே அரசு இதுதான். விவசாய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என விவசாயிகள் பலமுறை கூறியதைக் கேட்கவில்லை. இப்போது எதற்குத் திரும் பப் பெற்றுள்ளீர்கள் என அனைவருக்கும் தெரியும்!

80 சதவிகிதத்திற்கும் 20 சதவிகிதத்திற்கும் இடையிலான போர் என்று கூறி இந்த அரசு தொடங்கியுள்ள இது நமது குடியரசை அழிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி யுள்ளது. உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 142வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இன்று பத்திரிகையாளர்களுக்கு உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது” என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.

மஹூவா பொருளாதாரத்தில் புலி. அமெரிக்காவில் பட்டப் படிப்பை முடித்து விட்டு உலகின் 5வது பெரிய இன்வெஸ்ட்மெண்ட் பேங்கான JP Morgan Chase இல் துணைத் தலைவராக இருந்தவர். அதற்காக வெட்டிப் பெருமை எல்லாம் பேசமாட்டார். சிறு பந்தா கூட இருக்காது. மஹூவா இந்தியா வந்ததும் முதலில் சேர்ந்தது காங்கிரஸ் இளைஞர் அணியில். கட்சியின் உள் பிரச்சினை காரணமாக, காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

5, 1975 பிறந்த மஹுவா மொய்த்ரா  மேற்கு வங்காளத்தின் கிருஷ்ணநகரிலிருந்து பதினேழாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சி வேட்பாளராக 2019 இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மொய்த்ரா 2016 முதல் 2019 வரை கரிம்பூருக்கான மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். கடந்த சில ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிர சின் பொதுச் செயலாளராகவும் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

மொய்த்ரா தன் பள்ளிப்படிப்பை கொல்கத்தாவில் முடித்தார். பின்னர் அமெரிக்கா வின் மாசசூசெட்சின், சவுத் ஹாட்லியில் உள்ள மவுண்ட் ஹோல்யோக் கல்லூரி யில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பட்டம் பெற்றார்.

மஹூவா புகழ்பெற்றது தனது பேச்சுத் திறமையால்தான். பா.ஜ.க.வை காட்டமாக விமர்ச்சித்தே புகழ் பெற்றுவிட்டார். நாடாளுமன்றத்தில் மஹூவைப் பார்த் தாலே பெண் சிங்கம் என்று தோன்றும். பேச்சில் அப்படி ஒரு கம்பீரம். அனல் பறக்கப் பேசுவார். பா.ஜ.க.வை அனைத்துக் கட்சிகளும் எதிர்த்துப் பேசப் பயப் படும்போது மஹூவா  மட்டும் துணிச்சலாக விளாசினார். மோடியும் அமித்ஷா வும் அப்போது வாயடைத்து நின்றார்கள்.

அதற்காக மம்தா புகழ் பாடும் சொம்பாகவும் அவர் இல்லை. நாட்டின் பிரச்சினை களை கவனத்தில் கொண்டுவரும் மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார்.

மஹூவா புடவை கட்டுவதே ஒரு தனி அழகுதான். அவர் கட்டும் புடவைகள் அனைத்தும் எளிமையாக இருக்கும்.அவர் தேர்ந்தெடுக்கும் நிறம், ஜாக்கெட் நிறம் பார்ப்பதற்கு நாகரிகமான தோற்றத்தைத் தரும். எளிமையான அழகு அவரிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும். பேராண்மைமிக்கப் பெண்ணாகத் தோற்ற மளிக்கும் மஹுவா மொய்த்ரா எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...