கருந்துளையைக் கண்டறிந்த அபாஸ் மித்ரா யார்?

 கருந்துளையைக் கண்டறிந்த அபாஸ் மித்ரா யார்?

பிளாக் ஹோல் என்ற கருமைப்படிவத்தை முதன்முதலில் கணித்தவர் ஆல்பார்ட் ஐன்ஸ்டீன்தான். இருப்பினும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டது போல இது கருங்குழி இல்லை, இது தீ பந்துகளில் முடிவடையும் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் (MECO- Magnetospheric Eternally Collapsing Objects) என்ற கருத்தை இந்திய இயற் பியல் பேராசிரியர் அபாஸ் மித்ரா முன்வைத்து வெற்றி கண்டிருக்கிறார். 

சைக்கிள் கேரியரில் ராக்கெட் பாங்கங்களை வைத்துக்கொண்டு சென்றுதான் நாம் விண்வெளியை அடைந்தோம். அதுதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோவின் ஆரம்ப வளர்ச்சி கால வரலாறும் கூட. இருப்பினும் இன்று, செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த இந்தியா வின் உதவியைத்தான் பல உலக நாடுகளும் (அமெரிக்கா உட்பட) நாடுகின்றன என்பது தான் விண்வெளி துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சிக்கு சான்று. அந்த வளர்ச்சி நிலையை மேலும் தூக்கி நிறுத்தும் மற்றொரு தூண்தான் – அபாஸ் மித்ரா.

பிளாக் எனப்படும் கருங்குழி பற்றி நாசா சமீபத்தில் ஆய்வு ஒன்றை நிகழ்த்தி இருந்தது.  பிளாக் ஹோல்களில் இருந்து வெளியேறும் மாபெரும் எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு பற்றியதுதான் அந்த ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் இந்தச் சமீபத்திய ஆய்விலிருந்து பிளாக் ஹோல் சார்ந்த தனது கோட் பாடு நிரூபணம் ஆகியுள்ளது என்று கருத்துக் கூறியுள்ளார் வான் இயற்பியலாள ரான அபாஸ் மித்ரா.

பிளாக் ஹோல் அதாவது கருங்குழி நாம் நினைப்பது போல் ‘நிஜமில்லை’, கருங் குழி என்பது மிகவும் சூடான தீப்பந்துகள் (ultra hot balls of fire) போன்றது தான் என்கிறது மித்ராவின் கோட்பாடு. அதாவது, மிகவும் பிரம்மாண்டமான நட்சத் திரங்கள் (extremely massive stars) தீவிரமான சிறிய பொருட்களுடன் (ultra compact objects) சரிந்து போகும் நிலையே (collapse) பிளாக் ஹோல் என்கிறது மித்ராவின் கோட்பாடு.

அப்படியான பிளாக் ஹோலின் ஈர்ப்பு மண்டலமானது உட்புகும் ஒளி கூட மீண்டு வெளியேற முடியாத வண்ணம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

வெளியேற முடியாத அந்தக் கற்பனை எல்லையை விஞ்ஞானிகள் நிகழ் வெல்லை (event horizon) என்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது உள்நடக்கும் நிகழ்வுகள் எதுவும் வெளியிலிருந்து பார்க்கும் எவரையும் பாதிக்காது, மற்றும் உட்புகுந்த எதுவும் மீண்டும் வராது என்பதே நிகழ்வெல்லை யாகும்.

கடந்த நான்காண்டுக்கு முன்பு சூப்பர்மாசிவ் பிளாக் ஹோல் ஒன்றில் நடந்த எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு சம்பவத்தை நாசா பதிவு செய்திருந்தது. அந்தச் சம்ப வத்தை நாசாவின் இரண்டு விண்வெளி ஆய்வு தொலைநோக்கிகள் பதிவு செய் திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை பிளாக் ஹோலில் இருந்து எதுவுமே வெளிவராது என்று நம்பப்பட்ட நிலையில் எக்ஸ்-ரே கதிர் வெடிப்பு மட்டும் எப்படி வெளியானது. இதன் மூலம் வான்வெளி இயற்பியலாளரான அபாஸ் மித்ராவின் பிளாக் ஹோல் சார்ந்த கோட்பாடு நிரூபனமாகி உள்ளது.

அதாவது அவர் கோட்பாடின்படி பிளாக் ஹோல் என்பது காந்த பிளாஸ்மாக்களை (magnetized plasma) உள்ளடக்கிய சூடான பந்துகள்தான்.

காந்த பிளாஸ்மா என்பது எலக்ட்ரான்கள் பறிக்கப்பட்ட அயனியாக்கம் எரிவாயு (ionized gas stripped of electrons) என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, அபாஸ் மித்ராவைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

அபாஸ் மித்ரா, மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC)) வான்வெளி இயற்பியல் கோட்பாடு தலைவர் மற்றும் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் இணைப் பேராசிரியர். காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு பாபா அணுவியல் ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணிபுரிகிறார்.

இப்படி ஒரு biodata இருந்தால் நம் நாட்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் பேராசிரி யராகப் போகலாம். அரசாங்க அறிவியல் ஆலோசகராகக்கூட ஆகலாம். ஆனால் பெரிய அளவில் ஆராய்ச்சி எல்லாம் செய்ய முடியாது. இதற்கு மாறாக மேற் சொன்ன பேராசிரியர் கருந்துளை தகவல் முரண்பாடு (Blackhole information paradox-BHIP) எனப்படும் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டவர். இந்த BHIP என்பது இயற்பிய லாளர்கள் மத்தியில் கடந்த 50 ஆண்டுகளாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக பிரபல விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்தான் இந்த BHIP என்பதற்கு தீர்வு கண்டார் என்று கருதப்படுகிறது. ஆனால் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸை காட்டிலும் 14 வருடங்களுக்கு முன்பாகவே BHIP என்பதற்கு ஒரு தீர்வைக் கண்ட அபாஸ் மித்ரா இந்தியாவிலேயே கூட புறக்கணிக்கப்பட்டார். எனக்கு கருந்துளை கள் பற்றியும் க்வாண்டம் மெக்கானிக்ஸ் பற்றியும் அதிகம் தெரியாது. ஆயினும் மித்ரா அவர்களின் அணுகுமுறை மிக இயல்பாக உள்ளது. இதனை elegant solution என்று அழைப்பர். சார்பியல் கோட்பாடு நிறுவப்படும் முன்பு, ஈத்தர் எனும் கற்பனை திரவம் பற்றி பல குழப்பங்கள் நிலவியது. அதையெல்லாம் அனாயச மாகத் தீர்த்து வைத்தது சார்பியல் தத்துவம். அதுபோல்தான் அபாஸ் மித்ராவின் அணுகுமுறையும் இருக்கிறது. ஆனால் அவரது ஆராய்ச்சி ஏன் பிரபலமாகப் பேசப்படவில்லை? அவரது சாதனை பேசப்படாதது இந்திய அறிவியலில் கொஞ்சம் அரசியலும் கலந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

அடுத்த காரணம் ஆர்வமின்மை. இந்தியா விஞ்ஞான வளர்ச்சி காண எந்த வகை யான வளங்கள் தேவை? அபாஸ் மித்ரா ஒரு பேட்டியில் கூறியதாவது: “எனது ஆராய்ச்சிக்கு இணைய வசதியுடன் கூடிய ஒரு நல்ல கணினி இருந்தால் போதும்” என்றார். அது உண்மைதான்.

இன்று அறிவியலில் பல துறைகளில் கோட்பாட்டு ஆராய்ச்சி (theoretical research) நடைபெறுகிறது. முன்பெல்லாம் நாம் நிறுவும் கோட்பாட்டுகளை நிரூபிக்க prototype அல்லது experiment மிகவும் தேவைப்பட்டது. அதற்கேற்ற உற்பத்தித் திறன் இல்லாத (இந்தியா போன்ற) நாடுகள் அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கனவு கூட காண முடியாது. இன்று நிலை அவ்வாறு அல்ல. பல simulation ஒரே சமயத்தில் செய்வதற்குக்கூட ஒரே ஒரு software போதும். CNC Lathe, EDM என்று வகை வகையாக இயந்திரங்கள் வாங்குவதைக் காட்டிலும் குறை வான செலவில் software license வாங்க முடிகிறது. குறைந்தது ஐ.ஐ,டி,, என்.ஐ.டி, போன்ற பல்கலைக்கழகங்கள் வாங்கக்கூடிய அளவில்தான் உள்ளது.

இத்தகைய பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இது போன்ற வசதிகள் ஏற்கெனவே உள்ளது. இருந்தாலும் ஆராய்ச்சி திறன் மேம்படவில்லை. அப்படியானால் என்ன காரணம்? ஆர்வமின்மைதான் மிகப்பெரிய காரணம். பெரும்பாலான அறிவிய லாளர்கள் அவர்களது 15 முதல் 30 வயது வரை தீவிரமான கற்றலில் ஈடுபட் டிருப்பார்கள். இதுதான் அவர்களின் ஆராய்ச்சித் திறனுக்கு அடித்தளம். ஆனால் நம் நாட்டில் இந்தப் பருவத்தில் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

அடுத்ததாக பயனற்ற நடைமுறைகள். ஒரு உதாரணம் தருகிறேன். எனது ஆசிரி யரின் ஆசிரியர் 1960களில் சென்னை ஐ.ஐ.டி.யில் படித்தவர். அமெரிக்கா சென்று உயர்கல்வி கற்று, தான் படித்த கல்லூரிக்கு கைம்மாறு செய்ய வேண்டும் என்றெண்ணி 1970களில் சென்னை ஐ.ஐ.டி.க்கே துணை பேராசிரியராக வந்து சேர்ந்தார். நம் ஆட்கள் அவரை எப்படி ஊக்குவித்தார்கள் தெரியுமா? A4 பேப்பரில் தொடங்கி ஆராய்ச்சிக்கு தேவைப்படும் அனைத்து stationery பொருட்களையும் அவரே நேரில் Dean அலுவலகத்திற்கு சென்று, queueவில் நின்று, கையெழுத் திட்டு பெற்று வர வேண்டும் என்பது அன்றைய வழக்கம். இப்படிப்பட்ட தேவை யற்ற வழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி அவரை நன்கு ஊக்குவித்தனர்.

ஒவ்வொரு முறையும் இப்படி பாடுபட்டு வாங்கிக்கொண்டு வந்த அந்த A4 sheetல் கொஞ்சம் கஷ்டமான கணக்கு ஒன்றை solve செய்யும் போது, “பேப்பர் தீர்ந்தால் மீண்டும் Dean அலுவலகத்தில் இருக்கும் அந்த நீண்ட queueவில் தான் நிற்க வேண்டும்” என்ற எண்ணம் அவரை வந்து மிரட்டினால் எவ்வாறு முழு திறனு டன் வேலை செய்வது? இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல் அந்த ஆசிரியர் மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார். இன்று அவர் continuum mechanics துறையில் பல சாதனைகள் புரிந்து, ஒரு முக்கியப் புள்ளியாகத் திகழ்கிறார். ஒருவேளை தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்திருந்தால் அவரால் இந்தளவு சாதித்திருக்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.

அதற்கு அடுத்தபடியாக போதுமான நிதியுதவி இல்லை. இதைப்பற்றி நான் புதி தாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அனைவரும் அறிந்ததே. எனவே விவரிக் காமல் நிற்கிறேன்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...