சாணிக் காயிதம் -திரை விமர்சனம்
1979-ல் பரதேசபட்டினம் என்ற ஊரில் நடப்பது போன்று படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் கணவர் மேல்சாதியைச் சேர்ந்தவர்களின் அரிசி மில்லில் வேலை பார்த்து வருகிறார். மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால் முதலாளிக்கும் இவருக்கும் சண்டை மற்றும் கைகலப்பு ஏற்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் மேல் சாதிக்காரர்கள் பொன்னியின் கணவரைப் பழிவாங்க முடிவு செய்கின்றனர். அதன் முதல் கட்டமாக போலீஸ் கான்ஸ்ட பிளாக இருக்கும் பொன்னியை மேல் சாதிக் கும்பல் கொடூரமாகத் தாக்கி கூட்டாகப் பாலியல் பலாத்காரம் செய் கிறார்கள்.
அதன்பின் குடிசைக்குத் தீவைத்து வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த பொன்னி யின் கணவர் மற்றும் பெண் குழந்தையை ஈவு இரக்கமின்றி எரித்துக் கொலை செய்கின்றனர்.
தன் வாழ்க்கையைச் சிதைத்தவர்களைத் தனது அண்ணன் சங்கையாவுடன் சேர்ந்து பொன்னி பழி வாங்குவதுதான் மீதிக்கதை.
கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடித்துள்ளதால் ஆரம்பம் முதலே இந்தப் படத்திற்குத் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
இயக்குநரின் முந்தைய படத்தை (ராக்கி) போலவே இந்தப் படமும் காட்சிக்குக் காட்சி ரத்தம் தெறிக்கத் தெறிக்க படமாக்கப்பட்டுள்ளது.
கற்பழிப்பு, வன்முறை மற்றும் கொலை சம்பந்தப்பட்ட காட்சிகள் நெஞ்சைப் பதை பதைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் குடும்பத்தோடும் குழந்தை களோடும் இந்தப் படத்தைப் பார்ப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
வன்முறை காட்சிகள் அதிகம் இருந்தாலும் அது கதைக்குப் பொருந்தும்படியாக சில காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.
பொன்னி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும், சங்கையா கதாபாத்திரத்தில் செல்வ ராகவனும் இந்தத் திரைப்படத்தில் போட்டிப் போட்டு நடித்து பார்வையாளர் களைத் தங்களது நடிப்பால் மிரட்டியுள்ளனர்.
செல்வராகவன் நடிகராக அறிமுகமான முதல் படம் இதுதான். ஆனால் அவர் இரண்டாவதாக நடித்த பீஸ்ட் படம் முன்பே வெளிவந்து விட்டது.
கீர்த்தி சுரேஷுக்குத் தீனி போடும் வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு நல்ல கதாபாத்திரம்தான் இந்த ‘பொன்னி’.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி யுள்ளது. ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த டிரெய்லர் காட்சிகள் படத் தில் இல்லாதது சற்று ஏமாற்றமளித்தது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வகராகவனின் நடிப்புதான் இந்தப் படத்திற்குப் பலம்.