எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியது எதற்கு?
2020-ல் ஜாக் ஸ்வீனி என்கிற 19 வயது நிரம்பிய இளைஞர், எலான் மஸ்க்கின் தனி விமானத்தைப் பின்தொடர்ந்து அதன் பயண வழித்தடங்களை @ElonJet என்கிற டிவிட்டர் கணக்கின் மூலம் இதைத் தொடர்ந்து வெளியிட்டார். அவர் சில பொதுத்தரவுகளில் கிடைக்கும் விமானங்களின் தகவல்களைத் திரட்டி அதி லிருந்து விமானப் பயணத்தின் தற்போதைய இருப்பிடத் தகவல்களை வெளி யிட்டு வந்தார். இவர் எலான் மஸ்க் மட்டுமின்றி வேறு பல தலைவர்களின் விமானத் தகவல்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இது அவர்களின் அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல பிரச்சினைகள் முதல், தீவிரவாதிகளுக்கும் கூட ஏதுவாய்ப் போகும் அல்லவா?
உலகின் மூத்த பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்X நிறுவனத்தின் செயல் தலைவருமான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளை யும் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் டிவிட்டர் நிறுவனம் இனி பப்ளிக் நிறுவனாக இல்லாமல் தனியார் நிறுவனமாகச் செயல்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டிவிட்டர் நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியிருந்தார். அதிலும் அந்நிறுவனத் தின் உரிமையாளர் ஜாக் வெளியேறியதில் இருந்து டிவிட்டர் நிறுவனத்திற்கும் எலான் மஸ்க்கிற்குமான மோதல் அதிகரித்துக் காணப்பட்டது. இவரைத் தவிர உலகம் முழுவதும் டிவிட்டர் நிறுவனம் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுகிறது என்றும் பல நாடுகளில் இந்த நிறுவனம் அரசாங்கத்திற்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அந்த வகையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கணக்கு அடிக்கடி முடக்கப்பட்டு வருவது குறித்து கடுமையாகச் விமர்சித்திருந்தார். இதற்காக அவரே தனி சமூக வலைதளச் செயலி ஒன்றை தொடங்கியதும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில்தான் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற நினைத்த எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் 9.2% பங்குகளை விலைக்கு வாங்கினார். இதனால் அந்நிறு வனத்தின் போர்ட் உறுப்பினராக உள்நுழைந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை மாற்ற முடியும் என்றும் நம்பினார். ஆனால் அது நடக்காமல் போகவே ஒட்டு மொத்தமாக டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை விலைக்கு வாங்குவது என முடிவெடுத்த எலான் கடந்த சில மாதங்களாக இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 டாலர் (இந்திய மதிப்பில் 4120 ரூபாய்) என்கிற ரீதியில் அதன் 100% பங்குகளை 37 பில்லியன் டாலர்களுக்கு விலை பேசினார். இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாக டிவிட்டர் நிறுவனத்திற்கு எலன் 44 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடியை) செலுத்தியதாக வும் அதற்கு போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல் வெளி யாகி இருக்கிறது.
உலகில் மிகப்பெரிய சமூக வலைதளமாகச் செயல்பட்டுவரும் டிவிட்டர் நிறுவனம் இதுவரை பப்ளிக் நிறுவனமாக இயங்கிவந்தது. தற்போது எலான் அதை விலைக்கு வாங்கியதால் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் டிவிட்டரின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களிடம் நேற்று பேசியுள்ளார். அதில் ஒப்பந்தம் முடிந்தது தளம் எந்தத் திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் கூறிய தும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியதிலிருந்து, அந்த தளத் தின் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான அவரது திட்டங்களைச் சுற்றி நிறைய வதந்திகள் பரவின. தற்போது அவர் டிவிட்டரைப் பயன்படுத்துவதற்கு சிலருக்கு எவ்வாறு கட்டணம் விதிக்கப்படும் என்பதை இறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.
“டிவிட்டர் எப்போதும் சாதாரண பயனர்களுக்கு இலவசமாக இருக்கும், ஆனால் வணிகப் பயனர்களுக்கு மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு கட்டணம் விதிக்கப் படும். அவர்கள் ஒரு சிறிய தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். டிவிட்டருக்கு நிறைய சாத்தியங்கள் இருக்கின்றன. அதில் நல்ல மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன்” என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை மிக மோசமாக விமர்சிப்பவர்கள் கூட டிவிட்டரில் தொடர்ந்து நீடிக்க லாம் எனத் தெரிவித்துள்ள எலான் மஸ்க், அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம் என கூறியுள்ளார். மின்சார கார்கள் மற்றும் செயற்கைக்கோள் நெட் வொர்க்குகள் என ஒவ்வொரு நிறுவனத்திலும் புரட்சியை ஏற்படுத்திய எலான் மஸ்க் டிவிட்டரில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்யப் போகிறார் என பலரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.