மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் தேவையா?

 மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் தேவையா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமை யான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

இந்த ஆதீனத்தின் 27-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்ளார். இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இதற்குப் பல்வேறு தலைவர்களும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சி, அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

‘மனிதரை மனிதர் தூக்கிச் செல்வதா? இந்த நிகழ்வு நடந்தால் போராட்டம் நடத்துவோம்’ என அறிவித்தன.

இதையடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி,  “இது மனித உரிமையை மீறிய செயல். தி.க. உள்ளிட்ட அமைப்பு போராட்டம் நடத்தினால், சட்டம் ஒழுங்கு கெடும். ஆகவே இதை நிகழ்த்த வேண்டாம்’ என தடை விதித்தார்.

பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. அக்கட்சி யின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, “ஆதீனத்தை தோளில் சுமக்க நேரில் வருவேன்” என்று காட்டமாக அறிவித்தார்.

மதுரை ஆதீனம், “உயிரே போனாலும் நானே தருமபுரம் ஆதீனத்தைத் தோளில் சுமப்பேன்” என ஆவேசப்பட்டார். (அவருக்கு போலிஸ் பாதுகாப்பு தரப்பட் டுள்ளது.)

இதற்குக் காரணமாக அவர்கள் கூறுவது, ‘ஆதீனகர்த்தர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்கள் புனிதமானவர்கள்’ என்பதுதான்.

இதற்கு ‘வரலாற்று’ ரீதியாகவும் ஒரு உதாரணம் சொல்கிறார்கள்.

திருஞானசம்பந்தர், அப்பரைச் சந்திக்க பல்லக்கில் சென்றார். வழியில், ‘அப்பர் இருக்குமிடம் வந்துவிட்டதா?’ எனக் கேட்டார். பல்லக்குத் தூக்கியவர்களில் ஒருவர், ‘இதே இருக்கிறேன்’ என்றார். அதாவது திருஞானசம்பந்தர் வயதில் சிறியவராக இருந்தாலும், அவருக்கு முதியவரான அப்பர் பல்லக்குத் தூக்கினார் என்பதுதான் கதை.

அவர்கள் தமிழை வளர்த்தார்கள். நீங்கள் தமிழையா வளர்க்கிறீர்கள்? அவர்கள் சைவத்தை வளர்த்தார்கள், நீங்கள் பார்ப்பனர்களின் வைதீகத்தை அல்லவா வளர்க்கிறீர்கள். அவர்கள் எளிமையாக வாழ்ந்து ஒழுக்கத்தைக் காத்தார்கள், நீங்கள் சொத்தை அல்லவா பூதம்போல வருகிறீர்கள். சைவத் தமிழை வளர்க்கத் தோன்றிய மடங்களை இன்று அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக அல்லவா மாற்றியிருக்கிறீர்கள்?

அந்தக் காலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் பயணிக்க, கால்நடை யாகயும் மாட்டு வண்டியிலும், பல்லக்கிலும்தான் செல்லவேண்டும்.  இப்போது அது போன்ற நிலையிலா ஆதீனங்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆதீனகர்த்தர்கள் சொகுசு கார்களில் பயணிக்கிறார்கள்; விமானத்தில் பறக்கிறார்கள். ஏ.சி.யில் காற்று வாங்குகிறார்கள். ஏன் கோயில் சந்நிதிகளில் கடவுளே ஏ.சி.யில் இருக்கிறார். கோயில்களில், மடங்களில் அகல்விளக்கு தானே பயன்படுத்த வேண்டும்? எதற்காக மின்விளக்கு, மின்விசிறி எல்லாம்? புகைப் படம், வீடியோ எடுப்பது ஏன்?

மரபு என்றால் ஆதீனக் கோயில்களில் மின் விளக்கு, மின் மங்கல மணி ஒலிப் பான்கள் ஏன்? புகைப்படம், வீடியோ எடுப்பது ஏன்? இவர்களும் இன்றைய நவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள்தானே?

சரி, ஆதீனகர்த்தர்கள் புனிதர்கள் என்கிறார்களே… இந்த ‘புனிதர்களை’ அறிவது அவசியம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, மதுரை ஆதீனத்திற்குச் சொந்த மான கஞ்சனூர் சுக்கிரன் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனத் திற்காக மதுரை ஆதீனம் சமீபத்தில் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள், ஆதீன சொத்துக்களைப் பற்றி கேள்ளி எழுப்பியபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

கள்ளப்பணம், கருப்புப்பணம் வைத்திருப்பவர்கள்தானே பம்ம வேண்டும்? முற் றும் துறந்த முனிவர்களுக்கு என்ன பயம்?

உடல்நிலை பாதிக்கப்பட்டால், இந்த முற்றும் துறந்த முனிவர்கள், கடவுளைத் தானே நாட வேண்டும்?

எதற்காக ஆங்கில மருத்துவத்துக்கு ஓடுகிறார்கள்? கண்ணாடி அணிகிறார்கள்!

மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மடாதிபதி இருந்த அருணகிரி. சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டபோது, மதுரை அப்பல்லோ மருத்துவமனையில்தானே சேர்ந்தார்!

அடுத்து அரசியலுக்கு வருவோம்,.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, மதுரை ஆதீனம் அருணகிரி, வளைந்து கும்பிட்டாரே… தெய்வத்தைக்கூட அப்படி வணங்கியிருக்க மாட்டார். அவ்வளவு ஏன்.. எந்த ஒரு அமைச்சரும்கூட ஜெயலலிதாவை அப்படி வணங்கி இருக்க மாட்டார்கள்! ஜெயலலிதா ஆட்சியில், புரட்சித்தலைவி அம்மா என்று தான் அழைத்தார் மதுரை ஆதீனம் அருணகிரி.

ஆதீனத்துக்கு அனைத்து மனிதர்களும் சமம்தானே… ஜெயலலிதா மட்டும் எப்படி புரட்சித் தலைவி அம்மா ஆனார்?

அது தவிர ஆதீனகர்த்தர்களும் சராசரி மனிதர்களைப்போல, பிரச்சினை என்றால் நீதிமன்றங்களைத்தானே நாடுகிறார்கள்.

சொத்துக்கள் குறித்து ஆதீனங்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள் பல உண்டு. தவிர மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரி நித்தியானந்தாவை அடுத்த ஆதீன மாக நியமித்தார். நித்தியானந்தா எப்படிப்பட்டவர் என சொல்லத் தேவையில்லை.

பாலியல் வன்முறை, கஞ்சா, கடத்தல் என பல வழக்குகள். அவரைத்தான் தனக்கு அடுத்த ஆதீனமாக அருணகிரி நியமித்தார். பிறகு நீக்கினார். அடுத்து திருவாவடு துறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீன மாக நியமித்தார். இதற்கெல்லாம் இந்தப் புனிதர் நாடியது, சாதாரண மக்கள் நாடும் நீதிமன்றங்களைத்தானே.

தருமபுரம் ஆதீனம் பற்றிய பகீர் குற்றச்சாட்டும் நினைவுக்கு வருகிறது.

2010ல் கிளம்பிய புகார் இது.

அசோக்குமார், என்பவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நடத்தும் குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில், தங்கியிருந்தார்.

மடத்தில் உள்ள 2 மடாதிபதிகள் கால்களை அமுக்கிவிட வற்புறுத்துவதாகவும், தம்பிரான் சுவாமி, செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு வந்தது.

தவிர, ‘மதுரை ஆதீனம் 750 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். மடத்தின் வருமானத்தைத் தன் சொந்த உபயோகங்களுக்குச் செலவழித்துள்ளார். இதுபற்றி சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும்’’ என்று, ஒரு புகார் கிளம்பியது.

இதைக் கூறியவர்கள் பகுத்தறிவுவாதிகளோ, நாத்திகர்களோ இல்லை. சுத்த சுயம்பிரகாச ஆன்மிகவாதிகளான, இந்து மக்கள் கட்சியினர்தான்.

சில நாட்களுக்கு முன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கை யில் பல தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார்.

2020 இதே தருமபுரம் ஆதீனம்.. திருப்பனந்தாளில் பட்டினப் பிரவேசம் செய்த போதும், பல்லக்கில் ஏறினார். இதற்கு தி.க. உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரி வித்ததும் நடந்து சென்றார் ஆதீனம்.

ஸ்ரீரங்கத்தில் – அர்ச்சககர்களை வீட்டிலிருந்தும், கோயிலிலிருந்தும் தூக்கிச் செல் லும் வழக்கத்தை தி.க .தான் போராடி நிறுத்தியது.

கும்பகோணத்தில் விஜயதசமியின்போது அர்ச்சகர்களை சுமந்துசெல்லும் முறை திராவிடர் கழகப் போராட்டத்தால்தான் நிறுத்தப்பட்டது.

தருமபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த பட்டினப்பிரவேசம் 55 ஆண்டு களுக்கு முன்பே தி.க. போராட்ட அறிவிப்பால் நிறுத்தப்பட்டது.

சங்கராச்சாரியார்கள் ஒரு காலகட்டம் வரை மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் தான் பயணம் செய்து வந்தனர்.

ஒருமுறை – தந்தை பெரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது அதன் வழியாகப் பல்லக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேக ரேந்திர சரஸ்வதி பல்லக்கில் சென்ற நிலையில், “முற்றும் துறந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, மனிதர்கள் சுமந்து செல்ல பல்லக்கில் சொகுசாகப் பயணிக்க லாமா? இவரெல்லாம் துறவியா?” என்ற கேள்வியை எழுப்பினார்.

இதனைக் காதில் வாங்கிய சங்கராச்சாரியார் பல்லக்கை விட்டுக் கீழே இறங்கி நடந்து சென்றார். அது முதல் பல்லக்கில் செல்லும் பயணமுறையைக் கைவிட் டனர் சங்கராச்சாரியார்கள்” என்று பட்டியலிட்டு இருக்கிறார் தி.க.தலைவர் கி.வீரமணி.

இப்படி ஆதீனகர்த்தர்கள், சங்கராச்சாரியார்கள் பல்லக்கில் செல்ல முடியாதத னால் என்ன அபச்சாரம் நேர்ந்துவிட்டது? கொரோனா வந்தது இதனால்தானா? புயல் வெள்ளம் வந்தது இதனால்தானா?

அப்படியானால் இந்த இயற்கைப் பேரிடர்களால் ஆதீனங்கள், சங்கராச்சாரிகள் பாதிக்கப்படவில்லையா?

பல்லக்குத் தேவையில்லை என ஆன்மிகப் பகுத்தறிவாளர், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் விரும்பினார். அதற்காக முயற்சி எடுத்தார் என்பதையும் கி.வீரமணி தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தவிர இவர்களில் சிலர் கடும் குற்றச்சாட்டுக்கும் ஆளாகிறார்கள்.

பிறகு என்ன புனிதம்.. .

ஆதீனங்கள் மடத்துக்குள் ஆயிரம் சாங்கியம் சம்பிரதாயங்களைச் செய்கிறார் கள். அதையாரும் தட்டிக்கேட்கவில்லை. அது எப்படியாவது ஒழியட்டும். ஆனால் பொதுவெளியில் இந்தக் காலத்திலும் அடிமைத்தனத்தைப் பறைசாற் றக்கூடாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கண்டனம்.

பட்டினப்பிரவேசம் போகட்டும் யாரும் தடுக்கவில்லை, திறந்தவெளி காரில் போகங்கள் உங்களை யார் தடுக்கிறார்கள். நான் மனிதர்கள் சுமப்பதைத் தவிர்க் கிறேன். திறந்தவெளி காரில் பட்டணப்பிரவேசம் போகிறேன் என்று கூறி செய்தால் உங்களை எல்லாரும் வரவேற்பார்கள்தானே.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...