நடிகை ராதிகா ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கத்துக்கு ஒரு லட்ச ரூபா வழங்கினார் நடிகை ராதிகா
எம்.ஆர்.ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா, தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். பாராதி ராஜாவால் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராதிகா, முதல் இன்னிங்ஸில் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி யாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர வேடங் களில் நடித்து கலக்கி வரும் ராதிகா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சக்சஸ்புல் நடிகை யாக வலம் வந்த ராதிகா, ரடான் மீடியா வொர்க்ஸின் நிர்வாக இயக்குநராக இருந்து தொழிற்துறையில் செய்த சாதனைகளுக்காக பிரிட்டன் நாடாளு மன்றத்தில் விருது அளிக்கப்பட்டது.
தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளு மன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்ட னர். இந்த உயரிய விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார் ராதிகா.
“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னைத் தேர்ந்தெடுத்த தேர்வுக் குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2022 அன்று நடிகை ராதிகா சரத்குமார் பிரிட்டன் தமிழ்துறை குழுவினருடன் லண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கத்துக்கு நூறு கோடி ரூபாய் (பிரிட்டன் பவுண்டு மதிப்பில் 10 மில்லியன்) தேவைப்படு வதை ராதிகா அறிந்தார். உடனே அப்பணிக்காக, ஒரு லட்ச ரூபாய் நன்கொடைக்கான காசோலையை வழங்கினார்.
தமிழ்நாட்டிலும்… ஏன் உலகம் முழுதும் தமிழர்கள் பலர் பெரும் தொழி லதிபர்களாகவும், பெரும் பணியில் இருப்பவர்களாகவும் உள்ளனர். இவர் களில் 9,999 பேர், தலா ஒரு லட்ச ரூபாய் அளித்தால், லண்டன் பல்கலை யில் தமிழ்த்துறை மீண்டும் செயல்படத் தொடங்கும்!
அப்படி வழங்கினால் பெண்களின் முயற்சியால் உருவான தமிழ்த்துறை என்கிற கூடுதல் பெருமையும் கிடைக்கும்!
நன்கொடை அளிக்க விரும்புவோர், www.tamilstudiesuk.org என்ற தளத்திற்கு சென்று வழங்கலாம்.