அழகு நமக்கானது, பிறருக்கானது அல்ல! -தமிழச்சி தங்கபாண்டியன்
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டி யன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அரசியல் தாண்டிய விஷயங்களைப் பேசினார். தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி பேசுகையில் எல்லோருக் கும் அவருடைய உடைகள் ஞாபகம் வரும். இந்த வயதிலும் தன்னை சீரான அழகுடன் காண் பித்துக்கொள்ளும்தன்மை உடையவர் தமிழச்சி. அது குறித்து கேட்கையில் அவர் சொன் ன பதில்.
“நம்மை அழகாக வெளியில் காட்டுவது என்பது ரசனை சார்ந்தது. அது எந்த ஆணையோ வேறு யாரையோ கவர்வதற்காக அல்ல. அது ஒவ் வொருவரின் தனிப்பட்ட ரசனை மற்றும் ஆரோக் கியம் சார்ந்த விஷயம். நம் எல்லா நாளும் ஒரே மாதிரியானது அல்ல, ஒவ்வொரு நாளும் பூக்கும் பூ போல. ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக நமக்குப் பிடித்தாற்போல் நம்மை வெளிப்படுத் திக்கொள்வது நமது தன்னம்பிக்கையை அதிக ரிக்கும், வாழ்வின் மீதான காதலை அதிகரிக்கும்.
என் ஊரில் மரத்தடியில் கரிசல் மண்ணில் இருந்து ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படித்த கரிசல் தமிழச்சிதான் நான். அதுதான் இன்னும் இந்தத் தோலுக்குள் உள்ளது. என் ஊரைப் பொறுத்தவரை நான் ‘செமதி’தான்.
அவர்களுக்கு சுமதி என்று கூப்பிட வராது. அவர் களுக்கு நான் இப்போதும் அதே செமதிதான். ஏதோ பாப்பா புக் போடுது, இங்கங்க போயி பேசுது அவ்வளவுதான். இப்போ எம்.பி. ஆனத னால் என்னிடம் சொன்னால் கொண்டு போய் சேர்க்கலாம் பிரச்சனைகளை என்று நினைப் பார்களே தவிர, நான் இன்றும் அவர்களுடைய செமதிதான். ” என்றார்.
அவருடைய புத்தக வாசிப்பு பற்றிக் கேட்கை யில், “முன்பைப்போல இப்போது அதிக நேரம் ஒதுக்கிப் படிக்க முடியவில்லை. ஆனால் எப் படியோ நேரத்தை உருவாக்கிக்கொள் கிறேன். ஒரு மணிநேரம் முன்னதாக எழுவது. ஒரு மணி நேரம் தாமதமாக உறங்குவது என்று நேரம் ஒதுக்கி புத்தகங்கள் படிக்க முயல்கிறேன். ஆனால் கட்டாயப்படுத்தி படித்தே ஆகவேண் டும் என்று என் உடலையும் மனதையும் வற்புறுத் துவது இல்லை.
ஒரு நாளைக்கு 6 மீட்டிங் சென்றால் மனது சோர் வடைந்துவிடுகிறது. அந்த நாட்களில் கண்டிப் பாக படித்தே ஆகவேண்டும் என்பது இல்லை. ஆனால் பெரும்பாலும் படிப்பதற்கு நேரம் ஒதுக்கிவிடுவேன். படிப்பதை நிறுத்துவது உயிர் வாழ்வதை நிறுத்துவதற்குச் சமம். ஜென், லாசா, தாவோ, நம்முடைய சித்தர்களுடய புத்தகங்கள் அதிகம் படிப்பேன்.
இப்போது ஐந்து, ஆறு வருடங்களாக சமூகம் சார்ந்த புத்தகங்கள், சமூக நீதி சார்ந்த புத்தகங் கள் படிக்க ஆரம்பித்துள்ளேன். ஆனால் பொது வாக எனக்கு அதிக ஆர்வமுள்ள பகுதி கவிதை கள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழி பெயர்ப்பு நாவல்கள், புதிதாக வரும் தற்காலப் புத்தகங்கள்தான். நான் நிறைய சினிமாக்கள் பார்ப்பேன். மிஷ்கின், பாலா எல்லாரும் பல நல்ல திரைப்படங்களைப் பரிந்துரைப்பார்கள். உலக சினிமா என்றில்லாமல், எம்.ஜி.ஆர். படங்கள் எல்லாம் எங்கள் ஊர் சினிமா கொட்டகைகளில் அமர்ந்து பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும்.
பொதுவாகவே தியேட்டரில் பார்ப்பதை விரும்பு வேன். தற்போது பிடித்த நடிகர் என்றால் விஜய் சேதுபதி. இது ஒவ்வொரு காலத்திலும் மாறும். கமல் ஒரு அற்புதமான கலைஞன். ரஜினி அவர் களின் ஹ்யூமர் சென்ஸ் ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார்.