‘கள்ளன்’ திரை விமர்சனம்
இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்த மக்களை பல்வேறு காரணங்களை முன்வைத்து அதிலிருந்து பிரித்தெடுத்து பிழைப்புக்காக அலைய விடுகின்றன அரசாங்கங்கள்.
அப்படித்தான், காலங்காலமாக உணவுக்காக மட்டுமே வேட்டையாடி வாழ்க்கை நடத்தி வந்த வேட்டைச்சமூகத்தை, திடீரென் ஒருநாள் இனிமேல் வேட்டை யாடுவது குற்றம் எனச் சொல்கிறது அரசாங்கம். அதன்பின் அம்மக்கள் வாழ்க்கை என்னாகிறது? என்பதை உணர்வுப்பூர்வமாக விளக்கி யிருக்கிறது கள்ளன். இந்தப் படத்தின் கதை 1980-களில் நடைபெறுகிறது என்பதை சில காட்சிகளின் மூலமாகத்தான் அறிய முடிகிறது.
நட்பு, காதல், பகை, சூழ்ச்சி, வீழ்ச்சி என்று பல வித்தியாசமான கோணங்களில் இந்தப் படத்தின் திரைக் கதையை எழுதியிருக்கிறார் சந்திரா. பெண் இயக்குநர் என்பதால் குத்துப் பாடல் இருக்காது என்கிற நம்பிக்கையை உடைத்தெறிந் திருக்கிறார் இயக்குநர் சந்திரா. அந்தக் குத்துப் பாடலில் ஆடும் நடிகையின் தேர்வு, நடன அமைப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு அனைத்துமே வித்தியாசமாக இருந்தது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் வி.மதியழகன், எஸ். ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் கரு.பழனியப்பன், நமோ நாராயணன், சௌந்தர்ராஜா, நிகிதா, மாயா, வேலா ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தேனி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வரும் கரு.பழனியப்பனின் தந்தை ஒரு வேட்டைக்காரர். சிறு வயதிலேயே அம்மாவை இழந்து அப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்தவர் பழனி. அவருடைய அப்பா அடிக்கடி மகனுக்கு சொன்ன அறிவுரை பசிக்காக மட்டும்தான் வேட்டையாட வேண்டும் என்பது..!
அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் வேட்டையாடி வந்த பழனிக்கு மாநில அரசு வேட்டையாடுதலை தடை செய்த பின்பு வேலையில்லாமல் போகிறது. எங்கே னும் வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம் என்று நினைக்கவே முடியாத குண முடையவர் அவர். இதனால் அவருடைய நண்பர்களின் தூண்டுதலில் கள்ளத் துப்பாக்கி தயாரித்து விற்கிறார். இதிலும் சிக்கல்கள் வர.. அடுத்து திருட்டுத் தொழிலில் இறங்குகிறார்.
திருடப் போன இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு கொலை விழுகிறது. இதனால் கூட்டாளிகளுடன் தப்பிக்க முடியாமல் தவிக்கிறார் பழனி. போலீஸ் இவர்களைக் குறி வைத்துப் பிடிக்க வருகிறது.
தப்பித்து ஓடி ஒளியும்போது வளர்ப்புத் தந்தையால் பாலியல் தொல்லைக்குள் ளாகும் ஹீரோயின் நிகிதாவைக் காப்பாற்றுகிறார் பழனி. ஆனால் நிகிதாவோ பழனியுடனேயே பயணம் செய்கிறார். கேரளாவுக்கு வந்த பழனி, நிகிதாவோடு ஒரே வீட்டில் தங்கி ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறார். கூடவே கள்ளத் துப்பாக்கியும் செய்து தருகிறார். நிகிதாவைத் திருமணமும் செய்து கொள்கிறார்.
இதற்கிடையே கேரளாவில் கள்ளத் துப்பாக்கியால் சிக்கிக் கொள்கிறார். ஏற் கெனவே இருந்த வழக்கிற்காக தேனி ஜெயிலில் அடைக்கப்படுகிறார். இங்கே சிறைக்குள் தனியாக சாம்ராஜ்யம் நடத்திவரும் நமோ நாராயணனுடன் நட்பா கிறார் பழனி.
தனது மனைவி நிகிதாவை மறுபடியும் அவளுடைய வளர்ப்புத் தந்தை அழைத் துச் சென்றதை பார்த்து கோபமாகும் பழனி.. சிறையில் இருந்து தப்பிச் சென்றா வது மனைவியைக் காப்பாற்ற நினைக்கிறார். இதற்காக பக்காவாக பிளான் செய்து தப்பிச் சென்று தனது மனைவியைக் காப்பாற்றுகிறார்.
தனது மனைவியுடனும், நண்பர்களுடன் நமோ நாராயணனின் மனைவி இருக் கும் கொடைக்கானலுக்கு வருகிறார் பழனி. இப்போது கடைசி முயற்சியாக ஒரேயொரு பெரிய கொள்ளையை நடத்திவிட்டு நமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள் அனைவரும்.
இதற்காக ஆந்திரா பார்டரில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியைக் குறி வைக்கிறார் கள். இந்தக் கிளப்பில் கொள்ளையடித்து கிடைக்கும் பணத்தை அனைவரும் ஷேர் செய்து கொண்டு செட்டில் ஆவோம் என்ற எண்ணத்துடன் கிளம்புகிறார்கள்.
அவர்களின் இந்த எண்ணம் பலித்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தக் ‘கள்ளன்’ படத்தின் சுவையான திரைக்கதை.
அதிகம் படிப்பறிவில்லாத.. வெளியுலகம் அறிந்திராத கேரக்டருக்கு கரு.பழனியப் பன் போகிறார்! நாயகியான நிகிதாவுக்கு படம் முழுவதும் சோகத்தை முகத்தில் அப்பிக் கொண்டிருக்கும் கேரக்டர். அவரது கண்களை வைத்தே பல கதைகளைச் சொல்லலாம் போலிருக்கிறது.
இவர்கள் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் நமோ நாராயணனின் மனைவியாக நடித்திருக்கும் மாயா. வில்லி கதாபாத்திரம்தான் என்றாலும் அதைச் செவ்வனே செய்திருக்கிறார். படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகளில் மாயா மூலமாக ஏற்படும் டிவிஸ்ட்டுகள் எதிர்பாராதது என்றாலும் அதற்காக நிறையவே உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
வேலராமமூர்த்தி, செளந்திரராஜா, முருகன் உட்பட பலரும் கொடுக்கப்பட்ட வேடங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
வேலராமமூர்த்தி பேசும் வசனங்கள் மூலம் தன் சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சந்திரா தங்கராஜ்.
ஒரு மிகப்பெரிய சமுதாயச் சிக்கலில் தொடங்கி ஒரு குழு ஒரு குடும்பம் எனத் தொடர்ந்திருக்கிறது திரைக்கதை. இந்த வரிசை தலைகீழாக மாறியிருந்தால் முக்கியமான பதிவாக அமைந்திருக்கும்.
எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக் களத்தை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றன. கே‘யின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை பொருத்தம்.
ஒளிப்பதிவாளர்கள் எம்.எஸ்.பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் இருவரின் ஒளிப்பதிவில் குறையில்லை. கொள்ளையடிக்கப் போன இடத்தில் நடைபெறும் சண்டை காட்சியையும், இரவு நேர துரத்துதல் காட்சிகளின்போதும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் நிஜத்துடன் நெருங் கியதாக இருந்தது. சண்டை இயக்குநர்களுக்கும் நமது பாராட்டுக்கள்.
தனது முதல் படத்திலேயே அனைவராலும் பேசப்பட வைப்பதுபோல் ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக் கும் இயக்குநர் சந்திரா தங்கராஜ்.