அஷ்ட நாகன் – 25| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 25| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாகங்கள் பற்றிய பல அரிய செய்திகளை இத்தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முகப்பிலும் பார்த்து வந்துள்ளோம். இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை விஷயங்களும் இந்து மதத்தின் ஆனி வேராக கருதப்படும் விஷயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. உண்மையில் நாக சாஸ்திரம் என்ற ஒரு நூல் உள்ளதா என்று கேட்டால் உண்டு என்று தான் பதில் கூற வேண்டும் என்று நினைக்கிறேன்.

“நாக சாஸ்திர ஏடுகள்” கண்டிப்பாக தெய்வீக நாகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இத்தொடரில் மற்றொரு முக்கியமான விஷயம் “ஜீவ சமாதி நாகம்” ஆகும். உண்மையில் ஜீவ சமாதி அடைந்த நாகம் உள்ளதா என்ற கேள்வி தங்களிடம் இருந்து எழுவதை என்னால் உணர முடிகிறது. ஆம்,கண்டிப்பாக உள்ளது.

ஜீவ சமாதி நாகம் என்பதன் பொருள் படமெடுத்து ஆடும் ஒரு நாகமானது தன்னுடைய உடலை தானே சுற்றிக்கொண்டு படமெடுத்த நிலையில் தன் உயிரின் இயக்கத்தை சில காலங்கள் நிறுத்தி வைத்திருக்கும். இந்த இடத்தில் குறிப்பிட்ட அந்நாகமானது சாகவில்லை, அது எப்போது வேண்டுமானாலும் தன் உயிரின் இயக்கத்தை இயக்க முடியும் என்பது பொருளாகும்.

ஜீவ சமாதி நாகம் எங்குள்ளது என்று அடுத்து ஒரு கேள்வி உங்களிடமிருந்து எழுவதையும் என்னால் உணர முடிகிறது.

ஜீவசமாதி அடைந்த நாகம் தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஓடப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் உள்ளது. இங்குள்ள ஜீவ சமாதி அடைந்த நாகத்தின் உடல் இன்றளவும் அழுகாமல் உருக்கொலையாமல் அப்படியே உள்ளது பேரதிசயம்.

நீங்களும் ஜீவ சமாதி நாகத்தை தரிசனம் செய்து பலன் பெறுங்கள். நாக லோக நாகங்களும், இப்புவியில் உள்ள தெய்வீக நாகங்களும் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

நந்தனும் அரவிந்தனும் அஷ்டநாக லிங்கேஸ்வரர் கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தனர்‌. அவர்கள் கோயிலில் அடியெடுத்து வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்த மாதிரி சுரீர் என்ற உணர்வு ஏற்பட்டது. இருவருக்கும் ஒரே நேரத்தில் மயக்கம் வருவது போல இருந்தது. கோயிலுக்குள் மெல்ல மெல்ல உள்ளே சென்றனர்.

கோயிலுக்குள் அங்கங்கே சில நாகங்கள் நாக மாணிக்க ஒளியில் தங்களை மறந்த நிலையில் இருந்தன. கோயிலுக்குள் ஒரு வில்வ மரம் இருந்தது‌. அதில் 21 அடி நீளமுள்ள ஒரு ராஜ நாகம் அந்த மர உயரத்திற்கு படமெடுத்த நிலையில் கம்பீரமாக காணப்பட்டது.

கோயில் வளாகத்தில் உள்ள தூண்களில் நிறைய புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன. அர்த்த மண்டபத்தில் நாகங்களின் உருவம் பொறிக்கப்பட்ட பல அரிய தூண்கள் அழகாக காட்சியளித்தன. அரவிந்தன் தன் கனவு பலித்துவிடுமோ என்ற அச்சத்தில் பயந்து காணப்பட்டான். நந்தன் தன் வசமுள்ள நாக சாஸ்திர ஏடுகளை கருவறையில் உள்ள அஷ்டநாக லிங்கேஸ்வரர் மடியில் சேர்த்து விட வேண்டும் என்ற எண்ணத்திலே குறியாக இருந்தான்.

“நந்தா ! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. இந்த இடத்ததுக்கு வந்ததும் எனக்கு ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு. இதுக்கு முன்ன இந்த இடத்துக்கெல்லாம் வந்த மாதிரி இருக்கு” என்ற புலம்பினான்.

“அரவிந்தா ! நீ எதுக்கும் பயப்படாத. இந்த நாக சாஸ்திர ஏடுகளை இந்த கோயில் கருவறையில் இருக்குற “அஷ்ட நாக லிங்கேஸ்வரர்” மடியில வச்சிட்டு உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பிடலாம்” என்றான் நந்தன்.

“நந்தா ! ஒரே ஒரு தடவை இந்த நாக சாஸ்திர ஏடுகள்ல என்ன இருக்குன்னு பிரிச்சு படிச்சி பார்த்துடலாமா?” என்ற ஆர்வம் பொங்க அரவிந்தன் கேட்டான்.

“அரவிந்தா. . . இந்த நேரத்துல அதுவும் இந்த இடத்துல இந்த ஏடுகளை பிரிச்சு படிக்க நினைக்கறது எனக்கு சரியா படல. “

“நீ ஒண்ணும் நாக சாஸ்திர ஏட்டுக்கட்டை பிரிக்க வேண்டாம்‌. நானே பிரிக்குறேன்” என்று கூறிவிட்டு நந்தன் கையிலிருந்த ஏட்டுக்கட்டை அரவிந்தன் வெடுக்கென்று பிடிங்கினான்.

அரவிந்தன் செயலால் நந்தனே அதிர்ச்சி அடைந்தான்‌.

அரவிந்தன் நந்தன் கையிலிருந்த ஏட்டுக்கட்டை பிடிங்கியவுடன் கோயிலில் அங்கங்கே இருந்த அத்தனை நாகங்களும் அரவிந்தனை நோக்கி வேகவேகமாக ஊர்ந்து வந்து அரவிந்தனையும் நந்தனையும் சூழ்ந்து கொண்டது.

குறிப்பாக, ‘உன்னை எந்த நேரத்திலும் தீண்டிவிடுவேன்’ என்று எச்சரிப்பது போல தன் பிளவுபட்ட நாக்கை நீட்டி பெரும்பாலான நாகங்கள் அரவிந்தனை மிரட்டின.

அரவிந்தனுக்கு மூச்சே நின்று விடுவது போல இருந்தது. எந்த நாகம் எந்த பக்கமிருந்து எப்போது கொத்துமோ என்ற எண்ணத்தில் அரவிந்தன் நடுநடுங்கினான்‌. அவனுக்கு வியர்வை அருவி நீர் போல உடலெங்கும் வழிந்தோடியது‌. திக் ! திக் !நொடிகள் அரவிந்தனை கொல்லாமல் கொன்றது.

நந்தன் சற்றும் யோசிக்காமல் அரவிந்தன் கையிலிருந்த நாக சாஸ்திர ஏடுகளை பிடுங்கினான். நாக சாஸ்திர ஏடுகள் இப்போது நந்தன் கையில் காட்சியளித்தது.

நாக சாஸ்திர ஏடுகள் அரவிந்தன் கையிலிருந்து நந்தன் கைக்கு மாறியதும் நந்தனையும் அரவிந்தனையும் சுற்றி நின்ற அத்தனை நாகங்களும் தங்கள் சீற்றத்தை விடுத்து தாங்கள் முன்பு கோயில் வளாகத்தில் ஆங்காங்கே இருந்த அதே இடத்திற்கு சென்றன.

அந்த காட்சியைக் கண்ட அரவிந்தன் வாயடைத்து போனான்.

“அரவிந்தா ! நான் சொன்ன மாதிரி இந்த ஏடுகளை சாமி மடியில வச்சிட்டு உடனே நாம இந்த இடத்தை விட்டு கிளம்பிடலாம்” என்றான் நந்தன்.

அரவிந்தன் பேச வார்த்தைகளின்றி நந்தனை பின் தொடர்ந்தான்.

சில நொடிகளில் நந்தனும் அரவிந்தனும் கோயிலின் கருவறையை அடைந்தனர்‌. கோயிலின் கருவறையில் இரண்டு சரவிளக்குகள் சன்னமான வெளிச்சத்தில் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. இந்த விளக்கை யார் ஏற்றி வைத்திருப்பார்கள் என்றெல்லாம் நந்தனுக்கும் அரவிந்தனுக்கும் கேள்வி எழவில்லை. அந்த விளக்கு வெளிச்சத்தில் அஷ்ட நாக லிங்கேஸ்வரர் மிக ரம்யமாக காட்சியளித்தார்.

அஷ்ட நாக லிங்கேஸ்வரரை சுற்றி படமெடுத்த நிலையில் எட்டு திசைகளை நோக்கி படமெடுத்த நிலையில் அஷ்ட நாகங்களின் சிலைகள் மிக கம்பீரமாக ஆக்ரோஷமாக காட்சியளித்தன்.

அந்த காட்சி அரவிந்தனை நடுநடுங்க செய்தது. இவை எல்லாம் அரவிந்தனின் கனவில் வந்த காட்சிகள்.

அடுத்து அரவிந்தனும் நந்தனும் கண்ட காட்சி இருவரையும் மிரள செய்தது.

அது “ஜீவ சமாதி நாகம். “

அந்த ஜீவ சமாதி நாகத்தை கண்டதும் அரவிந்தனுக்கு மயக்கம் வராத குறையாக தலையை சுற்றியது. நந்தன் தன் வாழ்நாளில் இப்படி ஒரு காட்சியை கற்பனைக் கூட செய்ததில்லை.

அரவிந்தனும் நந்தனும் கருவறைக்குள் போகலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்தில் இருந்தனர்.

“நந்தா ! இது. . . இது. . . இது தான் கனவுல பார்த்த அதே நாகம். இதை கனவுல நான் தொட்டவுடனே இந்த நாகம் ஒரு அழகான பொண்ணா மாறி என்னை கொல்ல பார்த்தது. இதே மாதிரி அந்த கனவுல நீயும் நானும் மட்டும் தான் இருந்தோம்” என்று அரவிந்தன் புலம்பி தள்ளினான்.

நந்தனுக்கு அரவிந்தனின் வார்த்தைகளை முழுமையாக நம்புவதா? வேண்டாமா? என்ற குழப்பம் மேலோங்கியது.

“அரவிந்தா ! நீ கனவுல இந்த நாக சாஸ்திர ஏடுகளை பார்த்தியா?”

“அது. . . அது வந்து. . . “

“டேய் ! நல்லா யோசிச்சு சொல்லுடா?” என்று நந்தன் அரவிந்தனை நிமிண்டினான்.

சில நொடிகள் யோசித்த அரவிந்தன்,” நந்தா ! நான் கண்ட கனவுல நாக சாஸ்திர ஏடுகளை பார்க்கவே இல்ல” என்றான் அரவிந்தன்.

“டேய் ! நான் சொல்றதைக் கேளு. கனவுல கண்ட விஷயம் அப்படியே நடக்கணும்னு அவசியமில்ல. இப்போ நான் சொல்றதை கவனமாக கேட்டுக்கோ. நாம ரெண்டு அஷ்ட நாக லிங்கேஸ்வரரை மனசார வேண்டிக்கிட்டு கருவறைக்குள்ள போவோம். இந்த சாமிக்கு உண்மையா சக்தி இருந்தா நம்ம ரெண்டு பேரையும் காப்பாத்தும். இன்னொரு முக்கியமான விஷயம். நாம நாக சாஸ்திர ஏடுகளை சாமி மடியில வச்சிட்டு இந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிடணும். நாம ரெண்டு பேரும் எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஜீவ சமாதி நாகத்தை மட்டும் தப்பித்தவறியும் தொடக்கூடாது” என்று நந்தன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தான்.

‘கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த நந்தனே இந்த அஷ்ட நாக லிங்கேஸ்வரர் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் பேசும் போது இவ்வளவு தூரம் பேசும் போது தான் மட்டும் இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமல் இருக்க கூடாது’ என்று எண்ணிய அரவிந்தன் நந்தனுடன் கருவறைக்குள் செல்வதற்கு இசைந்தான்‌.

இருவரும் ஒரே நேரத்தில் கருவறைக்குள் தங்கள் வலது காலை எடுத்து வைத்தனர்.

இருவரும் கருவறைக்குள் தங்கள் கால் பதித்ததும் இருவருக்கும் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டு இருவருக்கும் தங்கள் முன் ஜென்ம நினைவுகள் ஒரு குறும்படம் போல அவர்களின் மனக்கண்ணில் ஓட ஆரம்பித்தது‌‌.

சுமார் 300 வருடங்களுக்கு முன்பு.

நாக லோகத்தில் காதல் ஜோடிகளாக வாழ்ந்துக் கொண்டிருந்த நாக நந்தன்-நாக நந்தினி என்ற இரு இச்சாதாரி நாகங்களும் பூவுலகில் கொல்லிமலை வனத்தில் ஈசனுக்காக இச்சாதாரி நாகங்கள் பிரத்யேகமாக கட்டி எழுப்பிய “அஷ்ட நாக லிங்கேஸ்வரர்” திருக்கோயிலை காண்பதற்கு கண்டு களிக்கும் ஆசையில் பூவலகிற்கு வந்தனர்.

“சுவாமி ! இந்த வனம் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மிக அற்புதமாக உள்ளது. இந்த வனத்தில் ஈசனுக்காக அதிசக்தி வாய்ந்த அஷ்ட நாகங்களோட சேர்ந்து தெய்வீக இச்சாதாரி நாகங்களும் சேர்ந்து உருவாக்கிய “அஷ்ட நாக லிங்கேஸ்வரர்” கோயிலை காண்பதற்கு ஆவலாக உள்ளேன்” என்றாள் நாக நந்தினி.

“நந்தினி ! நீ என் தேவ தேவி. என் ஜீவ ஜோதி. உன் விருப்பமே என் விருப்பம். ஆனால், ஒரு நிபந்தனை. நாக லோக வாசிகளான நாம் இந்த பூவுலகில் வெகு நேரம் இருக்கக் கூடாது. எனவே, இன்று மாலை அந்தி சாயும் வேளைக்குள் நாம் நம் லோகத்திற்கு சென்றுவிட வேண்டும்” என்று நாக நந்தன் அன்போடும் அதே நேரம் எச்சரிக்கையோடும் கூறினான்.

“சரி ! சுவாமி. தங்கள் சித்தப்படியே எல்லாம் நடக்கட்டும்” என்று புன்முறுவலோடு நாக நந்தினி கூறினாள்.

நாக நந்தினியும், நாக நந்தனும் உரையாடிக் கொண்டிருந்ததை அவர்களுக்கு அருகே இருந்த சுனையில் நீர் அருந்த வந்த “வீரேந்திரன்” என்ற இளம் துறவி கேட்டுவிட்டான்.

வீரேந்திரன் நாக வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவன். நாகர்களின் தலைவராக கருதப்படும் “ஆதிசேஷனை” எண்ணி தீவிரமான தவத்தில் இருந்து வருகிறேன்.

வீரேந்திரன் ஒரு கொல்லிமலை வாசி. ஒருமுறை யதார்த்தமாக ஒரு இச்சாதாரி நாகத்தை மனித ரூபத்தில் தரிசிக்க நேரிட்டது‌. அந்த ஆண் இச்சாதாரி நாகத்தை வணங்கி தானும் ஒரு இச்சாதாரி நாகமாக மாற வேண்டும் என்று கூறினான். அந்த ஆண் இச்சாதாரி நாகமானது வீரேந்திரனை பார்த்து ‘நீ ஆதிசேஷனை குறித்து தவிமியிற்று. உனக்கு விதி இருந்தால் உன் எண்ணம் கைக்கூடும்’ என்று கூறியது.

‘ஒருவேளை தனக்கு ஆதிசேஷன் காட்சி தரவில்லை என்றால் எப்படி தான் ஒரு இச்சாதாரி நாகமாக மாறுவது?’ என்று வீரேந்திரன் கேள்வி எழுப்பினான்.

வீரேந்திரனின் மன நிலையை புரிந்துக் கொண்ட அந்த ஆண் இச்சாதாரி நாகமானது வீரேந்திரனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில் மற்றொரு யோசனை கூறியது. அது. . .

‘மானிடனே ! ஆதிசேஷன் காட்சி தர தாமதமானால் ஒருவேளை நீ ஒரு பெண் இச்சாதாரி நாகத்தை மணந்துக் கொண்டால் நீ அந்த பெண் இச்சாதாரியின் மூலம் நாக லோகத்தை அடைந்து இச்சாதாரி நாகம் என்னும் பெரும்பேறு அடையலாம்’ என்று கூறிவிட்டு அந்த ஆண் இச்சாதாரி நாகம் மானிட ரூபத்திலிருந்து மீண்டும் நாக ரூபத்திற்கு உருமாறி தன் வழியில் செல்ல ஆரம்பித்தது.

பேராசைக் கொண்ட வீரேந்திரனுக்கு தான் ஒரு இச்சாதாரி நாகமாக வேண்டும் என்ற விபரீத ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

வீரேந்திரன் பல வருட தவத்தின் பயனாக அவனுக்குள் சில நாக அம்சமுள்ள சக்திகளும் மற்றும் உருமாற்றம் அடையும் சக்தியும் கிடைத்தன. ஆனால், ஆதிசேஷனின் திவ்ய தரிசனமும்,இச்சாதாரி நாக அந்தஸ்தும் கிடைக்கவில்லை.

அவன் மனதிற்குள் விரக்தி எண்ணம் புகுந்து தாண்டவமாடியது. இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த வீரேந்திரன் கண்ணில் தான் இப்போது நாக நந்தன்-நாக நந்தினி என்னும் இச்சாதாரி காதல் ஜோடிகள் கண்ணில் பட்டன.

நாக நந்தினியை பார்த்தவுடன் வீரேந்திரனுக்கு மோக உணர்வு தலைக்கேறி போதை ஊட்டியது. எப்படியாவது இந்த பெண் இச்சாதாரி நாகத்தை திருமணம் செய்துக் கொண்டு தானும் ஒரு இச்சாதாரி நாகம் என்னும் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவன் நாக நந்தினியை அடைய திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

“சுவாமி ! இங்கு மானிட வாசம் வீசுவது போல உள்ளது” என்று நாக நந்தனி,நாக நந்தனுக்கு எச்சரிக்கை ஊட்டினாள்‌.

இருவரும் சற்றும் யோசிக்காமல் அவ்விடத்தை விட்டு அகன்று “அஷ்ட நாக லிங்கேஸ்வரர்” திருக்கோயிலுக்கு சென்று ஈசனை மனதார பூஜித்தனர்.

“சுவாமி ! ஈசனுக்கு என் கரங்களால் நாக லிங்க மலர்கள் சாற்றி வணங்க வேண்டும் என்ற ஆசை எழுகிறது” என்ற தன் ஆசையை நாக நந்தினி,நாக நந்தனிடம் கூறினாள்.

நாக நந்தனும் “சரி. உன் எண்ணத்தை நிறைவேற்றுகிறேன். நீ எனக்காக இங்கே காத்திரு” என்று கூறிவிட்டு நாக லிங்க மலர் பறிக்க கொல்லிமலை வனத்திற்குள் சென்றான்.

நாக லிங்க மலர்கள் பறிக்க வந்த நாக நந்தனை மிக யதார்த்தமாக சந்திப்பது போல் சந்தித்த வீரேந்திரன் பேச தொடங்கினான்.

“சுவாமி ! நான் நாக வழிபாடு புரிபவன். ஆதிசேஷன் மீது அதீத பக்தி உள்ளவன். ஆதிசேஷனை எண்ணி இன்னும் சற்று நேரத்தில் ஒரு யாகம் புரிய உள்ளேன். தாங்கள் அந்த யாகத்தில் கலந்துக் கொண்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்” என்று கண்ணீர் மல்க வீரேந்திரன் கூறினான்.

வீரேந்திரன் வார்த்தைகளுக்கு மனம் இரங்கிய நாக நந்தன் தர்ம சங்கடத்தோடு யாகத்தில் கலந்துக் கொண்டான்.

வீரேந்திரன் யாகத்தை தொடங்கினான். யாகத்தில் கலந்துக் கொண்ட நாக நந்தன் யாகத்தில் ஆதிசேஷனை எண்ணி சில நிமிடங்கள் தியானத்தில் ஆழ்ந்தான்.

நாக நந்தன் தியானத்தில் ஆழ்ந்த நேரத்தில் யாகத்தீயில் நாக நந்தனை தந்திரமாக தள்ளிவிட்டு துடிதுடிக்க வீரேந்திரன் கொன்றான்.

நாக நந்தன் “நாக நந்தினி. . . ” என உரக்க கத்திக் கொண்டே உயிர் நீத்தான். யாகத்தியில் அவன் சாம்பல் மட்டுமே மிஞ்சியது.

அஷ்ட நாக லிங்கேஸ்வரர் கோயிலில் சுடர் விட்டு எரிந்துக்கொண்டிருந்த சரவிளக்குகள் தானாக அணைந்து விட்டது. இதனை அபசகுணமாக கருதிய நாக நந்தினி, நாக நந்தனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று எண்ணி நாக நந்தனைத் தேடி கொல்லிமலை வனத்தில் சுற்றி திரிந்தாள்.

“நாக நந்தினி ! நான் இங்கு இருக்கிறேன்” என்று தன் கரங்களில் சில நாக லிங்க பூக்களோடு நின்றுக் கொண்டிருந்த நாக நந்தன் புன்னகையோடு கூறினான்.

அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, “யார் நீ?என் சுவாமியை என்ன செய்தாய்?” என்று நாக நந்தினி கேள்வி எழுப்பினாள்.

ஆம். நாக நந்தன் ரூபத்தில் தன் உருமாறும் சக்தியால் நாக நந்தினி முன் நிற்பவன் வீரேந்திரன்.

தன் வேஷம் களைந்துவிட்டதை எண்ணி கோபமடைந்த வீரேந்திரன் நடந்ததை முழுமையாக கூறினான். பின்னர்,நாக நந்தினியை பணிய வைத்து அவளை அடைய எண்ணினான்.

மிகுந்த ஆவேசமடைந்த நாக நந்தினி,”உன் பேராசையால் தான் என் சுவாமி கொல்லப்பட்டார். என் அடுத்த பிறவியில என் சுவாமியை கரம் பிடிப்பேன். அதுவரை அஷ்ட நாக லிங்கேஸ்வரர் கோயில் நான் நாக ரூபத்துல “ஜீவ சமாதி”யில இருப்பேன். நீயோ அல்லது என் சுவாமியோ ஜீவ சமாதியில் இருக்கும் என்னைத் தொடும் போது உயிர்த்தெழுவேன். உன்னை இந்த பிறவியில இல்ல இனி எந்த பிறவியிலும் சும்மா விடமாட்டேன்” என்று கூறிவிட்டு, தன் விஷப்பற்கள் பதிய வீரேந்திரனை தீண்டிவிட்டு தானும் அஷ்ட நாக லிங்கேஸ்வரர் திருக்கோயில் நாக நந்தினி நாக ரூபத்தில் ஜீவ சமாதி அடைந்தாள்.

நாக நந்தன் தான் இந்த பிறவியில் நந்தன்.

நாக நந்தினி தற்போது நாக ரூபத்தில் ஜீவ சமாதியில் இருக்கிறாள்.

வீரேந்திரன் தான் இந்த பிறவியில் அரவிந்தன்.

தங்களின் முற்பிறவியின் அத்தனை விஷயங்களும் நந்தனுக்கும் அரவிந்தனுக்கும் ஒரு குறும்படம் போல தங்கள் எண்ணத்தில் ஓடி மறைந்தது.

முன் ஜென்ம நினைவு வந்த நந்தனும் அரவிந்தனும் இருவரும் மாறி மாறி வெறித்து பார்த்துக் கொண்டனர்.

நந்தன் முதல் வேளையாக தன் வசமிருந்த நாக சாஸ்திர ஏடுகளை ஈசன் மடியில் வைத்தான்.

ஜீவ சமாதியில் இருந்த நாக நந்தினியை அழிப்பதற்காக அரவிந்தன் எண்ணம் கொண்டான்.

கோயிலின் அருகிலிருந்த சரவிளக்கின் நெருப்பில் நாக ரூபத்தில் உள்ள நாக நந்தினியை எரித்து விட வேண்டும் என்று துடிதுடித்தான்.

“வீரேந்திரா. . . . “

“நாக நந்தா. . “

அரவிந்தனும் நந்தனும் தங்கள் முன் ஜென்ம நினைவில் தங்கள் முன் ஜென்ம பெயரில் தங்களின் பெயரில் தங்களை அழைத்துக் கொண்டனர்.

நந்தன் தன் நாக நந்தினியை உயிர்த்தெழ வைக்க வேண்டும் என்று துடிதுடித்தான்.

அரவிந்தனும் நந்தனும் தங்களுக்கு அடித்துக் கொண்டனர்.

சண்டை ஒருக்கட்டத்தில் வலுக்கவே மிக யதார்த்தமாக அரவிந்தனின் கைகள் ஜீவ சமாதி நாகத்தின் மீது பட்டது.

அடுத்த நொடி அந்த இடமே மிக பிரகாசமாக காணப்பட்டது.

ஜீவ சமாதியில் இருந்த நாக நந்தினி உயிர் பெற்று மானிட ருபத்தை அடைந்தாள்.

நாக நந்தினியைக் கண்ட நந்தன் ஆனந்த கண்ணீர் சிந்தினான்.

நந்தன் அசந்த நேரம் அரவிந்தன் நந்தனின் தலையை கருவறையின் சுவரில் ஒரு மோது மோதினான்.

அடுத்த சில விநாடிகளில் நந்தனின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. நந்தன் மயக்கமுற்று கீழே சாய்ந்தான்.

கோபம் அடைந்த நாக நந்தினி அரவிந்தனை கொல்ல அவனை நோக்கி வேகவேகமாக அவனருகில் வந்தாள்.

அரவிந்தன் சற்றும் பயப்படாமல் அவள் கழுத்தை பிடித்து நெறித்தான்‌. அவள் “அஷ்ட நாக லிங்கேஸ்வரா. . . ” என்று அலறினாள்.

கருவறையில் அஷ்ட நாக லிங்கேஸ்வரரை சுற்றி இருந்த எட்டு நாக சிலைகளும் உயிர் பெற்று எட்டு தலை நாகமாக மாறி நந்தனை சுய நினைவுக்கு கொண்டு வந்தது‌. படுமெடுத்த நிலையில் எட்டு நாகங்களும் நந்தனுக்கு குடை போல காட்சியளித்தது.

நந்தன் அஷ்ட நாகனாக காட்சியளித்தான்.

அந்த காட்சியைக் கண்ட அரவிந்தன் பயத்தில் கோயிலை விட்டு வெளியேற எண்ணி ஓடினான்.

நந்தனுக்கும் நாக நந்தினிக்கும் தங்களின் நாக சக்தி மீண்டும் முழுமையாக கிடைத்தது.

நந்தன் “நாக நந்தன்” ஆனான்.

கோயிலை விட்டு வெளியேறி தப்பிக்க எண்ணிய அரவிந்தனை நாக நந்தனும் நாக நந்தினியும் தன் விஷப்பற்களால் தீண்டி கொல்ல முடிவெடுத்தனர்.

அஷ்ட நாகங்கள் மீண்டும் சிலையாக எட்டு திசைகளில் காட்சியளித்தன.

அஷ்டநாக லிங்கேஸ்வரர் மடியில் “நாக சாஸ்திர ஏடுகள்” கம்பீரமாக காணப்பட்டது.

மானிட ரூபத்திலிருந்த நந்தன் அரவிந்தனை துரத்தி விரட்டி அடித்தான்.

நந்தன் அடித்த அடியில் அரவிந்தன் வாயிலிருந்து ரத்தம் கசிந்து அவன் வலது கைகளில் சிந்தியது.

நந்தன் மீண்டும் பலமாக அரவிந்தனை அடித்தான்.

அப்போது கோயிலுக்கு வெளியில் நின்றுக் கொண்டிருந்த “யோகினி” மீது மோதி அரவிந்தன் அவள் மடியில் சாய்ந்தான்.

அரவிந்தன் வலது கையிலிருந்த இரத்தம் யோகினியின் நெற்றியில் குங்கும திலகம் போல மின்னியது.

அரவிந்தனை கொல்ல வந்த நந்தனை யோகினி கையெடுத்து கும்பிட்டாள்.

யோகினியை பார்த்ததும் நந்தனுக்கு தன் இப்பிறவியின் நினைவும் முற்பிறவியின் நினைவும் மாறி மாறி வந்தது.

நந்தன் அரவிந்தனை எதுவும் செய்யவில்லை.

நாக நந்தினி, யோகினி மீது இரக்கம் கொண்டு நடந்த அத்தனை விஷயங்களையும் ஒன்று விடாமல் கூறினாள்.

அரவிந்தன் முற்பிறவியில் கெட்டவனாக இருந்தாலும் அவன் ஆதிசேஷனின் அதிதீவிர பக்தன். எனவே,வீரேந்திரன் என்னும் அரவிந்தனை மன்னித்து அவனை கொல்லாமல் நாக நந்தினியும் விட்டு விட்டாள்.

நாக நந்தனும் நாக நந்தினியும் நாக ரூபத்திற்கு உருமாறி நாக லோகத்திற்கே மீண்டும் சென்று இல்வாழ்க்கையில் இணைந்தனர்.

புல்லாங்குழல் சித்தர் தன் பேராசையால் திக்பிரமை பிடித்து கொல்லிமலை வனத்தை வலம் வந்துக் கொண்டிருந்தார்.

ஐந்து தலை நாக சித்தரை நேரில் கண்டு அவரின் அருளாசிகளை “ஏலக்காய் சித்தர்” ஆள் அரவமற்ற தனி ஒரு குகையில் ஈசனை எண்ணி தவமியற்றி வந்தார்‌‌.

ஏலக்காய் சித்தர் மீண்டும் தன் குடிசைக்கு வருகை புரியாததால் முருகேசனே ஏலக்காய் சித்தரின் குடிலில் இருந்து ஸ்படிக லிங்கத்தை பூஜித்து பாதுகாத்து வந்தான். அவனுக்கு எல்லாம் மர்மமாகவே இருந்தது.

யோகினி அரவிந்தனை திருமணம் செய்துக் கொண்டு நிம்மதியாக வாழ ஆரம்பித்தாள்‌‌. அரவிந்தனுக்கு தன் கடந்த கால அத்தனை நினைவுகள் முழுவதும் மறந்து விட்டது‌‌. தான் அரவிந்த் தன் மனைவி யோகினி என்ற விஷயங்கள் மட்டுமே நினைவில் இருந்தன‌. கொல்லிமலை சென்று வந்தது முழுவதுமாக மறந்து விட்டது.

நந்தன் வெளிநாடு சென்று விட்டதாகவும் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு வசிப்பதாகவும் மட்டும் யோகினி அரவிந்திடம் கூறியிருந்தாள்‌. யோகினிக்கு மட்டுமே அனைத்து விஷயங்களும் நினைவில் இருந்தன.

மின்கைத்தடி இதழுக்காக அவள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை சற்று கற்பனை கலந்து “அஷ்ட நாகன்” என்ற பெயரில் ஒரு தொடர் எழுத ஆரம்பித்தாள்.

அரவிந்தன் தன் புத்தகக் கடையின் சுவரில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து கண்ணீர் சிந்தினான். அது நந்தனுடன் சில வருடங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

அரவிந்த் கண்ணீர் சிந்துவதை, அவன் புத்தகக் கடைக்கு அருகிலிருக்கும் ஒரு வேப்ப மரத்தின் பருத்த கிளையிலிருந்த இரண்டு நாகங்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன.

-சுபம்-

< இருபத்தி நான்காம் பாகம்

கமலகண்ணன்

6 Comments

  • எதிர்பார்க்க முடியாத முடிவுகள் பல. எழுத்தாளர் வித்யாசமாக கதைக்களத்தை அமைத்திருக்கிறார். ஆளுமை மிக அழகு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே….!

    • மிக்க நன்றி எழுத்தாளர் மோ.ரவிந்தர் அவர்களே !

  • நன்றாக இருந்தது தொடர். நாகங்களை பற்றிய பல அரிய தகவல்களை அறிய முடிந்தது, குறிப்பாக ஜீவசமாதி நாகம் பற்றிய செய்தி ஆச்சரியமாக இருந்தது, கதையின் எந்த இடத்திலும் தொய்வில்லை. விறுவிறுப்பாக இருந்தது. மகிழ்ச்சி

    • தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

  • அருமையான வித்தியாசமாக ஒரு திகல் படம் பார்த்ததைப் போல் இக்கதை நிறைவுற்றது மிகுந்த மகழ்ச்சியைத் தருகிறது. நண்பர் பெண்ணாகடம் பிரதாப் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    • தங்கள் அன்பு இன்றும் என்றும் உயரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...