வயதான காலத்தில் நிம்மதியாக வாழ எப்படித் திட்டமிடுவது?
கூட்டுக்குடும்ப முறை அழிந்து தனிக்குடித்தனங்கள் அதிகமாகி முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்த அதிநவீன காலத்தில் மத்திய வயதை அடைந்து வருகிறவர்கள் எப்படி தன்னைப் பேணித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் முதியோர் நல மருத்துவத்தில் சிறந்த விளக்கும் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.
ஒருவருக்கு முதுமை 50 வயதிலிருந்து ஆரம்பமாகிறது. அதனால் உங்கள் திட்டத்தை 50 வயதிலிருந்தே தொடங்குவது நல்லது. முதுமையில் உடல் நல மும் மனநலமும் குடும்ப நலமும் மிகவும் அவசியம். உடல்நலம் காக்க மருத்துவப் பரிசோதனை மிக மிக அவசியம். ஏனென்றால் முதுமையில் நோய் கள் மறைந்திருந்து காணப்படும். ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது உடல் பரிசோதனையும் ரத்தப் பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம்.
முதுமையில் இளமையாக இருக்க இரண்டு விஷயங்கள் அவசியம். ஒன்று உணவுக் கட்டுப்பாடு, இரண்டு தினமும் உடற்பயிற்சி.
வயதாக ஆக பசியும் ருசியும் குறையும். உண்ணும் உணவு குறையும். உடல் நலத்துக்கு உணவில் அதிகமாகப் புரதச்சத்துள்ள பருப்பு, காளான், முட்டையின் வெள்ளைக்கரு, கோதுமை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். முதுமை ஆக ஆக நீர் தாகஉணர்ச்சி குறைவதனால் தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சினை, இதயக்கோளாறு உள்ளவர்கள் மட்டும் தேவைக்கு அருந்தலாம். காலை, மாலையில் ஏதாவதொரு பழ வகையை உட் கொள்ளவேண்டும். அதுவும் வெறும் வயிற்றில் உட்கொள் வது நல்லது. தினமும் ஒரு கப் பால் ஒரு கீரை வகை அவசியம்.
முதுமையில் குறைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அரிசி உண வைக் குறைத்து கோதுமை, சிறுதானிய வகைகளைச் சேர்த்துக் கொள்ளவும். முதுமையின் முதன்மை எதிரி உப்பு என்பதால் உப்பை வெகுவாகக் குறைக்க வும்.
உடற்பயிற்சியைவிடச் சிறந்த டானிக் எதுவுமே கிடையாது. பல நோய்களை விரட்டும் சக்தி உடற்பயிற்சிக்கு உண்டு. தினமும் காலையில் 3 லிருந்து 5 கிலோமீட்டர் (45 நிமிடத்திலிருந்து ஒரு மணி நேரம்வரை) உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜிம் போன்ற கடின உடற்பயிற்சிகளைத் தவிர்த்து (Aerobic exercise) வாக்கிங், சைக்கிளிங் மிகவும் ஆரோக்கியம்.
அடுத்து மனநலம் காக்க, இந்த வயதிலிருந்தே ஒரு பொழுதுபோக்கை ஏற்படுத் திக்கொள்ள வேண்டும். தனிமைதான் முதுமையின் முதன்மை எதிரி. அதனால் (பிரச்சினை இல்லாத) ஒரு சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து செயல்படலாம். ஆன்மிகத்தில் ஈடுபடலாம். நூல்கள் படிக்கும் பழக்கம் நல்லது. இசை, பெட் அனிமல் நேசம் நல்லது. மனநலத்தில் மிக முக்கியமானது, தியானம். பிராணாயாமம். அடுத்து தொண்டு மிக அவசியம். நாம் பிறவி எடுத்ததே தொண்டு செய்யத்தானே.
அடுத்து மிகமிக அவசியம் நிதி வசதி. பானையில் ‘சோறு இருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்பதை மறந்துவிடக்கூடாது. அதனால் இந்த வயதிலிருந்தே நம் முதுமைக் காலத்துக்கு சேமித்து வைத்துக்கொள்வது மிகவும் அவ சியம். கடைசி காலத்தில் உறவுகளோ, நண்பர்களோ யாரும் கை கொடுக்க மாட்டார்கள். நாம் சேமித்து வைத்த பணம் மிகவும் உதவியாக இருக்கலாம். தனி சேமிப்பாக இருக்க வேண்டும். மகன், மகள் கல்வி, திருமணச் செலவுக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது அவசியம்.
கூட்டுக் குடும்பம் குறைந்துகொண்டு வருகிற இந்தக் காலத்தில் மகன், மகளிடம் நீங்கள் தான் விட்டுக்கொடுத்துப் போகவேண்டும். அவர்களிடமிருந்து எந்த எதிர் பார்ப்பை வைத்துக்கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் எதிர் பார்ப்பையும் குறைத்துக்கொண்டு தேவைக்கு மட்டும் விருப்பப்படுங்கள்.
குடும்பத்தில் பார்வையாளராக இருங்கள். ஒரு விஷயத்தில் ஆலோசனை கேட் டால் மட்டும் பதில் சொல்லுங்கள். உங்கள் மகன், மகள் பிறந்த நாளுக்கு சிறிய அன்பளிப்பைப் பரிசளியுங்கள். பேரக்குழந்தைகளுடன் கூடி மகிழ்ச்சியாக விளை யாடுங்கள்.