சத்தமா சிரிச்சா தப்பில்லை

 சத்தமா சிரிச்சா தப்பில்லை

!                

“என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க.”

“பரவாயில்லையே ஏன்?”

“அப்பத்தானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்.”

!

“நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?”

“ஜப்பான்ல 100 நாள் ஓடினது சார்”

!

“அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதையெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?”

“பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே. பிகினில போனதாலதான் அந்த நியூஸ்.”

!

“ஒய்ஃப் எதிரில் என்னோடு பேச ஏன் தயங்குறே?”

“கண்டவனோடு என்ன பேச்சுன்னு அவ கோபப்படுவா…”

!

“ஓட்ற பஸ்ல டிரைவர் தூங்கிட்டாரு.”

“ஐயையோ.. அப்புறம் என்ன ஆச்சு?”

“பஸ்ல எல்லாரும் டிக்கெட் வாங்கிட்டாங்க.”

!

“நம்ம காதல் விஷயம் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சதுன்னா…. அவ்வளவுதான்… வீடு ரெண்டாயிடும்!”

“அப்போ ரொம்ப நல்லதாப் போச்சு..!”

“ஏன் அப்படிச் சொல்றீங்க?”

“அதுல ஒரு போர்ஷன்ல நாம தனிக்குடித்தனம் போயிடலாம்ல..”

!

“தலைவரோட  குடும்பத்துல எல்லாருமே குற்றவாளிகளா இருக்கலாம்; அதுக்காக எல்லாரையும் ஒரே சிறையில், அதுவும், ஒரே அறையில போடணும்னு கேக்கறது ரொம்ப ஓவர்  இல்லையா…!?”

!

“உங்களுக்கு  கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவி கொடுத்ததை ஏன்  வேண்டாம்னு  மறுத்தீங்க? “

“இல்லாத ஒன்றுக்கு  எதற்குச்  செயலாளர்?”

 !

 “சின்ன வயசுல தலைவர் கல்லு – மண்ணுலதான் விளையாடுவாராம்!”

“அதான் இப்ப கல்குவாரி, மணல் குவாரி…ன்னு புகுந்து விளையாடறாரா?”

!

” நாம வேட்டைக்குப் போகும் நேரம் பார்த்து, பூனை குறுக்கே போகுது மன்னா! “

“பூனையெல்லாம் வேண்டாம் மந்திரி! ஆடு, கோழி ஏதாச்சும் போனா மட்டும் சொல்லுங்க.”

!

“மேளதாளத்தோடு தலைவர் ஏர்போர்ட் வருகிறாரே ஏன்?”

“இதுதான் அவருடைய முதல் விமானப் பயணமாம்.”

!

 “ரொம்ப குறுகிய காலத்துலயே உச்சத்துக்குப் போனவர் அந்தத் தலைவர்!”

 “அவரை அதுக்குள்ள ஜெயில்ல போட்டுட்டாங்களா  என்ன?”

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...