ஹோலிப் பண்டிகையும் புராண வரலாறும்
பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம் தான் ஹோலி. இந்தப் பண்டிகை அரங்கபஞ்சமி தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வடமாநிலங்களில் வண்ணமயமான ஹோலி பண்டிகை, குஜராத் மாநிலத்தில் 5 நாட்கள் கொண்டாடப்படும். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலிப் பண்டிகையின் முக்கியக் குறிக்கோளாகும்.
இந்தப் பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண் டாடப்படும். இயற்கையின் மாற்றத்தைக் கொண்டாடும் பண்டிகை என்றா லும், இதற்கும் புராணக் கதைகள் இருக்கின்றன.
கிருஷ்ண பகவான் தன் இளமைப் பருவத்தில் இப்பண்டிகைய கோபியர் களுடன் விளையாடியதாக வட மாநிலத்தவர்கள் நம்புகின்றனர். இப் பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்பு களையும் விவரித்துப் பாடுவர். இந்தப் பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு.
இந்தப் பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, ‘பிச்கரிஸ்’ என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், ‘குலால்’ என்னும் பல வண்ண நிறங்களில் இருக் கும் சிறுசிறு துகள்களைக் கலந்து ஒருவர்மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.
ஹோலியின் புராணம்
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்தான். ஆண் பெண் இருபாலராலும் எனக்கு மணரம் சம்பவிக்கக்கூடாது என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான். இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தி னான்.
இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகா வின் உதவியை நாடினான். ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு ஹோலி காவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்துவிடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன்.
மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதைக் குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்டவெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடை பெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக் கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம் பூலம் வைத்து இனிப்பு பண்டங் களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள்.
தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடி களைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.
ஹோலிப் காதலை வெளிப்படுத்தக்கூடிய பண்டிகையாகவும் கொண் டாடப்படுகிறது. தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர் கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்து கின்றனர். வடமாநிலங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஹோலிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் பண்டிகை கொண்டுவதற்கான நோக்கம் தீமையைக் களைந்து ஏறிவது ஆகும்.
வசந்த காலத்தில் வரும் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும் ஹிந்துகள் வாழும் ஒரு சில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர் கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன. இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் மனதில் உள்ள காமம், க்ரோதம், பேரசைக் களைந்து, ஆசை மற்றும் தேவை போன்றவைகளை சமச்சீராக எடுத்துக்கொள்ள வழி வகுக்கிறது.