பங்குனி உத்திர விழாவும் பலன்களும்

 பங்குனி உத்திர விழாவும் பலன்களும்

குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திர நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இன்று சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் திரளாகத் திரண்டு பங்குனி உத்திர விழாவைக் கொண்டினார்கள். குறிப்பாக பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப் பட்டது.  பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் அதிகளவில் திண்ட வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தெய்வத் திருமணங்கள் நடந்த தினம்

பங்குனி உத்திர நாளில் தான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராமபிரான்-சீதாதேவி, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்கணன்-ச்ருத கீர்த்தி என ஸ்ரீராம சகோதரர்களின் திருமணம் நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தெய்வீக திருமணங்கள் அதிகம் நிகழ்ந்த பங்குனி உத்திரத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பங்குனி உத்திரத் திருவிழா, இதற்குப் பெயர் கோடை வசந்த விழாவின் நுழைவு விழா என்றுதான் அர்த்தம். பங்குனி மாதம் பிறந்துவிட்டாலே கோடையும் வசந்தமும் வந்து விட்டது என்று தான் அர்த்தம்.

கோடை காலத்தின் ஆரம்பமே பங்குனி மாதம் தான். அதனால்தான் அதை வரவேற்கும் விதமாக வசந்த விழா கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தவும் எப்படி ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதோ, அது போலவே நம் தமிழகத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

தமிழ்நாட்டில் வசந்த விழா என்பது பழங்காலந்தொட்டே பின்பற்றப்பட்டு வரு கிறது. இதைப் பற்றிய பாடல்களும் புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள் ளது. ஹோலிப் பண்டிகையின்போது எப்படி சகோதரத்துவத்தை வெளிப்படுத்து கிறார்களோ, அது போலவே பங்குனி உத்திரத் திருவிழாவின் தேரோட்டத்தின் போது சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் தேர் வடம் பிடித்து இழுக்கிறோம்.

பங்குனி உத்திரம் சிறப்பு

பங்குனி உத்திரம் என்பது பௌர்ணமியும் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியைக் காட்டிலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இணையும்போது தோன்றும் பௌர்ணமி நிலவு மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமாகவும் தோன்றும். மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ் மாதங்களில் பன்னிரண்டா வது மாதம் பங்குனி, அதே போல் நட்சத்திர வரிசையில் பன்னிரண்டாவது நட்சத்திரம் உத்திரம்.

முருகன் தெய்வானை திருமணம்

பங்குனி உத்திரத் திருவிழாவின் நாயகனான முருகப் பெருமான் தெய்வானை யைத் திருமணம் செய்து கொண்டதும் இந்த நன்னாளில்தான். அதோடு ஸ்ரீவள்ளிக்குறத்தி அவதரித்த நாளும் இந்த நாள்தான். எம்பெருமான் சொக்க நாதர்-அன்னை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர நாளில்தான். சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரருக்கு மதுரையில், சிவபெரு மான் அன்னை பார்வதி தேவியோடு மணக்கோலத்தில் காட்சியருளிய தும் இந்த நன்னாளில் தான். இதனால் தான் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள கோயில்களில் எல்லாம் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் என்ற பேரில் பத்து நாட்கள் திருவிழா, தேரோட்டம், தீர்த்தவாரி, சுவாமி-அம்பாள் திருக்கல் யாண உற்சவம் என சகலமும் நடைபெறும்.

இந்திரன் இந்திராணி திருமணம்

பங்குனி உத்திர நன்னாளில்தான், அகத்தியர் லோபமுத்திரையைத் திருமணம் செய்து கொண்டதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவர்களின் தலை வனான இந்திரன்-இந்திராணி திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில் தான். அது மட்டுமல்ல, நவக்கிரக மண்டலத்தில் உள்ள சந்திரன் அழகும் திறமை யும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் செய்து கொண்டதும் இந்தப் பங்குனி உத்திர நாளில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பங்குனி பிரம்மோற்சவம்

இத்தனை சிறப்புகள் வாய்ந்ததால் தான் பங்குனி உத்திர நாளில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கோயில்களிலும் பங்குனி பிரம்மோற்சவம், உத்திரத் திருவிழா, தேரோட்டம் என்று தமிழ்நாடெங்கும் திருவிழாக்கள் களை கட்டத் தொடங்கிவிடும். அது மட்டுமல்ல, பங்குனி உத்திரம் நட்சத்திரத்தின் மகிமையைப் பல்வேறு புராணங்களும் போற்றிப் புகழ்கின்றன.

மகாலட்சுமி அவதாரம்

செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான். காக்கும் கடவுள் ஸ்ரீமகாவிஷ்ணுவை நோக்கி கடுந்தவம் இருந்த ஸ்ரீமகாலட்சுமிக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய திருமார்பில் வீற்றிருக் கும் வரத்தை அளித்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான் என்கிறது வரலாற்று ஆதார நூலான விஷ்ணு புராணம்.

நம்முடைய செல்வ வளம் சிறக்க இந்நாளில் ஸ்ரீமகாலட்சமியை வேண்டி விரதம் இருந்தால் சகல செல்வ வளங்களும் நமக்கு கிட்டும். ஸ்ரீஆண்டாள்-ரங்கமன்னார், நந்திதேவர்-சுயசை திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நன்னாளில்தான்.

சபரிமலை சாஸ்தா அவதாரம்

அது மட்டுமா, படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தன்னுடைய நாவில் கல்விக் கடவுளான சரஸ்வதியை அமர்த்திக்கொண்டதும் பங்குனி உத்திரத் திருநாளில் தான். பிரம்மச்சாரிய கடவுளான ஸ்ரீசபரிமலை சாஸ்தாவான ஐயப்பன் அவதரித் ததும், பூரணா-புஷ்கலாவை மணம் செய்து கொண்டதும் இந்நன்னாளில் தான். அதேபோல் மன்மதன் ரதிதேவியை மணம் செய்து கொண்டதும் இந்த நாளில் தான்.

பங்குனி விரத மகிமை

நாம் என்னதான் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளோடு இருந்தாலும், சுப நிகழ்வு கள் நடக்க இறைவனின் திருவருள் அவசியம் வேண்டும். அதற்கு கைகொடுப்பது பங்குனி உத்திர விரதம்தான். சிலருக்குத் திருமணம் கைகூடாமல் தள்ளிப் போனால், பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து இறைவனை வழிபட்டால் வெகு சீக்கிரம் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அதோடு, மனதுக்குப் பிடித்தவரை கரம் பிடிக்கவும் பங்குனி உத்திர விரதம் இருப்பது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...