களை எடுக்கும் கலை – 2 | கோகுல பிரகாஷ்
அத்தியாயம் – 2
“என்ன சொன்னீங்க! சந்தேகமா…? யார் மேல சந்தேகம் இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… சீக்கிரம்…” ஏதோ குற்றவாளியே கையில் கிடைத்துவிட்டது போல் பரபரப்பானார் ராம்குமார்.
“எங்க துர்கா காலனியில, காத்தவராயன்னு ஒருத்தன் இருக்கான். யார் எந்த வேலை சொன்னாலும் செய்வான், பணமோ, சாப்பாடோ குடுத்தா வாங்கிக்குவான். அவனுக்கு வீடு வாசல் எதுவும் கிடையாது. எதுவும் வேலை கிடைக்காத சமயத்துல பஸ் ஸ்டாண்டு, கோயில்னு பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.”
ராம்குமார் பொறுமை இழந்தார். “சரி, அவனுக்கும் இந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்னு நெனைக்குறீங்க…?”
“சார், அவன் அடிக்கடி பரந்தாமன் வீட்டுக்கு வருவான்.”
ஆர்வம் அதிகரித்தது ராம்குமாரிடம். “ஹ்ம்ம்… மேல சொல்லுங்க! அவனுக்கும், பரந்தாமனுக்கும் எப்படி பழக்கம்…?”
“அவருக்கு ஏதாவது வேணும்னா, காத்தவராயன் கிட்டதான் வாங்கிட்டு வரச் சொல்லுவார். அடிக்கடி மிலிட்டரி சரக்கு வாங்கிட்டு போவான், அவர்கிட்ட இருந்து. ஒருசில சமயம் அவர் வீட்டுலயே ரெண்டு பேரும் சரக்கடிப்பாங்க…”
ராம்குமாரின் முகம் பிரகாசமானது. “கான்ஸ்டபுள், துர்கா காலனிக்கு போய், இவர் சொல்லுற ஆளை உடனே தூக்கிட்டு வாங்க…”
இரண்டு காவலர்கள் உடனே கிளம்ப, “மிஸ்டர் சதாசிவம், அந்த ஆளை இவங்களுக்கு அடையாளம் காட்டிடுங்க, நீங்களும் கெளம்புங்க…” ராம்குமாரின் வார்த்தையை கேட்டதும் கலவரமானார் சதாசிவம்.
“சார், அடையாளம் சொல்லுறேன், எங்கெங்க இருப்பான்னு சொல்லுறேன். நேர்ல போயி, என்னால அடையாளம் காட்ட முடியாது. நாளைக்கு எனக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தா என்ன செய்யுறது…?”
சற்று யோசித்த ராம்குமார், “சரி, அப்படியே பண்ணிடுங்க…” என்று சொல்லவும் தான் சற்று நிம்மதியானார் சதாசிவம்.
கான்ஸ்டபுள்களுடன் கிளம்பிய சதாசிவம், “எனக்கென்னவோ, அவன் மேலதான் சார், சந்தேகமா இருக்கு. ரெண்டு தட்டு தட்டுனீங்கனா உண்மைய ஒத்துக்குவான்…” என்று சொல்லிவிட்டு போனார்.
ராம்குமார் கண்களை மூடி ஏதோ யோசிக்கத் தொடங்கினார்.
“சார்…”
குரல் கேட்டு லேசாக கண்விழித்து பார்த்தார் ராம்குமார். எதிரே சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் நின்றுக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்க கதிர்!”
“சார், பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ண ஜி.எச்க்கு அனுப்பிட்டேன். வீட்டுக்குள்ள ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எதுவும் கெடைக்கலை. மோப்ப நாய் எதையும் ஸ்மெல் பண்ணல…”
“ஸ்டாப், ஸ்டாப்! கேஸ் ஒரு இன்ச் கூட நகரலைன்னு சொல்ல வர்றீங்க… அதானே…”
“ஆமாம் சார்! கொலைக்கு பயன்படுத்துன ஆயுதமும் கெடைக்கல…”
“ஏதாவது ஒரு விஷயம் பாஸிட்டிவா சொல்லுங்களேன், கதிர்…”
“சார், கொலை நடந்த நேரம் ராத்திரி ஒரு மணியில இருந்து மூணு மணிக்குள்ள இருக்கும்னு டாக்டர்ஸ் சொல்லுறாங்க… மற்ற விபரங்கள் முழுசா பிரேத பரிசோதனை நடந்த பிறகு தான் தெரியும்.”
“உங்களால கொலைக்கான காரணம் என்னவா இருக்கும்னு யூகிக்க முடியுதா, கதிர்…?
“திருட்டு முயற்சி எதுவும் நடக்கலை, அக்கம் பக்கத்துலயும் ரொம்ப நல்ல பேரு. இவருக்கு யாரு விரோதிகளா இருக்க முடியும்னு தெரியலை… ஆனா, ஆளு பசையுள்ள பார்ட்டி தான் சார், சொந்த வீடு. பேங்க் பேலன்ஸ் எக்கச்சக்கமா இருக்கு.”
“உயில் ஏதாவது எழுதி வச்சிருக்காரா, பாத்தீங்களா…?”
“வீட்டுல அந்தமாதிரி டாக்குமெண்ட்ஸ் எதுவும் இல்லை சார். பேங்க் லாக்கர்ல இருக்கான்னு செக் பண்ணிப் பாக்கனும்…”
“பாத்துடுங்க கதிர், ஒன்னு சொத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கனும், இல்லைன்னா இவருக்கு யாராவது விரோதிகள் இருக்கனும்…”
“இல்லைன்னா, தற்செயலா பேசிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது தகராறு வந்து, உணர்ச்சி வசப்பட்டு யாராவது கொலை பண்ணியிருக்கலாம் இல்லையா…?”
“ஆமாம்! இந்தப் பாயிண்டையும் மனசுக்குள்ள வச்சிட்டு யோசிங்க…”
“ஓகே சார்!”
“இவர்கிட்ட அதிக பணம், சொத்து இருக்குறது யாருக்கெல்லாம் அதிகம் தெரியும்?”
“அந்த அப்பார்ட்மெண்ட்ல எல்லாருக்குமே தெரியுமே… அந்தத் தெருவுல இருக்குற நெறைய பேருக்கு, அடிக்கடி பண உதவிகள் செஞ்சிருக்காரு போல…”
“அந்த லிஸ்ட்ல அதிக நெருக்கம் யாருக்கு இருக்கும்னு பாருங்க…”
“அதிக நெருக்கம்னா, பக்கத்துல இருக்கனும், இல்லைன்னா ஒரே வீட்டுல இருக்கனும்… அப்படிப் பாத்தா, சதாசிவம் தான் பக்கத்துல இருக்கார்…”
“ஹ்ம்ம் அப்புறம்…?”
“சதாசிவத்தை விட பரந்தாமன் கூட இன்னும் அதிகமா பழகுனவங்க யாரா இருக்கும்…?”
“அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போறது யாரு…?”
“சார், நெறைய பேரு வந்துட்டு போவாங்க போல… இதுல யாரை சந்தேகப்படுறது…?
“தினமும் வந்துட்டு போறது யாரு…?”
“வீட்டு வேலைக்காரி பரிமளம் தான். ஆனா, பரிமளத்தை பத்தி, அக்கம் பக்கத்துல ரொம்ப நல்ல விதமா தான் சொல்லுறாங்க…”
“எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்கும்னு, இப்பவே எப்படி சொல்ல முடியும்…? இன்னும் போகப் போகத்தான் தெரியும்…”
“இந்த ரெண்டு பேருல யாரை சந்தேகப்படுறீங்க சார்?”
“ரெண்டு பேரையும் தான்…”
“சதாசிவம் கொலை பண்ண என்ன காரணம் இருக்க முடியும்…?”
“பரந்தாமன் ஒன்டிக்கட்டை. அவருக்கு பிறகு சொத்தை அனுபவிக்க ஆள் இல்லை… அதை ஏன் நாம அபகரிக்க கூடாதுன்னு யோசிச்சிருக்கலாம்… சொத்தை எழுதித் தரச் சொல்லி கேட்டு இருக்கலாம். அவர் தரமுடியாதுன்னு சொல்லி இருக்கலாம். அதை மனசுல வச்சுக்கிட்டு, இவர் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிட்டு, அவரை வஞ்சம் தீர்த்திருக்கலாம்… இல்லைன்னா நேத்து ரெண்டு பேரும் ஒன்னா சரக்கடிச்சிருக்கலாம். அப்போ ஏதாவது வாக்குவாதம் வந்து, அதனால அவரை அதிகமாக குடிக்க வச்சு, அப்புறம் கொலை பண்ணியிருக்கலாம்…”
“ஆமாம் சார், அவர் குடிச்சிருந்தார்னுதான் டாக்டரும் சொன்னார்… சரி, பரிமளத்துக்கு என்ன காரணம் இருக்க முடியும்?”
“புருஷன் இல்லை. வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க… கரையேத்த வேண்டாமா…? இல்லைன்னா ரெண்டு பேருக்கும், தகாத உறவு இருந்து, அதுல ஏதாவது பிரச்சனை வந்திருக்கலாம்…”
“பரிமளம் மாதிரி ஆளுங்க உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்யலாம், ஆனா இது திட்டம் போட்டு பண்ணுன மாதிரி இருக்கு சார்…”
“பரிமளமே தான் பண்ணணும்னு அவசியம் இல்லையே… ஏதாவது ஆளை வச்சி, சொத்தை எழுதித் தர சொல்லி மிரட்டியிருக்கலாம், இல்லையா…?”
“வாய்ப்பு இருக்கு சார்!”
“ஹ்ம்ம், கெடைக்குற ஆதாரத்தை வச்சி கொலையாளி யாருன்னு முடிவு பண்ணுவோம்.”
அவர்களின் உரையாடலை தொலைபேசி இடைமறித்தது.
“ஹலோ!”
“ஹலோ, இன்ஸ்பெக்டர் ராம்குமார் இருக்காரா…?”
“இன்ஸ்பெக்டர் தான் பேசுறேன். நீங்க…?”
“வணக்கம் இன்ஸ்பெக்டர், நான் ஜி.எச்ல இருந்து டாக்டர் விக்டர் பேசுறேன்.”
“வணக்கம் டாக்டர், உங்க ஃபோனுக்காகத் தான் காத்துகிட்டு இருக்கேன். பிரேத பரிசோதனை முடிஞ்சுதா…?”
“ம்ம் முடிஞ்சது… வந்து ரிப்போர்ட் வாங்கிட்டு போங்கன்னு சொல்லத்தான் ஃபோன் பண்ணேன்.”
“ஓகே டாக்டர், ஆள் அனுப்புறேன், குடுத்து விடுங்க. ரிப்போர்ட்ல ஏதாவது வித்தியாசமா சொல்லுற மாதிரி இருக்கா…?”
“அப்படிலாம் எதுவும் இல்லை. அளவுக்கு மிஞ்சி குடிச்சிருக்கார். கூரான ஆயுதத்தை வச்சி கழுத்தை அறுத்துருக்காங்க… அதீத போதையில இருந்ததால, பெருசா எதுவும் போராடின மாதிரி தெரியல. மூச்சு தடைபட்டு, அதிக ரத்தம் வெளியேறி, உடனடி மரணம்.”
“ஓகே டாக்டர். உங்ககிட்ட இருந்து, இந்த கேசுல ஏதாவது பயனுள்ள தகவல் கெடைக்கும்னு பாத்தேன். பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல சப்-இன்ஸ்பெக்டர் வருவார். அவர்கிட்ட ரிப்போர்டை குடுத்துடுங்க…”
“ஓகே!”
“தொலைபேசியை வைத்துவிட்டு, “கதிர், பிரேத பரிசோதனை அறிக்கை தயாராகிடுச்சு, போய் வாங்கிட்டு வந்துடுங்க… மிலிட்டரில பென்ஷன் வாங்குற ஆளு… அவங்க சைடு ஏதாவது ஃபார்மாலிட்டிஸ் இருக்கான்னு பாத்து, அவங்களுக்கு தகவல் குடுத்துடுங்க…”
“ரிடையர்டு ஆகிட்டதால, மிலிட்டரி ஃபார்மாலிட்டிஸ் எதுவும் இருக்காது சார். அவங்க குடும்பத்துல இருந்து ‘எக்ஸ்-சர்வீஸ்மென் வெல்ஃபேர்’ன்ற டிபார்ட்மெண்ட்க்கு டெத் சர்டிபிகெட் மட்டும் சப்மிட் பண்ணுவாங்க. அவ்ளோதான்…”
“ஓ! பென்ஷன் கிளைம் பண்ணுறதுக்கா…? இவருக்குத்தான் குடும்பமே இல்லையே…”
“ஆமாம் சார்!” என்ற கதிரவன் விரைப்பான சல்யூட்டுடன் வெளியேறியதும், கான்ஸ்டபிளிடம் “நான் வீட்டுக்கு போய்ட்டு வந்துடுறேன். ஏதாவது அவசரம்னா, என் மொபைலுக்கு கூப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் ராம்குமார்.
அரசு மருத்துவமனை.
கதிரவன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே செல்லும்போது தூரத்தில் தென்பட்ட உருவத்தை பார்த்து ஆச்சர்யத்துடன், கூப்பிட்டு பேச நினைக்கும்போது, அங்கிருந்த கூட்டத்தோடு கலந்து விட்டது அந்த உருவம். தேடிப் பார்க்கலாமா என யோசித்து, வந்த வேலையை உத்தேசித்து, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என டாக்டரைப் பார்க்க புறப்பட்டார்.
நேராக டாக்டரின் ரூமுக்கு போக, டாக்டர் ரவுண்ட்ஸில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, நிமிஷங்களை எண்ணத் தொடங்கினார்.
இருபது நிமிஷம் கரைந்து இருக்கும். காத்திருக்கும் பொறுமையை இழந்தவராய், டாக்டர் எங்கே இருக்கிறார் என விசாரித்து, அங்கேயே போய் பார்த்துக் கொள்ளலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ‘சரக், சரக்’ என ஷூ தரையில் உரசும் சத்தத்துடன், டாக்டர் வந்துக் கொண்டிருந்தார். டாக்டருக்கு பின்னால், சற்று இடைவெளி விட்டு, கதிரவன் வாசலில் பார்த்த அதே உருவம்.
“சாரி கதிரவன், வந்து ரொம்ப நேரம் ஆகிடுச்சா…?”
“இல்லை டாக்டர், ஒரு இருபது நிமிஷம் ஆகிருக்கும், அவ்ளோதான்…” சொல்லிக்கொண்டே பின்னால் வந்து நின்ற உருவத்தை பார்த்து கையசைத்து கூப்பிட்டார்.
அந்த உருவம் அருகில் வந்து நிற்கவே, அப்போதுதான் ஞாபகம் வந்தவராய் டாக்டர், அந்த உருவத்தை அருகில் அழைத்து, அறிமுகப்படுத்தத் தொடங்கினார். “இவர் பேரு சதாசிவம்…”
“தெரியும் டாக்டர். வரும்போது வெளியிலேயே இவரைப் பாத்தேன், இவர் இங்க எதுக்கு வந்திருக்காருன்னு யோசிச்சுட்டு இருக்கும்போதே, திடீர்னு காணாம போயிட்டார்…”
“சார், பரந்தாமனுக்கு சொந்த பந்தம் யாரும் இல்லை… அனாதைப் பொணமா பொதைச்சிடுவீங்களேன்னு தான், பாடியை நான் வாங்கிட்டு போகலாம்னு வந்திருக்கேன்” யாரும் கேட்காமலேயே, தானாக பேசத் தொடங்கினார், சதாசிவம்.
“உங்க வீட்டுலயும் யாரும் இல்லை… தனியா என்னப் பண்ணுவீங்க…?”
“அப்பார்ட்மெண்ட்ல எல்லாரும் சேர்ந்து இறுதிச் சடங்கு செய்யுறதா முடிவு பண்ணியிருக்கோம்…”
“ரொம்ப நல்ல முடிவு! நீங்க ஃபார்மாலிட்டீஸ்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் பாடியை வாங்கிக்கலாம்.”
“சரி” என்று சதாசிவம் சொன்னதும், கதிரவன் டாக்டரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.
கதிரவன் ஸ்டேஷனுக்குள் நுழையும்போதே, உள்ளிருந்து அலறல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. ‘அட, அதுக்குள்ள சந்தேகத்துல யாரையாவது, கைது பண்ணிட்டாரா… என்னும் சந்தேகத்துடன், உள்ளே நுழைந்தார். ‘யாரு இவனுங்க கூலிப்படையா?’ என மனதில் யோசனை ஓட, “எல்லாம் ‘பெட்டிக் கேசு’, தூக்கி உள்ளப் போடுங்க… இவனுங்களை அப்புறம் பாத்துக்கலாம்…” என்று சொல்லிக்கொண்டே, லத்தியை தூக்கி எறிந்தார், ராம்குமார்.
“என்ன கதிர், கேஸ்ல ஏதாவது முன்னேற்றம் இருக்கா…?” என்று கேட்டவாறே, தன் இருக்கையில் அமர்ந்தார்.
“ஒரு ஆளை எதிர்பாராத விதமா பாத்தேன் சார். பரந்தாமனோட பாடியை வாங்க வந்திருந்தார்.”
“யாரு, எவனாவது மாமன், மச்சான்னு உரிமை கொண்டாடிட்டு வந்தானா, சொத்தை ஆட்டைய போட…?”
“இல்லை சார், சதாசிவம் தான் வந்திருந்தார்.”
“ஓ, செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் பண்ணலாம்னு வந்திருப்பாரோ…?”
“முடிவே பண்ணிட்டீங்களா சார், அவர்தான்னு…?”
“எல்லாமே சந்தேகம் தான், ஆதாரம் கெடைக்குற வரைக்கும்… சதாசிவம் இன்னொரு ஆளை கை காட்டியிருக்காரு தெரியும்ல…”
“இல்லை சார். யார் அந்த இன்னொரு ஆளு…?”
“காத்தவராயன்”
“அதே அப்பார்ட்மெண்ட்ல இருக்காரா?”
“பிச்சை எடுக்குறவன் அப்பார்ட்மெண்ட்லயா தங்குவான்?”
“பிச்சைக்காரனுக்கும், பரந்தாமனுக்கும் என்ன சார் தொடர்பு?”
“அப்பப்போ இவர்கிட்ட மிலிட்டரி சரக்கு வாங்கிட்டு போவான் போல… ரெண்டு பேரும் ஒன்னா குடிக்குறதும் உண்டாம்…”
“இப்போ புரியுது சார்… குடிச்சிட்டு ஏதாவது வாக்குவாதம் நடந்திருக்கலாம். போதையிலும், ஆத்திரத்துலயும் கொலை நடந்திருக்கலாம்…”
“ஹ்ம்ம்! சந்தேகம் எல்லார் மேலயும் வருது. எஸ்பி ஆஃபிஸ்ல இருந்து எதுவும் கேக்குறதுக்கு முன்னாடி, யாரையாவது சந்தேகத்துலயாவது கைது பண்ணினா தான், எஸ்பிக்கு பதில் சொல்ல முடியும்.”
“சார், நீங்க நெனைச்சா இந்தக் கேசை இப்பவே க்ளோஸ் பண்ணிடலாம்…”
“எப்படி…?”
“காத்தவராயனை வச்சி தான்…”
“புரியலையே…?”
“காத்தவராயனுக்குன்னு யாரும் கெடையாது… யாரும் சப்போர்ட்டுக்கு வரப் போறதும் இல்லை… அவனையே குற்றவாளியாக்கிடலாமே…?”
“அய்யா, சாமி! இதுக்குதான், விசாரணைனு என்னைக் கூப்பிட்டு வந்தீங்களா…?” அய்யோ மோசம் போயிட்டனே…” என்ற அலறலைக் கேட்டு, இருவரும் திடுக்கிட்டு பார்க்க, இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு நடுவே, திமிறிக்கொண்டு இருந்தான், காத்தவராயன்.

களை கலைவது தொடரும்