Tags :கோகுல பிரகாஷ்

தொடர்

களை எடுக்கும் கலை – 6 | கோகுல பிரகாஷ்

“கதிர், கொலை செஞ்சது சதாசிவம் இல்லை… ஏன்னா…” “ஏன் சார்…?” “ஏன்னா… இப்போ கொலை செய்யப்பட்டதே சதாசிவம்தான்…”. இவர்தான் கொலையாளியாக இருக்க முடியும் என்று ஒருவரை முடிவு செய்து, கதிரவன் அவரை கைது செய்ய நினைத்துக் கொண்டு இருக்கையில், இன்ஸ்பெக்டர் ராம்குமார் சொன்ன செய்தி, கதிரவனை அப்படியே அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவர் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியது. “சார் நீங்க சொன்னது உண்மையா…?” அதிர்ச்சி விலகாமல் கேட்டார் கதிரவன். “இது விளையாடுற விஷயம் இல்லை கதிர், உண்மைதான்.” “ஒகே […]Read More

தொடர்

களை எடுக்கும் கலை – 5 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 5 ஆட்டோவில் இருந்து இறங்கிய சதாசிவத்தின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. அவர் அருகில் வந்த ராம்குமார், “என்ன சார், எங்களை நீங்க எதிர்பார்க்கலைல…?” என்று கேட்டதும், என்ன சொல்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றார் சதாசிவம். அருகில் இருந்த காத்தவராயன், “சார், நான் ஹாஸ்பிடல் போயிட்டு வரும் போது, வழியில சதாசிவம் சார், ஆட்டோல வந்துட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் நிறுத்தி ஆட்டோல ஏத்திக்கிட்டார்…” என்றான். “அப்படியா…? காத்தவராயன் சொல்லுறது உண்மையா…?” […]Read More

தொடர்

களை எடுக்கும் கலை – 4 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 4 “என்ன கதிர் சொன்னீங்க…? சிசிடிவியை ஹேக் பண்ணிட்டாங்களா…?” ராம்குமாரின் குரலில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. “ஆமாம் சார்…” கேஸ் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்னும் வருத்தத்தோடு ஒலித்தது கதிரவனின் குரல். “ஹேக் பண்ணியிருக்காங்கன்னு எப்படி சொல்லுறீங்க…?” “சிசிடிவி வேலை செய்யலைன்னு சொன்னதால, என்னோட ஃபிரண்ட் ஒருத்தர் இந்த ஹேக்கிங், சைபர் அட்டாக், இது சம்பந்தமா படிச்சிருக்கார். அவரையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவர்தான் செக் பண்ணி சொன்னார்.” “என்ன கதிர், கேமரா வேலை செய்யலைனா, […]Read More

தொடர்

களை எடுக்கும் கலை – 3 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 3 “யாருய்யா இது…?” ராம்குமாரின் குரலில் எரிச்சல் தென்பட்டது. “சார், சதாசிவம் சொன்ன ஆளு இவன் தான்.” “எங்க இருந்துய்யா பிடிச்சுட்டு வரீங்க… எங்கயாவது வெளியூருக்கு தப்பிச்சு போகப் பார்த்தானா…?” “இல்லை சார்! துர்கா காலனியில தான் இருந்தான். நாங்களும் துர்கா காலனியில தேடிப் பாத்துட்டு, பஸ் ஸ்டாண்டு பக்கம் போய் பாக்கலாம்னு நெனைச்சுட்டு கெளம்பினோம். ஆனா, அங்கேயே தான், ஒரு பாழடைஞ்ச மண்டபத்துல ஒளிஞ்சிட்டு இருந்தான்.” கான்ஸ்டபிளின் பதிலைத் தொடர்ந்து, காத்தவராயனைப் பார்த்தார் […]Read More

தொடர்

களை எடுக்கும் கலை – 2 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 2 “என்ன சொன்னீங்க! சந்தேகமா…? யார் மேல சந்தேகம் இருந்தாலும் தயங்காம சொல்லுங்க… சீக்கிரம்…” ஏதோ குற்றவாளியே கையில் கிடைத்துவிட்டது போல் பரபரப்பானார் ராம்குமார். “எங்க துர்கா காலனியில, காத்தவராயன்னு ஒருத்தன் இருக்கான். யார் எந்த வேலை சொன்னாலும் செய்வான், பணமோ, சாப்பாடோ குடுத்தா வாங்கிக்குவான். அவனுக்கு வீடு வாசல் எதுவும் கிடையாது. எதுவும் வேலை கிடைக்காத சமயத்துல பஸ் ஸ்டாண்டு, கோயில்னு பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான்.” ராம்குமார் பொறுமை இழந்தார். “சரி, அவனுக்கும் […]Read More

தொடர்

களை எடுக்கும் கலை – 1 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 1 நேரம் காலை 8:00. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது அந்த அபார்ட்மெண்ட். படபடவென சதாசிவத்தின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அந்த அபார்ட்மெண்டில், அதே வரிசையில் இருந்த பல கதவுகள் திறந்து கொண்டன. சில தலைகள் வெளியே எட்டிப் பார்க்கவும் தொடங்கின. கதவு […]Read More