கடந்து போகும் ரயில் | திருமாளம் எஸ். பழனிவேல்
ரயில் கடந்து செல்லும் போதெல்லாம்
கேட் அருகே நின்று கொண்டு
கையசைத்து கையசைத்து
சந்தோஷமாய் கத்தியது
நினைவிலே வந்து போகிறது..
சிக்னலில் நின்று கிளம்பிய
ரயிலின்
துணை ஓட்டுனராய்
கொடியசைத்துக் கொண்டே
கேட்டை கடக்கும்போது
பார்க்கிறேன்
கையசைக்க ஆளில்லை..
நின்று கொண்டு இருந்த காரில்
தூங்காத குழந்தையின் கையிலும்
செல்போன்..
எல்லோரும் தலைகுனிந்து
ஏதோ ஒன்றை தேடியபடி..
இவர்கள் தலை நிமிரும்
பாடலைப் பாட
எட்டையபுரத்தார் வருவாரா…