ஏலவனம் – படத்தின் துவக்கவிழா
தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக விளங்குவது தேனி மாவட்டம் இந்த தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கேரளா இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது.
ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள் படும் கஷ்டங்கள் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து தேனி மாவட்டம் கம்பத்தில் சார்ந்த புதுமுக இயக்குனர் ராஜபாண்டியன் ஏலவனம் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.
அந்தப் படத்தினை சென்னை ஹாஸ்பிடல்ல டிவி நிர்வாக இயக்குனர் அழகராஜா தயாரிக்கின்றார். இந்த படத்தின் துவக்கவிழா பூஜை கம்பத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த திரைப்பட துவக்க விழாவை கம்பம் ஆர் ஆர் இன்டர்நேஷனல் பள்ளியில் துணைத் தலைவர் அசோக் அவர்கள் முதல் கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் குத்து விளக்கேற்றி படத்தின் பூஜை துவங்கப்பட்டது.
இத்திரைப்படம் முழுவதும் இத்திரைப்படம் முழுவதும் ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை கஷ்டங்கள் வேலைப் பணிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
“தேனி மாவட்டத்தில் கடைக்கோடி இயற்கை எழில் மிகு நகரமான கம்பம் பள்ளத்தாக்கில் இருந்து அடி மட்ட பள்ளத்தில் இருந்து வரும் குறும்படம் இயக்குனராகிய நான் ஏலவனம் திரைப்படம் பூஜை எங்க சொந்த ஊரில் நடத்த
ஒத்த காலில் தயாரிப்பாளரிடம் அடம்பிடித்து நடத்தி முடித்துள்ளேம். ஏன் என்றால் எங்க ஊரு பெருமையை இன்னும் வெளியுலகுக்கு எடுத்து செல்லவே. அதுமட்டும் இல்லை சொந்த ஊரில் எவ்வளவு ஆதரவு, நிராகரிப்பு இருப்பதை தெரிந்து அதில் ஒரு பாடம்மாக எடுத்து தரவுகளை சரி செய்துகொள்ள விரும்பினேன்.
இந்த விழாவில் நிறைய கற்றுகொண்டேன்.
விழா மிக நேர்த்தியாக நடந்தது எனக்கு ரெம்ப சந்தோசம் என்று தயாரிப்பாளர் அழகர்ராஜா சார் என்னிடம் சொல்லிட்டு திருப்தியாக சென்றார் ” என்றார் இயக்குனர் ராஜபாண்டியர்.
இயக்குனர் ராஜபாண்டியர் இவர் ஒரு குறும்படம் இயக்குனர் “தீண்டாதே” என்ற குறும்படம் மூலமே இந்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது
மக்கள் திரளாக வந்து விழாவில் கலந்து கொண்டார்கள்.
ஒரு புதிய ஃபார்முலாவை அறிமுகப்படுத்த போகிற படம்…. வெற்றிப்படம் கடைக்கோடியிலும் எடுக்கப்படலாம் துவங்கப்படலாம் என்கிற ஒரு அறிவிப்பை முன்னெடுத்த வகையில் இந்தப்படம் நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குனரின் பாட்டியின் வயசு 108. ஏலக்காய் எஸ்டேட்டில் பிறந்து 5 தலைமுறை பார்த்துவிட்டார். ஏலவனம் திரைப்படம் கதை பாட்டியிடம் நிறைய தரவுகள் சேகரித்திருக்கிறார் இயக்குனர்.
1 Comment
மனமார்ந்த நன்றி மின் கைதடி ஆசிரியர் அவர்களுக்கு