வாகினி – 14 | மோ. ரவிந்தர்

 வாகினி – 14 | மோ. ரவிந்தர்

காலையிலிருந்தே சதாசிவம் பெறும் எதிர்பார்ப்புடன் காத்துக் கிடந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பு முதலாளி குமார், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர் கோபாலை பார்த்துவிட்டு வரலாம் என்று கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமையான இன்று பெரும் எதிர்பார்ப்போடு தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தான்.

குமார், தனது நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகளை ஞாயிற்றுக்கிழமைகளில் சரி பார்க்கும் வழக்கம் உண்டு என்பது அங்குப் பணி புரியும் தொழிலாளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அதனால், குமாரை பார்த்து விட்டுப் போகலாம் என்று தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தான், சதாசிவம்.

அவன் எதிர்பார்த்ததைப் போலவே குமார் நாற்காலியில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் வரவு செலவு கணக்குகளைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்.

“வணக்கம்! முதலாளி” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தான், சதாசிவம்.

சதாசிவத்தின் வருகை இந்த நேரத்தில் குமாருக்கு ஒரு பிரமிப்பை தந்தது.

“வா! சதாசிவம், இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமையாச்சே வேலை எதுவும் இல்லையே… பிறகு என்ன?” என்று கேட்டார், குமார்.

சதாசிவம் பெரும் எதிர்பார்ப்போடு இங்கு வந்தான். ஆனால், குமாரின் கேள்வி அவனுக்கு ஒரு விதமான சோகத்தைத் தந்தது.

‘அவர்தானே ஞாயிற்றுக்கிழமை தனது நண்பனை போய்ப் பாக்கலாம்னு சொன்னார். ஆனால், இப்ப எதுக்கு வந்தேன்னு கேள்வி கேட்கிறாரே?’ என்ற கேள்வி சதாசிவம் மனதுக்குள் ஓடியது.

“முதலாளி, இன்னைக்கு உங்க நண்பரை போய்ப் பாத்துட்டு வரலாம்னு சொன்னிங்களே. அதான்… வந்தேன்” என்று தயக்கத்துடன் கூறினான், சதாசிவம்.

“ஆமா, சதாசிவம். கொஞ்சம் வேலையா இருந்ததுல உன்னோட விஷயத்தை மறந்துட்டேன். சாரிடா தம்பி” என்று கூறிவிட்டு, “சரி உட்கார்” என்று கூறிக்கொண்டே தனது சட்டைப் பாக்கெட்டில் இருந்து சிறு டைரிக்குறிப்பு நோட்டை எடுத்து நண்பர் கோபாலுக்குப் போன் செய்தார், குமார்.

இந்த நேரத்தில் கோபால் நாற்காலியில் அமர்ந்து தினசரி நாளிதழ் ஒன்றை பிரித்துப் படித்துக் கொண்டிருந்தார்.

மறுமுனையில் கோபால் வீட்டில் இருந்த டெலிஃபோன் மணி பெரிதாக ட்ரிங் ட்ரிங் … ட்ரிங் ட்ரிங்…” என ஒலிக்கத் தொடங்கியது.

கோபால் படிப்பதை நிறுத்திவிட்டு மேசைமீது இருந்த டெலிபோன் ரிசீவரை எடுத்தார்.

“ஹலோ…” என்றார்.

“ஹலோ, நான் முருகன்கடை ஓனர் குமார் பேசறேன். சௌக்கியமா?” என்று கோபாலின் குரல் குமாருக்கு தெரிந்திருந்ததால் தன்னை அறிமுகம் செய்துகொண்டு நலன் விசாரித்தார்.

“நல்லா இருக்கேன் குமார், நீங்க எப்படி இருக்கீங்க?” என்று அவரும் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்.

“சார், நல்லா இருக்கேன். உங்களால எனக்கு ஒரு உதவியாகணும்?”

“சொல்லுங்க தம்பி, என்னால என்ன உதவியாகணும்?”

“சார், என் கடையில வேல பாத்துட்டு இருக்க ஒரு தொழிலாளி. புதுசா ஒரு கடை தொடங்க போறாரு. அதுக்குக் கொஞ்சம் பர்சனல் லோன் எடுக்க வேண்டியிருக்கு. நீங்க உதவி செஞ்சா அவனுக்குக் கொஞ்சம் உதவியாயிருக்கும்” என்று ஒரு கோரிக்கையை முன்வைத்தார், குமார்.

“அதுக்கு என்ன குமார் கொடுத்துட்டா போச்சு. ஆனா, இப்ப லோன் எடுக்கிறதுல கொஞ்சம் சிக்கல் இருக்கு அத கூட நான் பார்த்துப்பேன். ஆனா, பேங்க்ல மெம்பரா இருக்குற ரெண்டு பேரோட சூரிட்டி மட்டும் தேவைப்படுகிறது. அதமட்டும் நீங்களே பாத்துக்குங்க, ப்ளீஸ். மத்த விஷயத்த நேரில் பேசிக்கலாம்” என்றார், கோபால்.

“சார், இந்த அளவுக்கு நீங்க உதவி செய்கிறதே பெரிய விஷயம். சூரிட்டி தானே நாங்க பாத்துக்குறோம் மத்த விஷயத்தை மட்டும் நீங்க பார்த்து கொடுத்தீங்கனா எங்களுக்குக் கொஞ்சம் நல்லா இருக்கும்” என்றார், குமார்.

“சரி தம்பி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு நான் வெளியூர்க்கு போக வேண்டியிருக்கு. ரெண்டு நாள் கழிச்சி திரும்பி விடுவேன். திரும்பி வந்ததும் நீங்களும், அந்தத் தம்பியும் என்ன வந்து பாருங்க” என்று கூறிவிட்டு, “ஆமா, அந்தத் தம்பி பெயர் என்ன?” என்று கேள்வி எழுப்பினார், கோபால்.

“அவர், பெயர் சதாசிவம், சார்” என்று கோபாலிடம் சதாசிவத்தின் பெயரை அறிமுகம் செய்து வைத்தார், குமார்.

“நல்ல பெயர்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்துக் கொள்ளத் தயாரானார், கோபால்.

“ரொம்ப நன்றிங்க சார்” என்று கூறிவிட்டு. குமார் அழைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

“சதாசிவம், பேங்க் மேனேஜர் கிட்ட பேசிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு நம்மள வந்து பாக்க சொல்லியிருக்கார். அப்பறம், இரண்டு பேருடைய சூரிட்டி தேவைப்படுமா? ஒன்று நான் போட்டுடுவேன். இன்னொருத்தர் சூரிட்டி மட்டும் நீ எப்படியாச்சும் ட்ரை பண்ணு” என்றார், குமார்.

‘எனக்கு வந்த முதல் சோதனையா இது?’ என்று எண்ணிக்கொண்டே… “சரிங்க முதலாளி, நீங்க இங்க வந்து ரொம்ப நேரம் ஆகுதுன்னு நினைக்கிறேன். குடிக்க டீ காபி ஏதாவது போய் வாங்கிட்டு வரட்டுமா?” என்றான், சதாசிவம்.

“ஆமா, சதாசிவம். வெளிய வேலை இருக்குன்னு நெனச்சிகிட்டு இந்த வேலைக்குச் சீக்கிரமா வந்துட்டேன். இப்ப என்னடான்னா லேசா தலை வலிக்குது. சரி போய், காபி மட்டும் வாங்கிட்டு வா நாம ரெண்டு பேருமா குடிக்கலாம்!” என்று கூறிக்கொண்டே தனது பாக்கெட்டில் இருந்து ரூபாய் நோட்டு எடுத்துச் சதாசிவம் கையில் கொடுத்தார், குமார்.

“சரிங்க முதலாளி” என்று கூறிவிட்டு, குமாரை தவறாக எண்ணியதை நினைத்துக் கொண்டே வெளியே மெல்ல புறப்பட்டான், சதாசிவம்.

– தொடரும்…

< பதிமூன்றாவது பகுதி

கமலகண்ணன்

10 Comments

  • Good luck

  • Super kathaiyin nadai arumai next story wating

  • Arumai stores

  • Good story keep it up

  • கவனிக்கப்படவேண்டிய கதை தொடர்ந்து படித்து வருகிறேன். ரவீந்தர் அவர்கள் மிக கண்ணியமாக இக்கதையை கையாண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் அவருக்கு…💐

  • அருமையான பக்கம்

  • அருமையான பக்கம்்நினைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...