லிங்க முத்திரையால் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க பேராசிரியர் மணிவண்ணன் கண்டுபிடிப்பு

மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு இந்தியாவே

அல்லல்பட கூடி நிலையில் லிங்க முத்திரை இந்த யோகப் பயிற்சி மூலமாக உடல் வெப்பத்தை அதிகரித்து ஆக்சிஜன் அளவை உடலில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் தொற்று பரவ காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாக ஒரு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியாமல் திணறலாக இருக்கிறது. இந்த சூழலில் சென்னை ஐஐடியின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை லிங்க முத்திரை எனப்படும் யோக முறையில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என கண்டறிந்து உள்ளது. இந்த முத்திரையைச் செய்யும்போது உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன் இரத்த ஓட்டமும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் வருகிறது. அப்போது வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நுரையீரல் பையுடன் உடல் வெப்பம் அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிக்கும் போதும் உடலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் அதிகரிப்பதை ஐஐடி நிபுணர் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

இதை கண்டறிந்தவர் ஐஐடி பேராசிரியர், டாக்டர் எம்.மணிவண்ணன் அவர்கள். அவர் சின்ன வயதிலிருந்தே சற்று அதிகமான புத்திசாலித்தனமும் திறமையும் ஒருங்கே அமைந்தவர்.

டாக்டர் எம்.மணிவண்ணன் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் ஐ.ஐ.டி மெட்ராஸில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியராக உள்ளார். கேம்பிரிட்ஜில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) முனைவர் பயிற்சி பெற்றார். அவர் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் (எச்.எம்.எஸ்) மாசாச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் (எம்.ஜி.எச்) வருகை விஞ்ஞானியாகவும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) வருகை தரும் ஆசிரியராகவும் இருந்தார்.

எம்ஐடி மற்றும் ஹார்வர்டுக்கு முன்பு, மேரிலாந்தின் தேசிய தரநிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐஎஸ்டி) மற்றொரு முனைவர் பட்டம் பெற்றார். ஜூன் 2005 இல் ஐ.ஐ.டி மெட்ராஸில் சேருவதற்கு முன்பு, கேம்பிரிட்ஜ் எம்.ஏ.யில் எம்ஐடி டச்லாபின் ஸ்பின்-ஆஃப் நிறுவனமான யான்ட்ரிக் இன்க் நிறுவனத்தின் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். 2005 ஆம் ஆண்டில் டாக்டர் மணிவண்ணன் இந்தியாவில் முதல் டச்லாப்பை ஐ.ஐ.டி மெட்ராஸில் அமைத்துள்ளார், இது ஹாப்டிக்ஸ் லேப் என்றும் அழைக்கப்படுகிறது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி) பி.எச்.டி மற்றும் எம்.இ பட்டங்களை பெற்றவர்.

“இந்த லிங்க முத்திரை உடம்பின் சூட்டை அதிகரிப்பதினால், காற்றுப்பையில் தேங்கி இருக்கும் திரவங்களை எல்லாம் வெளியேற்றுகிறது. அதனால் காற்றுப்பை சுத்தமாகிவிடுகிறது. அதனால் ஆக்ஸிஜன் அளவு கூடுகிறது. அந்து அதிகரிப்பதினால் ரத்த ஓட்டம் நன்றாக மாறுகிறது. அதனால் காற்றுப்பையில் உள்ள ஆக்ஸிஜனை உடல் முழுவதும் வேகமாக எடுத்து செல்வதால் உடம்பில் ஆக்ஸிஜன் அளவு அதிக்கரிக்கிறது.” என்று தெரிவித்தார் பேராசிரியர், டாக்டர் எம்.மணிவண்ணன் அவர்கள்.

முத்திரை செய்வதற்கு முன் இருந்த ஆக்சிஜன் அளவை காட்டிலும் முத்திரை செய்த பிறகு ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது தெரியவந்துள்ளது. தெர்மல் இமேஜிங் மற்றும் இசிஜி ஆகிய மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் ஆய்வை மேற்கொண்டு உள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சையை போல, இந்த யோக முத்திரையை செய்யலாம் என்றும் பேராசிரியர் மணிவண்ணன் தெரிவிக்கிறார்.

“கொரானாவில் பாதிக்கப்பட்டவர்கள் காலையும் மாலையும் 20 நிமிடங்கள் இந்த லிங்க முத்திரையை மூன்று அல்லது ஐந்து நாள் செய்தால், அவர்களுடைய SPO2 நார்மலுக்கு வந்திடும் என்பதுதான் எங்களுடைய கண்டுபிடிப்பு.” என்றார் அவர்.

தற்போது மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில் லிங்க முத்திரை மூலம் ஆக்சிஜன் அளவை இயற்கையாகவே அதிகரித்துக் கொள்ளலாம் என்பது கொரோனாவின் தீவிர பாதிப்புகளுக்கு ஒரு இயற்கையின் வெகுமதி.

லிங்க முத்திரை செய்முறை :

இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக காற்று புகாத அளவிற்கு இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும். அப்படி காற்று புகாத அளவிற்கு இணைத்திருந்தால்தான் லிங்க முத்திரை பயன் தரும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய்-க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசத்திற்கு நிவாரணம் தரும்.

பெண்கள்: வலது கை மேற்புறமாக இருக்குமாறு கோத்து, இடது கை கட்டைவிரலை உயர்த்த வேண்டும்.

ஆண்கள்: இடது கை மேல்புறமாக இருக்குமாறு கோத்து, வலது கட்டை விரலை உயர்த்த வேண்டும்.

வயிறு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் கூறப்படுகிறது. ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரையால வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!