உங்களுடைய தினசரி நாளை பிளான் செய்திட மொபைல் ஆப்ஸ்கள்…
உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும்.
கொரோனா காலகட்டத்தில் பலரும் வீட்டில் முடங்கியுள்ளனர். என்னதான் மக்கள் ஒர்க் ப்ரம் ஹோமில் இருந்தாலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கவனித்தாலும் பெரும்பான்மையான நேரம் வீட்டில் சும்மாதான் இருக்கிறார்கள். மேலும் நாட்களை வீணாக கழித்து வருகின்றனர். அந்த வகையில் பின்வரும் மொபைல் ஆப்ஸ்கள் உங்கள் நாளை சூப்பராக மாற்றும். சரி வாருங்கள் ஆப்ஸ்களின் அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Evernote:
உங்கள் மொபைலில் இந்த ஆப்ஸை டவுன்லோடு செய்து வைத்து கொண்டால் அதன் மூலம் இணையத்தில் இருக்கும் படங்கள் மற்றும் பக்கங்களை சேமித்து வைத்து கொள்ள முடியும். மேலும் ஆடியோ ஃபைல்களை சேமிக்கவும் இந்த ஆப்ஸ் உதவும். தேவையான போது இந்த ஆப்ஸில் சேமித்து வைத்ததை உபயோகப்படுத்தவும் முடியும்.
Todoist:
இந்த ஆப்ஸ் உங்கள் தினசரி பணிகளை நினைவூட்டுகிறது. பணிகளைச் செய்ய இது ஒரு காலெண்டர் மற்றும் கடிகாரத்தைக் கொண்டுள்ளது. உங்கள் மீட்டிங்ஸ்கள், நிகழ்வுகள், நினைவூட்டல்கள், அலாரங்களை பயன்படுத்த எளிதானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் எல்லா செயல்பாடுகளுக்கும் தினசரி நினைவூட்டலை வழங்கும் ஆப்ஸாகும். டெய்லி செய்யவேண்டிய பணிகளைச் செய்ய நீங்கள் மறந்துவிட்டால், உங்களுக்கு இந்த ஆப்ஸ் தேவை. இது உங்கள் நினைவூட்டல்களை நிர்வகிக்கித்து நேரம் வரும்போது உங்களுக்குத் தெரிவிக்கும். ரொம்ப சூப்பர்ல…
Sortd for Gmail:
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ஆப்ஸ் உங்களுக்கு கண்டிப்பாக பயனளிக்கும். உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெயிலையும் தரம் பிரித்து உங்களுக்கு வகைப்படுத்தி காண்பிக்கும் என்பதால் எதை படிக்கலாம், எதை தவிர்க்கலாம் என்பதை நீங்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட மெயிலை பிறகு படிக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதை ரிமைண்டரில் போட்டு வைத்தால் உங்களுக்கு சரியான நேரத்தில் இந்த ஆப்ஸ் ஞாபகப்படுத்தும். இந்த ஆப்ஸ் உங்களிடம் இருந்தால் ஜிமெயில் மொத்தமும் இருப்பது போலத்தான்.
Fantastical:
இப்போது இந்த ஆப்ஸ் Apple எக்கோஸிஸ்டம் அமைப்புடன் வரையறுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்பிள் சாதனங்களில் மட்டும் அருமையாக வேலைசெய்கிறது. மீட்டிங்ஸ்களைத் திட்டமிட, மீட்டிங்ஸ்களை ஒழுங்கமைக்க, என்பன போன்ற பல பிளான்களுக்கு இந்த ஆப்ஸ் உதவி செய்கின்றது. மேலும் இது வீடியோ கான்பிரன்ஸ் கால்களுக்கான இணைப்புகளைக் கூட சப்போர்ட் செய்கிறது. நீங்கள் எங்காவது வெளியே போக போகிறீர்கள் என்றால் அதற்கு உங்கள் இடத்தில் உள்ள வானிலை அறிக்கைகளையும் இது தொகுத்து வழங்குகிறது.
Any.do:
அனைத்து தளங்களிலும் பரவலாகக் கிடைக்கும் ஒரு அருமையான ஆப்ஸ் தான் இந்த Any.do, ஆப்ஸ் மூலமாக கேலன்டர், ரிமைன்டர், லிஸ்ட் மற்றும் நோட்ஸ் ஆகியவற்றை கையாள முடியும். உங்கள் தினசரி வேலைகளை சரியாக தொகுத்து உங்களுக்கு எப்போதெல்லாம் நினைவூட்ட வேண்டுமோ அப்போதெல்லாம் சரியான நேரத்தில் துல்லியமாக நினைவூட்டிடும் இந்த ஆப்ஸ்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்பது எந்த அளவுக்கு ஒவ்வொரு நபருக்கும் தேவை என்பது குறித்து விவரிக்க தேவையில்லை. நம் வாழ்வில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தற்போது ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களின் தேவைகள் அதிகமாகியுள்ளன. அந்த வகையில் மேற்சொன்ன ஆப்ஸ்கள் பல வழிகளில் மக்களுக்கு பலனளிக்கும்.