கண்டதையும் தின்று கெடுத்து கொள்ளும் குழந்தைகளை மாற்ற புதிய கேம் ஆப்!
குழந்தைகளின் அடத்தாலும், விருப்பத்தை நிறைவேற்றவும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற சிப்ஸ், பிஸ்கட்கள் என வாங்கி தந்து விடுகின்றனர்.
சென்னையை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று உருவாகியுள்ள கேம் ஆப் ஒன்று, குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது எப்படி, உடலை ஃபிட்டாக வைத்து கொள்ளவது எப்படி என்று கற்று தரும் வகையில் வடிவைமைப்பட்டுள்ளது. முன்பெல்லாம் கடலை மிட்டாய், முறுக்கு உள்ளிட்ட வீட்டில் செய்யப்படும் பல ஆரோக்கியமான தின்பண்டங்களே வீடுகளை ஆக்கிரமித்திருக்கும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அந்த தின்பண்டங்களை தின்று மகிழ்வார்கள். காலம் செல்ல செல்ல வீட்டில் செய்யப்பட்ட தின்பண்டங்கள் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில், கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விறக்கப்பட்டன.
ஆனால் தற்போது டிவி சேனல்களில் வரும் விளம்பரங்களில் உள்ள தின்பண்டங்கள் (பிஸ்கட்கள், சாக்லேட்கள்), உணவு பண்டங்கள் தான் நம் வீட்டில் நிறைந்திருக்கின்றன. குழந்தைகளின் அடத்தாலும், விருப்பத்தை நிறைவேற்றவும் பெரும்பாலான பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற சிப்ஸ், பிஸ்கட்கள் என வாங்கி தந்து விடுகின்றனர்.
இந்நிலையில் மேற்சொன்ன இந்த App-ஐ ஃபிரெண்ட்ஸ் லேர்ன்(FriendsLearn) என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சிறப்பு App ஏன் உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஃபிரெண்ட்ஸ் லேர்ன் நிறுவனத்தின் நிறுவனர் பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் காரணம் ஒன்றை கூறியுள்ளார். குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள் விளம்பரங்களால் பாதிக்கப்படுவதை கண்ட பின், இது போன்ற App ஒன்றைஉருவாக்க எண்ணம் ஏற்பட்டதாக கூறி உள்ளார்.
குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறிதும் பயன்படாத, அதே சமயம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் தின்பண்டங்களை குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் கவலையடைந்த பார்கவ், இதனை குழந்தைகள் வழியிலேயே சென்று மாற்ற எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்ததாக கூறினார்.
அதனையொட்டி உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் எழும் உடல்நல அபாயங்களை சமாளிக்க குழந்தைகளுக்கு உதவும் வகையில், ஆரோக்கியமான உணவு தேர்வுகள் அடங்கிய ஃபூயா(Fooya) என்ற குழந்தை உணவு மொபைல் கேம் ஆப்பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக இந்த App-ஐ உருவாக்க தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
முக்கியமான விவகாரமான குழந்தைகளின் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கத்தினை, ஒரு வேடிக்கையான முறையில் மாற்ற விரும்பினோம். ஃபிரெண்ட்ஸ் லேர்ன் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு ஆர் & டி அலுவலகத்தைக் கொண்டுள்ளது. 104 குழந்தைகளிடம் செய்யப்பட்ட சோதனை முடிவுகள், 10 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளுக்காக இந்த App-ஐ வெற்றிகரமாக எவ்வாறு அறிமுகப்படுத்த முடிந்தது என்பதை காட்டியதாக பார்கவ் கூறி உள்ளார்.
பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை Fooya App எவ்வாறு குழந்தைகளுக்கு கற்பிக்கும் என்பது பற்றி கூறிய அவர், குழந்தைகள் சலிப்படைந்து விட கூடாது என்பதை உறுதிப்படுத்த தேவையான தலைப்புகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேடிக்கையான வழியை அறிமுகப்படுத்த வேண்டியது இங்கே அவசியமாகிறது என்றார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்ததாகவும், தாங்கள் மேற்கொண்ட ஆய்வு கண்டுபிடிப்புகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக கூறிய அவர், ஜே.எம்.ஐ.ஆர் எம்ஹெல்த் மற்றும் யுஹெல்த் இதழில் வெளிவந்த தங்களின் ஆய்வு, 20 நிமிட App குழந்தைகளுக்கு எவ்வாறு சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறது என கூறினார்.
குழந்தைகளை கவருவதற்காக இந்த App-ல் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு எதிராக போராட அவதார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு நல்ல உடல் வடிவமைப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் இதன் அடுத்தடுத்த ஸ்டேஜ்களை அன்லாக் செய்ய காயின்களை பெறும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த App குழந்தைகளுக்கு சொல்ல வரும் மெசேஜ் என்னவென்றால், ஒருவர் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், அவர்களால் உற்சாகமாக இருந்து நிறைய சாதிக்க முடியும். அதுவே அதிக கலோரிகள் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள், தின்பண்டங்களை சாப்பிட்டால் அவர்கள் உற்சாகமின்றி சோர்வாக இருப்பார்கள் என்பதே.