கஜா புயலால் கலங்கி நின்ற மாணவியை மருத்துவராக்கிய சிவகார்த்திகேயன்!
கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த பூக்கொல்லை மாணவி சகானா நீட் தேர்வில் வெற்றிப்பெற்று மருத்துவராகி இருக்கிறார். அதற்கு காரணம் சிவகார்த்திகேயன். தன் சொந்த செலவில் நீட் பயிற்சியளித்து சகானாவை இவ்வருடம் வெல்ல வைத்திருக்கிறார்.
அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார். இதனையறிந்த சிவகார்த்திகேயன் கடைசி வரைக்கும் போராடு உனக்கு நான் இருக்கிறேன் என ஊக்கம் அளித்து சகானாவை நீட் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அந்த மாணவி குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தகவல் பரவியதையடுத்து அவரது குடிசை வீட்டிற்கு, தஞ்சாவூர் ஆட்சித்தலைவர் அண்ணாதுரை, சஹானாவின் வீட்டுக்கு சோலார் மூலம் மின் விளக்கு அமைத்துக் கொடுத்ததோடு, தன் சொந்தப் பணத்தில் பத்தாயிரத்தைக் கொடுத்து உதவினார்.
சிவகார்த்திகேயனின் உதவி மட்டுமில்லாது அவரது ஊக்கம் சகானாவை மருத்துவராக்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு 273 மதிப்பெண் பெற்று 120 இடத்தை பிடித்த சகானாவுக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்துள்ளது.