ஸ்வீடன் விருது பெறும் திருவண்ணாமலை மாணவிக்கு முதல்வர் பாராட்டு!
திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கர் எஸ்கேபி இண்டர்நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவருகிறார். இவர் காற்று மாசினை குறைக்க கரித்துண்டுக்கு பதில் சூரிய மின்சக்தியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்துள்ளார்.
இப்படைப்பு ஸ்வீடனில் நடந்த Children’s Climate Prize போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. ஸ்வீடனின் துணைப் பிரதமா் இசபெல்லா கலந்து கொள்ளும் இணையவழி நிகழ்வில், வினிஷாவுக்கு விருது வழங்கப்படுகிறது. முன்னதாக வினிஷா, தானாகவே இயங்கும் மின்விசிறியைக் கண்டடுபிடித்தார். இதற்காக இவருக்கு டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் இக்னைட் விருதும் சிறந்த பெண் கண்டுபிடிப்பாளா் பிரிவில், டாக்டா் பிரதீப் பி தேவனூா் கண்டுபிடிப்பாளா் விருதும் வழங்கப்பட்டது.
இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!
மாணவி வினிஷாவை பாராட்டியுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் பள்ளி மாணவி வினிஷா சுற்றுச் சூழலில் சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார். இன்று ஸ்வீடன் துணைப் பிரதமர் அந்த விருதினையும் 9 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் காணொளி மூலம் அளிக்கிறார். தமிழகத்துக்குப் பெருமைச் சேர்த்திருக்கும் வினிஷாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
இதேபோல் எஸ்கேபி இண்டர்நேஷனல் பள்ளியில் தலைவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வினிஷாவை பாராட்டியுள்ளார். அதில், “எங்கள் பள்ளி மாணவி வினிஷா சுற்றுச் சூழலில் சர்வதேச விருதினைப் பெற்றுள்ளார். இன்று ஸ்வீடன் துணைப் பிரதமர் அந்த விருதினையும் 9 லட்ச ரூபாய் பரிசுத் தொகையையும் காணொளி மூலம் அளிக்கிறார். தமிழகத்துக்குப் பெருமைச் சேர்த்திருக்கும் வினிஷாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.