வரலாற்றில் இன்று – 20.06.2020 – விக்ரம் சேத்
இந்திய எழுத்தாளர் விக்ரம் சேத் 1952ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பை மேப்பிங்ஸ் (Mappings) என்ற பெயரில் வெளியிட்டார். இவர் ‘ஃபிரம் ஹெவன் லேக்’,’தி கோல்டன் கேட்’,’எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட நாவல்கள்,’பீஸ்ட்லி டேல்ஸ்’,’தி ஃப்ராக் அண்ட் தி நைட்டிங்கேல்’ உள்ளிட்ட கவிதைகள், பயண நூல்கள் என பல துறைகளில் எழுதியுள்ளார்.
தாமஸ் குக் பயண நூல் விருது, காமன்வெல்த் கவிதை விருது (ஆசியா), சாகித்ய அகாடமி (ஆங்கிலம்), ஐரிஷ் டைம்ஸ் இன்டர்நேஷனல் ஃபிக்ஷன் பரிசு, பத்மஸ்ரீ போன்ற ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
சர்வதேச அகதிகள் தினம்
மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப்போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
முக்கிய நிகழ்வுகள்
2003ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி விக்கிமீடியா (wikimedia) அமைப்பு உருவானது.
1990ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி யுரெக்கா (5261 Eureka) என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.