வருங்கால உலகம் – ஆதிபிரபா
நாளை உலகம் இல்லை
என்றால் என்னவாகும்..,
ஒருவேளை
நாளை உலகம் இல்லை
என்றால் என்னவாகும்..,
அழிந்த உலகத்தில்
ஆத்மாக்கள் பல அல்லாடும்.,
சொத்து சேர்த்தவன் போனதே
என்று புலம்புவான்..,
சேர்க்காதவனோ நல்லவேளை
என்று நினைப்பான்.,
பெண்களெல்லாம் அடுப்படி வேலை
இனிமேல் இல்லை
என்று நிம்மதி கொள்வார்கள்.,
புத்தக மூட்டை சுமந்த
பிள்ளைகளெல்லாம்
இனி மூடி சுமக்க வேண்டிய
கட்டாயம் இல்லை
எனும் நிலைக்கு வரும்.,
ஒருவேளை நாளை உலகம்
இல்லை என்றால்
எப்படி இருக்கும்..,
தன்னலமற்ற நினைவுகள் வருமா
இல்லை சுயநலமே
அங்கும் பிரதானமாக இருக்குமா..,
கோடிகணக்கில் சேர்த்து
வைத்தவனின் ஓலங்களும்
புலம்பல்களும் தவிப்புகளும்
ஆன்மாவாய் திரியும் போது
என்ன செய்வான்..,
ஒருவேளை நாளை உலகம்
அழியாமல் போனால்
அதே பரபரப்போடு
இது போலவே நாட்கள்
நகர்ந்து விடும்..,
பெண்கள் பழையபடி
அடுப்படியில் கடமையாற்ற..,
ஆண்களோ சொத்து குவிக்கவா.,
இல்லை டாஸ்மாக்கில் நிற்கவா.,
என்ற யோசனையில்..,
குழந்தைகள் புத்தக மூட்டை
சுமக்கவா இல்லை
காணொளி மூலம்
படிப்பை தொடரவா என்றும்.,
லாக்டவுன் முடியுமா முடியாதா
என்ற சர்ச்சைகளும்.,
எத்தனை பேருக்கு கோரானா
வரும் ஆனா வராது
என்ற ஆராய்ச்சியிலும்
மூழ்கி போவார்கள்..,
ஒருவேளை நாளை உலகம்
அழிந்தாலும் வாழ்ந்தாலும்
மீண்டும் மனிதர்கள் அழிவை
நோக்கித்தான் செல்லப்
போகிறார்கள்..,
(ஆசையே அழிவிற்கு காரணம்)
இதில் அழிந்தால் என்ன.,
அழியாமல் போனால் என்ன.,
- ஆதிபிரபா....