ரமலான் பெருநாள் வாழ்த்துகள்

ஏகனாய் மனிதருள் அனேகனாய் கலந்த

படைத்தவனின் அகம் மகிழும் திருநாள்.

. விடிகின்ற நாட்களில் விடைத் தேடும்

வினாக்களை தனக்குள் ஒலிப்பிக்கும் பெருநாள்

.. ஐந்து முறையில் தொழுகை செய்யும்

அடியவர்களின் வாழ்வில் அனைத்தும் ஆனவன்.

. கையேந்தி வேண்டும் பிள்ளைகளின் பிழைகளை மறந்துக் காக்கின்ற பிறைநிலா வடிவானவன்.

. இல்லையென சொல் இல்லாதாக்கி

ஈகையின் வழியில் வாழ்வோர் வாழ்வை வசந்தமாக்கியவ

ன் அன்பு ஒன்றே மனிதத்தைக் காக்கின்ற அரணென

கற்பிக்கும் மார்க்கத்தின் தலைவனவன்.

. இறைவனின் வேண்டியவர்க்கும்

இறையருள் வேண்டுவோர்க்கும்

ஈகையின் புனிதத்தை இவ்வுலகிற்கு உணர்த்திய

ரமலான் பெருநாள் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!