சென்னையில் கடுமையான பனிமூட்டம்

சென்னை: கடுமை​யான பனிமூட்டம் நில​விய​தால் சென்னை விமான நிலை​யத்​தில் 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான ஓடு​பாதை தெளி​வாக தெரியவில்லை.

இதனால் மும்பை, கோலாலம்​பூர், புனே, பெங்​களூரு, ஹைத​ரா​பாத், துபாயிலிருந்து வந்த 7 விமானங்​கள் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்​துக் கொண்டு இருந்​தன.

சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள், அந்த விமானங்​களை பெங்​களூரு, கோவை, திருப்​பதி ஆகிய விமான நிலை​யங்​களுக்கு திருப்பி அனுப்​பினர்.

அதே​போல் பெங்​களூர், ஹைத​ரா​பாத், மும்​பை, கோவை, திரு​வனந்​த​புரம், இலங்கை உள்​ளிட்ட 12 விமானங்​கள் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாமல் நீண்ட நேரம் வானில் வட்​டமடித்த பின்​னர் தாமத​மாக தரை​யிறங்​கின.

சென்​னையி​லிருந்து பெங்​களூர், ஹைத​ரா​பாத், மும்​பை, அந்​த​மான், திருச்​சி, டெல்​லி, துர்​காபூர், புனே, கொல்​கத்​தா, கோவை, துபாய், இலங்கை உள்​ளிட்ட இடங்​களுக்கு புறப்​படும் 21 விமானங்​கள் கடுமை​யான பனிமூட்டம் காரண​மாக தாமத​மாக புறப்​பட்​டுச் சென்​றன.

சென்னை விமான நிலை​யத்​தில் மூடு​பனி காரண​மாக மொத்​த​மாக 40 விமானங்​களின் சேவை பாதிக்​கப்​பட்​டது. இதனால், பயணி​கள் அவதிக்​குள்​ளாகினர்.

காலை 9 மணிக்கு மேல் பனிமூட்டம் குறைந்​த​தால், விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்​பியது. பெங்​களூரு, கோவை, திருப்​பதி உள்​ளிட்ட விமான நிலை​யங்​களுக்கு திருப்பி விடப்​பட்ட வி​மானங்​கள் ஒன்​றன்​ பின்​ ஒன்​றாக சென்​னை​யில்​ தரை​யிறங்​கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!