நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா

நேற்று (28-5-2025) மாலை தாம்பரம் அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட் டு விழாவில் கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் “என்ற கவிதை நூல் வெளியிடப் பட்டது.

திரு. எஸ். ஜெகதீசன் மேனாள் மா வட்ட தலைவர் TNRGEA அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் “என்ற கவிதை நூலினை புலவர் திரு.வெ. பெருமாள் சாமி அவர்கள் வெளியிட, முதல் பிரதியினை திரு.ஆர். அனந்த கிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். திரு. ஜோதி பிரகாஷ் மேனாள் மாநிலப் பொருளாளர் TNRGEA அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
திரு.வெ திருநாவுக்கரசு அவர்கள் நூல் அறிமுக உரையாற்றினர்

. திருவாளர்கள் ரெத்தினராஜ்,நா. இளங்கோ ,முத்துலிங்கம், அலெக்சாண்டர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் திரு. வெ. பெருமாள் சாமி மற்றும் திரு. ஆர். ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்

.கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்கள் ஏற்புரையும் மற்றும் நன்றியுரை யும் ஆற்றினார்.

விழா முடிவில் அனைவருக்கும் நூலாசிரியர் சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.
நூலாசிரியர் அனைவருக்கும் நன்றி கூறி வழி அனுப்பி வைத்தார்.


umakanthan

