வரலாற்றில் இன்று – 21.06.2020 – உலக தந்தையர் தினம்

அமெரிக்காவை சேர்ந்த சோனாரா ஸ்மார்ட் டோட் (Sonora Smart Dodd) என்ற பெண் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் என்பவருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாய் இறந்துவிட்டார். அதனால் இவரின் தந்தையே கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார்.

இதன் காரணமாக தாய்மார்களுக்கு ஒரு தினம் என்பது போல, தந்தையருக்கும் ஒரு தினம் தேவை என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. இவரது முயற்சியால் தந்தைக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1910ஆம் ஆண்டில் ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக இசை தினம்

இசை என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.

வரும் தலைமுறையினருக்கு இசையில் ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

உலக யோகா தினம்

உலக யோகா தினம் (International Yoga Day) ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது.

யோகா என்னும் பழமையான கலைப்பயிற்சி மனிதர்களின் வாழ்வில் மனஅமைதியை ஏற்படுத்தி உடலை என்றும் ஆரோக்கியமாக பாதுகாக்கின்றது.

ஜீன் பால் சார்த்

பிரான்ஸ் நாட்டின் தத்துவமேதை ஜீன் பால் சார்லஸ் அய்மார்டு சார்த் (Jean Paul Charles Aymard Sartre) 1905ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி பாரீஸில் பிறந்தார்.

இவர் பிரான்ஸ் ராணுவத்தில் வானிலையாளராக பணிபுரிந்தபோது ஜெர்மன் படையினரிடம் பிடிபட்டு 9 மாதங்கள் போர் கைதியாக சிறையில் இருந்தார். அங்குதான் முதன்முதலாக கிறிஸ்துமஸ் பற்றி ஒரு நாடகம் எழுதினார்.

பின்பு இருத்தலியல் என்பது ஒரு மனிதநேயம் (Existentialism is a Humanism) என்ற தனது தத்துவக் கோட்பாட்டை 1946ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

இவரது அற்புத இலக்கியப் படைப்புகளுக்காக 1964ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

சிறந்த தத்துவமேதை, நாடக ஆசிரியர், அரசியல் ஆர்வலர், இலக்கிய விமர்சகர் என பன்முகத்திறன் கொண்ட ஜீன் பால் சார்த் தனது 1980ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1948ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ராஜாஜி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றார்.

2001ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தென்னிந்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மறைந்தார்.

2002ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!